Latest Updates
-
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்
கன்னியில் வக்ர நிவர்த்தியாகும் புதனால் அடுத்த 22 நாட்கள் 12 ராசிக்கும் எப்படி இருக்கப்போகுது தெரியுமா?
2022 அக்டோபர் 02 ஆம் தேதி புதன் வக்ர நிவர்த்தியடைகிறார். இதனால் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலனும், சிலருக்கு கெட்ட பலனும் கிடைக்கலாம்.
நவகிரகங்களிலேயே மிகச்சிறிய மற்றும் வேகமாக நகரக்கூடிய கிரகம் என்றால் அது புதன். வேத ஜோதிடத்தில், இந்த புதன் பேச்சு, வணிகம், புத்தி மற்றும் தொழில் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறது. இந்த புதன் 2022 செப்டம்பர் 10 ஆம் தேதி கன்னி ராசியில் வக்ர நிலையில் பயணிக்க ஆரம்பித்தார். புதன் வக்ரமாகும் போது, மோதல் மற்றும் தகவல்தொடர்பு குழப்பம், தவறான பேச்சு, ஊடகங்களில் நிறைய சலசலப்புகள், திடீர் ஏற்ற தாழ்வுகள் போன்ற சில சாதகமற்ற சூழ்நிலைகளை உருவாக்கும்.

இந்நிலையில் 2022 அக்டோபர் 02 ஆம் தேதி புதன் வக்ர நிவர்த்தியடைகிறார். இதனால் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலனும், சிலருக்கு கெட்ட பலனும் கிடைக்கலாம். இப்போது கன்னி ராசியில் புதன் வக்ர நிவர்த்தியடைவதால் 12 ராசிக்காரர்களும் பெறும் பலன்கள் என்னவென்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 6 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தியடைகிறார். இதனால் தேவையில்லாத பயத்தால் சிரமப்படுவீர்கள். தேவையற்ற சண்டைகள் மற்றும் வாக்குவாதங்களைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் சிரமங்களை சந்திக்க நேரிடும். செலவுகள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

ரிஷபம்
ரிஷப ராசியின் 5 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தியடைகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். பெற்றோர் ஆதரவாக இருப்பார்கள். ஆடைகளுக்காக அதிக செலவுகளை செய்வீர்கள். சொத்துக்களால் வருமானம் உண்டாகும். பணியில் உற்சாகத்தைக் காண்பீர்கள். குடும்பத்தில் பிரச்சனைகள் வரலாம். உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.

மிதுனம்
மிதுன ராசியின் 4 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தியடைகிறார். இதனால் இக்காலத்தில் கோபத்தைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. வேலையில் சிரமங்களை சந்திப்பீர்கள். பணியிடத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். மருத்துவ செலவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

கடகம்
கடக ராசியின் 3 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தியடைகிறார். இதனால் மன நிம்மதி கிடைக்கும். குடும்பத்தில் பொருள் வசதிகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வருமானம் குறையும் மற்றும் செலவுகள் அதிகரிக்கும். பழைய நண்பர்களை இக்காலத்தில் சந்திப்பீர்கள்.

சிம்மம்
சிம்ம ராசியின் 2 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தியடைகிறார். இதனால் வேலையில் சிரமங்களை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் வேலையில் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். மன கஷ்டங்கள் ஏற்படும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. வேலையில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும்.

கன்னி
கன்னி ராசியின் முதல் வீட்டில் புதன் வக்ர நிவர்த்தியடைகிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் மனம் அலைக்கழிக்கப்படும். இந்த காலகட்டத்தில் கோபம் மற்றும் வாக்குவாதங்களை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. பழைய நண்பரை சந்திக்கும் வாய்ப்புள்ளது. பயண மேற்கொள்ள வாய்ப்புக்கள் அமையும். ஆடைகளின் மீதான ஆவல் அதிகரிக்கும். வேலை அதிகமாக இருக்கும். வருமானம் குறைவாகவே இருக்கும்.

துலாம்
துலாம் ராசியின் 12 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தியடைகிறார். இதனால் இக்காலத்தில் துலாம் ராசிக்காரர்கள் தன்னம்பிக்கையுடன் இருப்பார்கள். பணியில் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது. குறிப்பாக இடமாற்றம் ஏற்படலாம். செலவுகள் அதிகரிக்கும். பொறுமையிழந்து இருப்பீர்கள். சிலருக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் அமையும். தாயிடம் இருந்து பணம் கிடைக்கும். தொலை தூர பயணத்திற்கு வாய்ப்புள்ளது.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 11 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தியடைகிறார். எனவே விருச்சிக ராசிக்காரர்கள் இக்காலத்தில் மன அமைதியுடன் இருக்க முயற்சிப்பார்கள். குடும்பத்தில் சில சடங்குகளை செய்ய வாய்ப்புள்ளது. ஆடைகளுக்கான செலவுகள் அதிகரிக்கும். சோம்பேறித்தனம் உங்களை ஆட்டிப்படைக்கும். குடும்ப வாழ்க்கை கடினமாக இருக்கலாம். மனதில் விரக்தியும், அதிருப்தியும் உண்டாகலாம். உங்கள் வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் ஏற்படலாம். குழந்தைகளால் நல்ல செய்திகளைப் பெறுவீர்கள்.

தனுசு
தனுசு ராசியின் 10 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தியடைகிறார். இதனால் செல்வம் பெருகும். தொழிலை கவனமாக கவனித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் சில தடைகள் வரலாம். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் கொடுக்கப்படும். வேலை அதிகமாக இருக்கும். உடன்பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். குடும்ப பிரச்சனைகள் உங்களை தொந்தரவு செய்யக்கூடும். இருப்பினும் உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆதரவைப் பெறுவீர்கள்.

மகரம்
மகர ராசியின் 9 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தியடைகிறார். இதனால் ஆன்மீக விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். வேலை அதிகமாக இருக்கும். தொழிலை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புள்ளது. வருமானம் அதிகரிக்கும். தாயின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பேசும் போது உங்கள் பேச்சில் மென்மையைக் கடைபிடியுங்கள். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

கும்பம்
கும்ப ராசியின் 8 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இக்காலத்தில் சற்று அதிக சோம்பேறித்தனத்தை உணர்வீர்கள். பொறுமையைக் கடைப்பிடித்தால் அனைத்து விஷயங்களும் நன்றாக நடக்கும். தந்தையின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வருமானம் குறைந்து செலவுகள் அதிகரிக்கும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். மூதாதையர் சொத்துக்களால் நல்ல ஆதாயத்தைப் பெறுவீர்கள். மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள்.

மீனம்
மீன ராசியின் 7 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தியடைகிறார். இதனால் இக்காலத்தில் வேலையில் முன்னேற்றம் ஏற்படும். பயணங்களுக்கு அதிக செலவுகளை செய்வீர்கள். குடும்பத்தை விட்டு விலகி இருக்க நேரிடும். வருமானம் அதிகரிக்கும். இடமாற்றத்திற்கு வாய்ப்புள்ளது. நம்பிக்கை நிறைந்திருப்பீர்கள். பணியிடத்தில் சூழல் சாதகமாக இருக்கும். தந்தையின் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை காட்டுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications