Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை குறையும், நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் இருப்பீங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு நல்ல செய்தி தேடிவருமாம் -
குருபெயர்ச்சியால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 4 ராசிகளுக்கு கூரையை பிச்சுட்டு அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம் -
10 வரமிளகாயும், சின்ன வெங்காயமும் இருந்தா இந்த கர்நாடகா கெம்பு சட்னியை அரைங்க - சுருக்குனு சூப்பரா இருக்கும் -
பாபா வாங்காவின் கணிப்பு படி 2026-ன் பிற்பகுதியில் உலகில் என்னென்ன சம்பவங்கள் நடக்கப்போகுது தெரியுமா? -
டெல்லியை ஆண்ட முதல் சுல்தான் யார்? அவர் எந்த வம்சத்தை சேர்ந்தவர் தெரியுமா? -
ஆந்திராவின் அட்டகாசமான வெஜ் புலாவ் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - தாறுமாறா இருக்கும் -
ராகு சொந்த நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் முடிவுக்கு வரப்போகுதாம் -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ள பெண் மனைவியாக கிடைத்த ஆண்கள் உலகிலேயே அதிர்ஷ்டசாலியாம் -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. ஒரே மாதத்தில் உடல் எடையில் நல்ல மாற்றத்தை பாப்பீங்க..
புதன் வக்ர நிலையில் சூரியனுக்கு அருகில் செல்வதால் அதிகம் கஷ்டப்படப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
நவகிரகங்களில் புதன் ஏற்கனவே மகர ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். இத்தகைய புதன் ஜனவரி 17 ஆம் தேதி மகர ராசியில் 07.07 மணிக்கு சூரியனுக்கு அருகில் எரியும் நிலையில் பயணிக்கிறார்.
நவகிரகங்களில் ஒருவரது புத்தி, அறிவு, கருத்துப் பரிமாற்றம் போன்றவற்றைக் குறிக்கும் புதன் ஏற்கனவே மகர ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். இத்தகைய புதன் ஜனவரி 17 ஆம் தேதி மகர ராசியில் 07.07 மணிக்கு சூரியனுக்கு அருகில் எரியும் நிலையில் பயணிக்கிறார். நவகிரகங்களில் ஒரே நேரத்தில் வக்ர நிலை மற்றும் எரியும் நிலையானது இரண்டு கிரகங்களுக்கு மட்டுமே நிகழும். அவை புதன் மற்றும் சுக்கிரன். ஏனெனில் இவை இரண்டும் சூரிய மண்டலத்தில் சூரியனுக்கு அருகில் இருக்கும் கிரகங்களாகும்.

பொதுவாக கிரகங்களின் வக்ர நிலையால் ஒருவரது வாழ்வில் எதிர்மறை விளைவுகள் ஏற்படும். அத்துடன் சூரியனுக்கு அருகில் சென்று எரியும் நிலையில் இருந்தால், அது இன்னும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். வேத ஜோதிடத்தில், புதன் வக்ர நிலையுடன், எரியும் நிலையில் இருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதனால் சில சாதகமற்ற சூழ்நிலைகள் உருவாகலாம். அதாவது ஒருவர் மோசமாக பேசுவது, தகவல் தொடர்பில் குழப்பம், வியாபாரத்தில் நிறைய இடையூறுகள் போன்ற பலவற்றை சந்திக்க நேரிடும். இப்போது வக்ர புதன் சூரியனுக்கு அருகில் செல்வதால் ஒவ்வொரு ராசிக்காரரும் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 10 ஆவது வீட்டில் புதன் உள்ளார். இதனால் தொழில் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் பல தடைகளை சந்திக்க நேரிடும். தொடர்பு கொள்ளும் போது கூடுதல் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் உங்கள் வாழ்க்கையில் வளர்ச்சியை காண இக்காலத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 9 ஆவது வீட்டில் புதன் உள்ளார். இதனால் மாணவர்கள் சரியான முடிவை நன்கு சிந்தித்து எடுக்க அறிவுறுத்தப்படுகிறது. பெரியவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் பேசும் கொள்ளும் போது, உங்கள் வார்த்தைகளை புத்திசாலித்தனமாக தேர்ந்தெடுங்கள். ஏனெனில் உங்கள் பேச்சு அவர்களை காயப்படுத்தலாம்.

மிதுனம்
மிதுன ராசியின் 8 ஆவது வீட்டில் புதன் உள்ளார். இதனால் தங்கள் ஆரோக்கியம் மற்றும் தாயின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள் மற்றும் உடல் சுகாதாரத்தை பராமரிக்கவும். சில தவறான தகவல்தொடர்புகள் காரணமாக இந்த காலகட்டத்தில் உங்கள் மாமியார் உடனான உங்கள் உறவு பாதிக்கப்படலாம், எனவே எச்சரிக்கையாக இருங்கள். மேலும் இக்காலத்தில் எந்தவொரு விவாதத்தையும் தவித்திடுங்கள்.

