Latest Updates
-
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது! -
லன்ச்பாக்ஸ்-க்கு ஏற்ற மிளகு சாதமும், உருளைக்கிழங்கு ப்ரையும் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
தினமும் வீட்டில் கற்பூரத்துடன் பிரியாணி இலை சேர்த்து எரிங்க.. அப்புறம் நடக்குறத பாருங்க.. ஆச்சரியப்படுவீங்க.. -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த நெல்லை ஸ்டைல் கொத்சை ட்ரை பண்ணுங்க - அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசிகள் எல்லோரையும் அவங்க கட்டுப்பாட்டில் வைத்து ஆட்டி படைப்பவர்களாக இருப்பார்களாம் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பாரம்பரிய நெய் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
டாய்லெட் பேப்பரை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க -
இந்த பிரச்சனை இருந்தா, பூண்டு அதிகமா சாப்பிடாதீங்க.. - எச்சரிக்கும் டாக்டர்! -
நாகர்கோயில் வாழைக்காய் துவட்டல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
கனவில் சிங்கம் வருவது நல்லதா கெட்டதா? அதற்கு உண்மையான அர்த்தம் என்ன?
நவராத்திரி நாட்களில் ஒருவரது கனவில் சிங்கம் வந்தால் மிகவும் நல்லதாக கருதப்படுகிறது. ஏனெனில் துர்கை அம்மனின் வாகனம் சிங்கம். பொதுவாக கனவுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அர்த்தத்தைக் கொண்டிருக்கும்.
நாம் நல்ல ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது கனவுகள் வரும். அப்படி வரும் கனவுகள் ஒவ்வொன்றும் நம் ஆழ்மனதில் இருக்கும் ஒரு விஷயத்தினால் இருக்கலாம் அல்லது நாம் சந்திக்கவிருக்கும் பிரச்சனைகளை உணர்த்தும்விதமாக இருக்கலாம். சில கனவுகள் பயமுறுத்தும் வகையில் இருக்கும். தற்போது நவராத்திரி விழா நடந்து கொண்டிருக்கிறது. நவராத்திரியானது துர்கையுடன் தொடர்புடையது. நவராத்திரியின் ஒன்பது நாட்களும் துர்கையின் ஒன்பது வடிவங்களும் சிறப்பாக வழிபடப்படும்.

இந்த நவராத்திரி நாட்களில் ஒருவரது கனவில் சிங்கம் வந்தால் மிகவும் நல்லதாக கருதப்படுகிறது. ஏனெனில் துர்கை அம்மனின் வாகனம் சிங்கம். பொதுவாக கனவுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அர்த்தத்தைக் கொண்டிருக்கும். அதுவும் கனவில் சிங்கம் வந்தால், அதற்கு பல அர்த்தங்கள் உள்ளன. இப்போது கனவில் சிங்கம் வருவதன் பின்னணியில் இருக்கும் அர்த்தங்களைக் காண்போம் வாருங்கள்.

சிங்கம் தாக்குவது
ஒருவரது கனவில் சிங்கம் தாக்குவது போன்று வந்தால், அது சற்று பயமாக இருக்கும். ஆனால் இம்மாதிரியான கனவு வந்தால், யாரோ ஒருவர் அல்லது ஏதாவது ஒன்று உங்களின் முன்னேற்றத்திற்கு தடையை ஏற்படுத்துவதைக் குறிக்கிறது. எனவே இந்த மாதிரியான கனவு வந்தால் சற்று கவனமாக இருங்கள்.

உயரமான மலையில் சிங்கம் நிற்பது
நீங்கள் உங்கள் கனவில் ஒரு உயரமான மலையில் சிங்கம் இருப்பதைப் போன்று கண்டால், அதிகாரம் நிறைந்த பதவி உங்களைத் தேடி வரவுள்ளதைக் குறிக்கிறது. அதுவும் நீங்கள் பணிபுரிந்து வந்தால் உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.

ஜோடி சிங்கம்
உங்கள் கனவில் ஒரு ஆண் மற்றும் பெண் சிங்கம் சேர்ந்திருப்பதைக் காண்பது மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையைக் குறிக்கிறது. இதுவரை உங்களின் திருமண வாழ்வில் பிரச்சனை இருந்து இந்த கனவு வந்தால், திருமண வாழ்வில் உள்ள பிரச்சனை நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கப் போகிறது.

சிங்கக் குட்டிகள்
உங்கள் கனவில் சிங்கக்குட்டிகளை கண்டால், அது நீங்கள் தொழில் மற்றும் வேலையில் முன்னேற்றத்தை காண்பீர்கள் மற்றும் வேலை மாற்றத்திற்கான வாய்ப்புகளும் இருப்பதைக் குறிக்கிறது.

சிங்கம் கடிப்பது
கனவில் ஒரு சிங்கம் உங்களை கடித்தால், அது நீங்கள் உங்கள் வாழ்வில் ஒரு தவறான முடிவு அல்லது தேர்வு செய்யப் போவதைக் குறிக்கிறது. எனவே இந்த மாதிரியான கனவு வந்தால், எந்த ஒரு முடிவையும் எடுக்கும் முன் கவனமாக இருங்கள்.

சிங்கம் உங்களை நோக்கி ஓடி வருவது
உங்கள் கனவில் ஒரு சிங்கம் உங்களை நோக்கி ஓடி வரும் போது, நீங்கள் ஓடாமல் ஒரே இடத்தில் நின்று கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் அந்த கனவில் வரும் சிங்கம் நீங்கள் சந்திக்கும் சவால்களைக் குறிக்கிறது. நீங்கள் ஓடாமல் இருப்பது, உங்களின் வலிமையையும், நம்பிக்கையையும் குறிக்கிறது.

சிங்கம் உங்களைத் துரத்துவது
சிங்கம் துரத்துவது போன்ற கனவுகள், உங்களுக்கு வேண்டியதை வேண்டாம் என்று தவிர்க்க வைப்பதைக் குறிக்கிறது. அதாவது உங்கள் தொழில், வணிகம், உறவுகள், உடல்நலம் அல்லது நிஜ வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு வேண்டியதை உங்களை அறியாமலேயே வேண்டாம் என்று தவிர்ப்பீர்கள்.

சிங்கத்துடன் சண்டையிடுவது
நீங்கள் சிங்கத்துடன் சண்டை போடுவது போன்ற கனவு கண்டால், அது நீங்கள் ஆழ் மனதில் சற்று அழுத்தத்துடன் இருப்பதைக் குறிக்கிறது. ஒருவர் மனச்சோர்வு போன்ற மனநோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு சிங்கத்துடன் சண்டையிடுவது போன்ற கனவு வரும்.



Click it and Unblock the Notifications