For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மே மாசம் எந்த ராசிக்கு சூப்பராவும், எந்த ராசிக்கு மோசமாகவும் இருக்கப் போகுது தெரியுமா?

மே மாதம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஒருசில மாற்றங்களைக் கொண்டு வரப் போகிறது. உங்களுக்கு 2022 ஆம் ஆண்டின் ஐந்தாவது மாதமான மே மாதம் எப்படி இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா?

|

May 2022 Monthly Horoscope In Tamil

2022 ஆம் ஆண்டின் ஐந்தாவது மாதத்தில் நுழைய உள்ளோம். கிரகங்களின் நிலைகளைப் பொறுத்து ஒவ்வொரு மாதமும் பலன்கள் வேறுபடும். அந்த வகையில் மே மாதம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஒருசில மாற்றங்களைக் கொண்டு வரப் போகிறது. உங்களுக்கு 2022 ஆம் ஆண்டின் ஐந்தாவது மாதமான மே மாதம் எப்படி இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? கீழே 12 ராசிக்காரர்களும் மே மாதத்தில் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என மே மாத ராசிப்பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே! இந்த மாதம் உங்களுக்கு கலவையான பலன்களைத் தரும். சிறு விஷயங்களுக்கு கூட அதிகமாக கோபப்படுவீர்கள். இதனால் உங்களைச் சுற்றியுள்ளவர்களுடன் தகராறு ஏற்பட வாய்ப்புள்ளது. பணியிடத்தில் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இம்மாதத்தில் இடமாற்றத்திற்கான வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு மாதத்தின் ஆரம்பம் நன்றாக இருக்கு. ஆனால் அதற்கு பின் சற்று சிரமங்கள் நிறைந்ததாக இருக்கும். பணத்தைப் பற்றி அதிகம் கவலைப்படுவீர்கள். செலவுகள் அதிகமாக இருக்கும். பித்தப்பை அல்லது சிறுநீரக பிரச்சனைகள் இருந்தால், இம்மாதத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

அதிர்ஷ்ட எண்கள்: 7, 11, 22, 37, 44, 50

அதிர்ஷ்ட நாட்கள்: புதன், வெள்ளி, ஞாயிறு, திங்கள்

அதிர்ஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பச்சை, பழுப்பு, நீலம், ஊதா

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே! மே மாதத்தின் ஆரம்பம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். உங்களின் கவலைகள் குறையும். மனதளவில் சற்று வலிமையாக இருப்பீர்கள். இம்மாதத்தில் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பணியிடத்தில் பொறுப்புக்களின் சுமை அதிகமாக இருக்கும். அதிக வேலைப்பளு காரணமாக உங்களால் தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்த முடியாமல் போகும். வணிகர்கள் இம்மாதத்தில் அபாயகரமான முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. முதலீடு செய்ய நினைத்தால், புத்திசாலித்தனமாக முடிவுகளை எடுங்கள். குழந்தைகளால் அவதிப்பட நேரிடும். நிதி நிலைமை உங்களுக்கு சாதகமாக இருக்கும். எவ்வளவு சேமிக்கிறீர்களோ இம்மாதம் அவ்வளவு சிறப்பாக இருக்கும். கண் பிரச்சனைகள் இருந்தால், அலட்சியமாக இருக்காதீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 18, 24, 36, 45, 59

அதிர்ஷ்ட நாட்கள்: வியாழன், சனி, செவ்வாய், ஞாயிறு

அதிர்ஷ்ட நிறங்கள்: சிவப்பு, இளஞ்சிவப்பு, ஆரஞ்சு, பச்சை, வெள்ளை

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! இம்மாதத்தில் நீங்கள் நற்பலன்களைப் பெறலாம். இம்மாதத்தில் உங்களின் கடின உழைப்பிற்கு நல்ல வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் பதவி உயர்வைப் பெறலாம். மாத இறுதியில் சில நல்ல செய்திகளைப் பெற வாய்ப்புள்ளது. வியாபாரிகள் தங்களின் வேலையில் சாதகமான மாற்றங்களைப் பெறுவார்கள். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வீட்டின் சூழல் நன்றாக இருக்கும். இம்மாதத்தில் அன்புக்குரியவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். சொத்து தொடர்பான எந்த பிரச்சனையும் தீர்க்கப்படும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் தீரும்.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 10, 21, 38, 43, 57

அதிர்ஷ்ட நாட்கள்: வியாழன், ஞாயிறு, சனி, திங்கள்

அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், மெரூன், நீலம், பச்சை, இளஞ்சிவப்பு

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்களே! இந்த மே மாதம் உங்களுக்கு மிகவும் பிஸியான மாதமாக இருக்கும். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, இந்தக் காலத்தில் கூடுதல் பொறுப்புகளைச் சுமக்க நேரிடும். வேலை சம்பந்தமான சிறு பயணங்களையும் மேற்கொள்ள வேண்டியிருக்கும். அரசியலில் தொடர்புடையவர்கள் இந்த மாதம் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் எதிரிகள் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவார்கள். உங்களின் தற்போதைய வேலையில் திருப்தி இல்லை என்றால், புதிய வேலையைத் தேட இதுவே சரியான நேரம். ஏனெனில் உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கலாம். நிதி நிலையில் இம்மாதம் கலவையானதாக இருக்கும். உங்கள் வருமானம் நன்றாக இருக்கும். ஆனால் செலவுகள் அதிகரிப்பதால் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வீட்டின் சூழ்நிலை மிகவும் நன்றாக இருக்கும். புதிய வாகனம் வாங்க நினைத்தால் மாத இறுதியில் வெற்றி கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்: 9, 19, 25, 39, 47, 50

அதிர்ஷ்ட நாட்கள்: புதன், வெள்ளி, செவ்வாய், திங்கள்

அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், மெரூன், நீலம், ஊதா, குங்குமப்பூ

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே! இம்மாதத்தில் உங்களின் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. உணர்ச்சிவசப்பட்டு முக்கியமான முடிவுகளை எடுப்பதைத் தவிர்த்திடுங்கள். இல்லாவிட்டால் வருத்தப்படுவீர்கள். திருமண வாழ்க்கையில் சற்று அதிக கவனம் செலுத்துங்கள். உங்கள் தவறான அணுகுமுறை உங்கள் வாழ்க்கை துணையை உங்களிடமிருந்து பறித்துவிடும். வீட்டு பெரியோர்களின் ஆலோசனையைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்படுகிறது. பணத்தைப் பொறுத்தவரை, வழக்கத்தை விட இந்த நேரம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். மாதக் கடைசியில், சிறு கடனில் இருந்து விடுபடுவீர்கள். வேலையை மாற்ற நினைத்தால், அதற்கு இது நல்ல காலம் அல்ல. வியாபாரிகள் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இந்த காலகட்டத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். மறுபுறம், வேலை செய்பவர்களுக்கு கூடுதல் வேலை கொடுக்கப்பட்டால், அதிக கவனக்குறைவு செய்வதைத் தவிர்க்கவும். கடினமாக உழைத்தால், எதிர்காலத்தில் நற்பலன்களைப் பெறுவீர்கள். வாகனம் ஓட்டும் போது கவனமாக இருங்கள்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 18, 36, 45, 59

அதிர்ஷ்ட நாட்கள்: ஞாயிறு, வியாழன், புதன், திங்கள்

அதிர்ஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், கிரீம், ஸ்கை ப்ளூ, மெரூன்

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களே! இந்த மே மாதம் ஓரளவாகவே இருக்கும். இம்மாதத்தில் உங்களால் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் சமமான கவனம் செலுத்த முடியும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். உயர் பதவியை அடைவதால் புதிய பொறுப்புகளும் கிடைக்கும். வணிகர்களுக்கு அதிர்ஷ்டமான மாதம். சிறு முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். மாத இறுதியில் அதிக பணம் சம்பாதிப்பீர்கள். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அன்புக்குரியவர்களிடமிருந்து உணர்ச்சிபூர்வமான ஆதரவைப் பெறுவீர்கள். தாய் தந்தையரின் ஆதரவைப் பெறுவீர்கள். நிதி நிலை நன்றாக இருக்கும். சேமிப்பில் அதிக கவனம் செலுத்துவீர்கள். ஆரோக்கியமாக இருக்க உடல் எடையைக் கட்டுப்படுத்துங்கள்.

அதிர்ஷ்ட எண்கள்: 8, 15, 20, 39, 44, 51

அதிர்ஷ்ட நாட்கள்: சனி, செவ்வாய், வியாழன், வெள்ளி, திங்கள்

அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், இளஞ்சிவப்பு, ஆரஞ்சு, பச்சை, மெரூன்

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்களே! நீங்கள் வேலையின்றி தேடிக் கொண்டிருந்தால் இம்மாதத்தில் நல்ல வேலை கிடைக்கும். இம்மாதத்தில் நிறைய பணம் செலவழிக்க வாய்ப்புள்ளது. இம்மாதத்தில் உங்கள் தவறுகளிலிருந்து நீங்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகளை மீண்டும் செய்வதைத் தவிர்க்கவும். கூட்டு வியாபாரம் செய்தால், இந்த மாதம் உங்களுக்கு நன்றாக இருக்கும். உங்கள் துணையுடன் நல்ல உறவைப் பேண முயற்சிக்க வேண்டும். இந்த மாதத்தில், சில தீவிர குடும்பப் பிரச்சினைகளால் உங்கள் கவலைகள் அதிகரிக்கலாம். உங்கள் துணையுடனான உறவு வலுபெறும். பண விஷயத்தில் இந்த மாதம் உங்களுக்கு சிறப்பானதாக இருக்காது. நிதி விஷயங்களில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், இல்லையெனில் எதிர்காலத்தில் நீங்கள் ஒரு பெரிய நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும். அதிக மன அழுத்தம் கொள்வதைத் தவிர்த்திடுங்கள்.

