Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
ரிஷபத்தில் புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது...
புதன் ரிஷப ராசியில் வக்ர நிவர்த்தி அடைவதால் 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
நவகிரகங்களில் புத்தி, வணிகம், பேச்சு, பகுத்தறியும் திறன், தகவல் தொடர்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் புதன். இத்தகைய புதன் நடுநிலை கிரகம். அதாவது புதன் சுப கிரகங்களுடன் இணைந்திருந்தால், அது நற்பலன்களையும், அசுப கிரகங்களுடன் இணைந்திருந்தால், அது அசுப பலன்களையும் தருவார். இத்தகைய புதன் ரிஷப ராசியில் வக்ர நிலையில் பயணித்து வந்தார். இந்நிலையில் புதன் ஜூன் 03 ஆம் தேதி அதாவது இன்று மதியம் 1.29 மணிக்கு ரிஷப ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் பயணிக்கிறார்.

யாருடைய ஜாதகத்தில் புதன் சாதகமான நிலையில் இருக்கிறார்களோ, அந்நபர் புத்திசாலித்தனமாகவும், தர்க்க ரீதியாகவும் முடிவுகளை எடுப்பார். புதன் ரிஷப ராசியில் வக்ர நிவர்த்தி அடைவதால் 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 2 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இக்காலத்தில் உங்கள் பேச்சினால் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். உங்களின் இனிமையான பேச்சினால் உங்களைச் சுற்றியுள்ளவர்களை ஈர்ப்பீர்கள். மூதாதையர் சொத்துக்களில் தகராறு ஏற்பட்டால், இந்த நேரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். நிதி நிலைமை சூப்பராக இருக்கும். மாணவர்களுக்கு இக்காலமா சாதகமாக இருக்கும். உறவுகளைப் பொறுத்தவரை, குழப்பம் மற்றும் கருத்து வேறுபாடுகளை சரிசெய்வதற்கான ஒரு நல்ல நேரம்.

ரிஷபம்
ரிஷப ராசியின் முதல் வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் நல்ல நிதி பலன்கள் கிடைக்கும். வணிகர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். இருப்பினும் முடிவெடுக்கும் போது எச்சரிக்கையுடன் இருங்கள். உறவுகளைப் பொறுத்தவரை, அன்பு நிறைந்திருக்கும். திருமணமான தம்பதிகளுக்கு இடையே உள்ள அனைத்து பிரச்சனைகள் மற்றும் தவறான புரிதல்கள் நீங்கி, உறவு வலுவாகும். மாணவர்களுக்கு சாதகமான காலம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சிறப்பாக இருக்கும்.

சிம்மம்
சிம்ம ராசியின் 10 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இக்காலத்தில் பணியிடத்தில் நல்ல முன்னேற்றத்தைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. அதிகமாக உணர்ச்சிவசப்படுவீர்கள். உறவுகளில் நல்ல ஈர்ப்பை கொண்டு வரும். உங்களின் அறிவார்ந்த நிலை உயரும். நிதி நிலைமை உயரும்.

மகரம்
மகர ராசியின் 5 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் உங்களின் படைப்பாற்றல் மேம்படும். ஆனால் அதற்கு நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். இக்காலத்தில் அதிக புத்திசாலித்தனமாக நடந்து கொள்வதை உணர்வீர்கள். இது உங்களுக்கு அதிகளவிலான நற்பலன்களைத் தரும். உயர் கல்வி படிக்க விரும்பும் மாணவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். உறவுகளைப் பொறுத்தவரை, திருமணமாகாதவர்கள் தங்கள் வாழ்க்கையைத் துணையை சந்திப்பார்கள்.

கும்பம்
கும்ப ராசியின் 4 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இக்காலத்தில் உங்களின் செயல்களை நன்கு அறிந்து செய்யுங்கள். உங்கள் மனதில் எழும் சந்தேகங்களை தயக்கம் கொள்ளாமல் கேட்பதன் மூலம் மோதல்களை தவிர்க்கலாம். உங்கள் நுண்ணறிவு எதிர்காலத்தில் உங்கள் செயல்களைத் திட்டமிட உதவும். தொழில் ரீதியாக, திடீர் பண ஆதாயங்களும், தொழில் வளர்ச்சியும் ஏற்படும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, சூழ்நிலை இனிமையாக இருக்கும். பணியிடத்திலும் இனிமையான சூழ்நிலை இருக்கும். இக்காலத்தில் கடினமாக உழைத்தால், வெற்றி பெறுவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது.

மீனம்
மீன ராசியின் 3 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் உங்கள் வாழ்வில் உள்ள தடைகளை நீக்க தந்திரமாக முயற்சி செய்யுங்கள். இக்காலத்தில் உங்களின் தகவல் தொடர்பு திறன் மேம்படும். இதனால் நற்பலன்களைப் பெறுவீர்கள். நிதி ரீதியாக, அதிக பணம் சம்பாதிப்பதற்கான நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். மேலும் குறுகிய தூர பயணத்தை மேற்கொள்ளவும் வாய்ப்புள்ளது.



Click it and Unblock the Notifications