கடகம்
கடக ராசியின் 7 ஆவது வீட்டில் புதன் உள்ளார். இதனால் வியாபாரத்தில் புதிய கூட்டாண்மை தொடங்குவதற்கு இது சாதகமான நேரமாக இருக்காது. உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள். பணியிடத்தில் உழைப்பு மற்றும் கூடுதல் வேலை அழுத்தம் காரணமாக, உங்கள் உறவு மற்றும் காதல் வாழ்க்கை பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. எனவே சமநிலையை பராமரிக்க முயற்சி செய்யுங்கள்.

சிம்மம்
சிம்ம ராசியின் 6 ஆவது வீட்டில் புதன் உள்ளார். இதனால் நிதி விஷயத்தில் பிரச்சனையை சந்திக்கலாம். இக்காலத்தில் உங்கள் ஆரோக்கியத்திற்காக அதிக செலவுகள் செய்யப்படலாம். சில பண மோசடியால் பண இழப்பை சந்திப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. நீங்கள் வாய்ச் சண்டைகளில் ஈடுபடலாம். எனவே வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.

கன்னி
கன்னி ராசியின் 5 ஆவது வீட்டில் புதன் உள்ளார். இதனால் இக்காலத்தில் தன்னம்பிக்கை இழந்து, குழப்பத்துடன் இருப்பீர்கள். வேலை வாய்ப்புக்காகக் காத்திருக்கும் மாணவர்கள் சில தாமதங்கள் காரணமாக சற்று மனச்சோர்வடையலாம். ஆனால் காலப்போக்கில் மாறும் என்பதால் பொறுமையாக இருங்கள். தொழிலில் எடுக்கும் சில முடிவுகள் உங்களுக்க பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்பதால் இக்காலத்தில் எந்த முடிவையும் எடுக்காதீர்கள். புதன் உங்கள் லக்னத்திற்கு அதிபதியாக இருப்பதால், உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது முக்கியம்

துலாம்
துலாம் ராசியின் 4 ஆவது வீட்டில் புதன் உள்ளார். இதனால் உங்கள் பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். இந்த நேரத்தில் அவர்கள் சில உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வாகனங்களால் சில கூடுதல் செலவுகள் ஏற்படலாம். வெளிநாட்டுப் பயணத்தைத் திட்டமிடுகிறீர்கள் என்றால், கூடுதல் எச்சரிக்கையுடன் இருங்கள். ஏனெனில் உங்களின் சிறு அலட்சியமானது தாமதம் மற்றும் பண இழப்பை ஏற்படுத்தலாம்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 3 ஆவது வீட்டில் புதன் உள்ளார். இதனால் நீங்கள் இக்காலத்தில் பயணத்தை திட்டமிட்டிருந்தால், அது திடீரென ரத்தாகலாம். உங்கள் உடன்பிறப்புக்களிடம் சண்டையிடுவதைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். எழுத்துத் துறையில் பணிபுரிந்தால், கவனம் செலுத்துவதில் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். கூடுதலாக, உங்கள் கேஜெட்களில் சில சிக்கல்களை நீங்கள் சந்திக்க நேரிடலாம் என்பதால் ஒரு பேக்கப்புடன் தயாராக இருப்பது நல்லது.

தனுசு
தனுசு ராசியின் 2 ஆவது வீட்டில் புதன் உள்ளார். இதனால் தொழில் ரீதியாக இக்காலம் சாதகமான நேரமாக இருக்காது. நீங்கள் ஏதேனும் பண வரவை எதிர்பார்த்திருந்தால், அது தாமதமாகலாம். தொழில் கூட்டாண்மை விஷயத்தில் புதிதாக ஒன்றைத் தொடங்க திட்டமிட்டால், அதை சற்று ஒத்தி வைக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பேசும் போது, வார்த்தைகளை கவனமாக பயன்படுத்துங்கள். ஏனெனில் நீங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம். மேலும் அது சில முரண்பட்ட வாதங்களில் உங்களை ஈடுபடுத்தலாம்.

மகரம்
மகர ராசியின் முதல் வீட்டில் புதன் உள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். நரம்பு மண்டலம், தோல் அல்லது ட்ரவுட் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளால் நீங்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த காலம் முழுவதும் உங்கள் தந்தையின் உடல்நிலையையும் நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும் மற்றும் தேவைப்படும் போதெல்லாம் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.

கும்பம்
கும்ப ராசியின் 12 ஆவது வீட்டில் புதன் உள்ளார். இதனால் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தங்கள் இலக்குகளில் இருந்து சிறிது திசைதிருப்பப்படலாம் அல்லது தேர்வு தேதிகள் ஒத்திவைக்கப்படலாம். உங்கள் பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள், அவர்கள் திடீரென்று சில உடல்நலப் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

மீனம்
மீன ராசியின் 11 ஆவது வீட்டில் புதன் உள்ளார். இதனால் தவறான முதலீட்டு முடிவுகளால் உங்கள் நிதி நிலைமை பாதிக்கப்படலாம். எனவே தற்போது முதலீடு செய்வதைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். நிச்சயமான திருமணத்தில் இடையூறு ஏற்படலாம் மற்றும் தம்பதியர்களிடையே தவறான புரிதலை உருவாக்கலாம். எனவே இதைத் தவிர்ப்பதற்கான ஒரே வழி, இக்காலத்தில் வெளிப்படையாக பேசுவது தான்.



Click it and Unblock the Notifications