Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் அக்டோபர் 02 முதல் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம் ஆரம்பிக்குது...
கன்னி ராசியில் புதன் அக்டோபர் 02 ஆம் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். இப்படி கன்னி வக்ர நிவர்த்தியாவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு அதிக நற்பலன்கள் கிடைக்கும்.
ஜோதிடத்தில், ஒரு கிரகம் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் போது, அது அனைத்து ராசிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் நவகிரகங்களில் புத்திகாரகன், இளவரசன் புதன். இந்த புதன் கன்னி ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். பொதுவாக கிரகங்கள் வக்ர நிலையில் இருக்கும் போது, அதன் நற்பலன்கள் தாமதமாவதோடு, கெடுபலன்களை அதிகம் பெற நேரிடும்.

இந்நிலையில் கன்னி ராசியில் புதன் அக்டோபர் 02 ஆம் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். இப்படி கன்னி வக்ர நிவர்த்தியாவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு அதிக நற்பலன்கள் கிடைக்கும். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

சிம்மம்
சிம்ம ராசியின் 2 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தியடைவதால், திடீர் லாபம் கிடைக்கும். சிக்கிய பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. வணிகத்தில் புதிய மற்றும் பெரிய ஒப்பந்தம் கிடைக்கும். கூட்டு தொழில் தொடங்க இது சிறந்த காலம். பேச்சு தொடர்பான வேலை மற்றும் மார்கெட்டிங் துறையில் இருப்பவர்களுக்கு இக்காலம் மிகவும் நல்ல காலம் என்பதை நிரூபிக்கும். சூரியனுக்கும் புதனுக்கும் நட்புறவு உள்ளதால், இந்த வக்ர நிவர்த்தி சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் காலமாக இருக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 11 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தியடைகிறார். இது வருமானம் மற்றும் லாபத்தின் வீடு. எனவே இக்காலத்தில் வருமானத்தில் அதிகரிப்பைக் காணலாம். வாழ்க்கைத் துணையுடனான உறவில் இனிமை அதிகரிக்கும். குடும்ப சூழ்நிலை நன்றாக இருக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சி நடைபெறும். புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். நிலுவையில் உள்ள பணிகள் இக்காலத்தில் வெற்றிகரமாக முடிக்கப்படும். பங்குச் சந்தையில் நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் வணிகம் புதன் மற்றும் செவ்வாய் தொடர்புடையதாக இருந்தால், நீங்கள் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள்.

தனுசு
தனுசு ராசியின் 10 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இக்காலத்தில் புதிய வேலை வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்கள், பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வைப் பெறுவார்கள். வியாபாரம் விரிவடையும் வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பணியிடத்தில் உங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைவீர்கள். இதனால் நல்ல பாராட்டையும் பெறுவீர்கள். மேலும் உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் ஆதரவும் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications