For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மேகன் மார்க்கலின் ஆர்கானிக் சால்வை தயாரிக்கும் கம்பெனியில் ஒருநாளைக்கு ரூ.33 தான் சம்பளமாம்...

மேகன் மார்க்கலின் ஆர்கானிக் சால்வை தயாரிக்கப்படும் தொழிற்சாலையில் ஒரு மணிநேரத்திற்கு 37 பென்ஸ் (33 ₹) மட்டுமே ஊதியம் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவது பற்றி இந்த கட்டுரையில் விளக்கப்படுகிறது.

|

மேகன் மார்க்கலின் ஆர்கானிக் சால்வை தயாரிக்கப்படும் இந்த இந்திய தொழிற்சாலையில் ஒரு மணிநேரத்திற்கு 37 பென்ஸ் (33 ₹) மட்டுமே ஊதியம் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது .

Meghan Markle

மேகன் மார்க்ல் இந்த நாட்களில் தலைப்புச் செய்திகளில் அதிகம் இடம்பிடித்து வருகிறார். முதலில் அது அவரது பிரிட்டிஷ் வோக் 'ஃபோர்சஸ் ஃபார் சேஞ்ச்' அட்டைப் படத்திற்காக இருந்தது, இது 'தி கேம் சேஞ்சர்ஸ்' என்ற புத்தகத்தின் அட்டைப் படத்துடன் ஒற்றுமையைக் கொண்டிருந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேகன் மார்க்கலின்

மேகன் மார்க்கலின்

பத்திரிகை மற்றும் புத்தக அட்டை இரண்டிலும் பெண்களின் கருப்பு மற்றும் வெள்ளை படங்கள் மேலே உள்ளன. டச்சஸ் ஆஃப் சசெக்ஸ் விருந்தினர் பத்திரிகையைத் திருத்தியுள்ளார், மேலும், சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் புத்தகத்திற்கு ஒரு கட்டுரையை வழங்கியுள்ளார். தனது பத்திரிகை சர்ச்சைக்குப் பிறகு, மேகன் தொழிலாளர்களை சுரண்டுவதற்கான பிரச்சினையை வெளிப்படுத்தியதால் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்தார்.

MOST READ: ஆதாம் - ஏவாள் தோட்டத்தில் ஏன் ஆப்பிள் மட்டும் இருந்தது? வேறு பழம் இல்லை? காரணம் இதுதான்...

முன்னாள் சூட்ஸ் நடிகை

முன்னாள் சூட்ஸ் நடிகை

இந்த முன்னாள் சூட்ஸ் நடிகை குழந்தை ஆர்ச்சியை தனது கைகளில் கொண்டபடி புகைப்படம் எடுக்கப்பட்டார். அவரது மூன்று மாத மகன் ஒரு இந்தியத் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ஒரு ஆர்கானிக் சால்வையில் மூடப்பட்டிருந்தான். அந்த பருத்தி சால்வையை விற்றது குழந்தை தயாரிப்புகளில் நிபுணத்துவம் பெற்ற "மலபார் பே" என்ற ஹாங்காங்கை தளமாகக் கொண்ட நிறுவனம்.

சம்பளம்

சம்பளம்

சுமார் 33 £ (பவுண்ட்கள்) (2700 க்கும் மேற்பட்ட இந்திய ரூபாய்க்கு மேல்) விலையிடப்பட்ட இந்த சால்வைகள் ஒரு மணி நேரத்திற்கு 37 பென்ஸ்களுக்கும் குறைவாக கூலி தரப்பட்ட தொழிலாளர்களால் உற்பத்தி செய்யப்படுகின்றன என்று Mail Online -ன் ஒரு ரிப்போர்ட் கூறியது. மெயில் ஆன்லைன் அறிக்கையின்படி, இந்த சால்வை ஜெய்ப்பூருக்கு அருகிலுள்ள ஒரு புகோலிக் நகரமான பக்ருவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது மற்றும் அங்குள்ள தொழிலாளர்கள் வாரத்திற்கு 48 மணி நேரம் உழைத்து மாதத்திற்கு 6000 ரூபாய் சம்பாதிக்கிறார்கள் என்று அறியப்பட்டது.

MOST READ: ஆண்கள் ஒரே இரவில் எத்தனைமுறை உறவு கொள்ள முடியும்?... எவ்வளவு நேரம் இடைவெளி?

கசப்பான உண்மை

கசப்பான உண்மை

குறிப்பிட்ட எரவன் காட்டன் டோஹரின் (Erawan Cotton Dohar) விற்பனையானது மேகன் மார்க்லே மற்றும் அவரது மகனின் படத்திற்குப் பிறகு அதிகரித்துள்ளது. இதுபோன்ற பிரபலமான நபர்களைக் கண்டறிந்த தயாரிப்புகளால் அதன் பிராண்ட் செழிக்கக்கூடும், ஆனால் தொழிலாளர்களுக்கும் அது பொருந்தும் என்று சொல்ல முடியாது. அறிக்கையின்படி, குழந்தைத் தொழிலாளர் கொள்கை, மற்றும் இங்குள்ள தொழிலாளர்களின் தூய்மை மற்றும் நிர்வாக நிலை ஆகியவை இந்தியாவில் உள்ள பிற ஒத்த தொழிற்சாலைகளை விட சிறந்தவை, ஆனால் ஊதிய அளவு அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யப் போதுமானதாக இல்லை என்பதே கசப்பான உண்மை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Meghan Markle's Organic Shawl Is Made In Indian Factory Where Workers Are Paid 37 Pence An Hour

Meghan Markle has been grabbing the headlines these days. First it was for her British Vogue 'Forces For Change' cover, which had similarities to the cover of the book called, 'The Game Changers'
Story first published: Wednesday, September 4, 2019, 17:14 [IST]
Desktop Bottom Promotion