அதிர்ஷ்ட எண்கள்: 4, 10, 29, 32, 40, 52

அதிர்ஷ்ட நாட்கள்: ஞாயிறு, புதன், வெள்ளி, செவ்வாய்

அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், இளஞ்சிவப்பு, வானம் நீலம், ஊதா

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே! இம்மாதத்தில் குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கலாம். ஆனால் உங்கள் அன்புக்குரியவர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் தந்தையுடனான உறவு நன்றாக இல்லாவிட்டால், அதை சரிசெய்ய முயற்சி செய்யுங்கள். காதல் விஷயத்தில் இந்த மாதம் உங்களுக்கு கலலையானதாக இருக்கும். இந்த நேரத்தில் உங்கள் துணையுடன் அதிக நேரம் செலவிட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம். இது தவிர, சிறிய விஷயங்களில் உங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். திருமணமானவர்கள் இந்த காலகட்டத்தில் சில நல்ல செய்திகளைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும். இந்த மாதத்தில் நீங்கள் கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். வேலையில் சில புதிய சவால்களை சந்திப்பீர்கள். தைராய்டு பிரச்சனை இருந்தால், அதை அலட்சியமாக நினைக்காதீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்: 6, 19, 28, 37, 44, 58

அதிர்ஷ்ட நாட்கள்: திங்கள், புதன், வெள்ளி, சனி

அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, வானம், மஞ்சள், வெள்ளை, சிவப்பு

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்களே! மே மாதத்தில் உங்களின் சொந்த வீடு வாங்கும் கனவு நனவாக வாய்ப்புள்ளது. இது தவிர பழைய சொத்தை விற்க நினைத்தால் இந்த மாதம் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும். இருப்பினும், நீங்கள் உங்களின் சிறந்ததை வழங்குவீர்கள். சமீபத்தில் ஒரு புதிய தொழிலைத் தொடங்கி எதிர்பார்த்தபடி பலன் கிடைக்காமல் போனால், வருத்தம் கொள்ளாதீர்கள். மெதுவாக விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக மாறும். திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஆழமடையும். எலும்பு தொடர்பான பிரச்சனைகள் இருந்தால், இம்மாதத்தில் அது சற்று தீவிரமாகும். கவனமாக இருங்கள்.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 17, 21, 36, 48, 50

அதிர்ஷ்ட நாட்கள்: செவ்வாய், சனி, வியாழன், திங்கள்

அதிர்ஷ்ட நிறங்கள்: மெரூன், அடர் நீலம், கிரீம், ஆரஞ்சு

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்களே! மே மாதத்தில் உங்கள் செலவுகள் அதிகரிக்கலாம் மற்றும் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும். உங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற கடன் வாங்கும் வாய்ப்பு அதிகரிக்கும். வேலையைப் பொறுத்தவரை, இந்த மாதம் வேலை செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் நிறைந்ததாக இருக்கும். இந்த மாதத்தில் நீங்கள் முன்னேற சில வாய்ப்புகள் கிடைக்கும். அப்போது உங்களால் முடிந்ததை கொடுக்க முயற்சிக்க வேண்டும். பணியிடத்தில், உயர் பதவியில் பணிபுரிபவராக இருந்தால், கீழ் பணிபுரிபவர்களிடம் அதிகக் கண்டிப்புடன் செயல்படுவதைத் தவிர்க்க வேண்டும். தேவையற்ற கோபம் உங்கள் இமேஜை கெடுத்துவிடும். தங்கம் மற்றும் வெள்ளி தொடர்பான வேலைகளைச் செய்பவர்களுக்கு இந்த மாதம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பங்குச் சந்தையில் இருந்து சிறிய வேலைகளைச் செய்பவர்கள் ஆபத்தான முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். குடும்ப வாழ்க்கை சாதாரணமாக இருக்கும். மாத இறுதியில், தந்தையின் உடல்நிலை பலவீனமாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையின் பொறுப்புகள் உங்களை மிகவும் சுமையாக உணர வைக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்: 6, 18, 24, 36, 44, 54

அதிர்ஷ்ட நாட்கள்: திங்கள், வியாழன், செவ்வாய், சனி

அதிர்ஷ்ட நிறங்கள்: கிரீம், ஊதா, சிவப்பு, குங்குமப்பூ

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே! மே மாதமானது மாணவர்களுக்கு சிறப்பாக இருக்கும். அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். இன்டர்வியூ சென்றால், இம்மாதத்தில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புள்ளது. வணிகர்கள் கலவையான முடிவுகளைப் பெறுவார்கள். மாதத்தின் நடுப்பகுதி உங்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும், ஆனால் அதற்குப் பின் வரும் நேரம் மிகுந்த நிம்மதியைத் தரும். இம்மாதத்தில் சற்று கவனமாக இல்லாவிட்டால் பெரிய நிதி இழப்பை சந்திக்க நேரிடும். இம்மாதத்தில் குடும்பத்துடன் போதுமான நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.மாத இறுதியில், சொத்து சம்பந்தமான சில நன்மைகளைப் பெறலாம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க, தேவையற்ற கவலைகளில் இருந்து விலகி இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட எண்கள்: 9, 17, 22, 39, 46, 52

அதிர்ஷ்ட நாட்கள்: வியாழன், திங்கள், வெள்ளி, செவ்வாய்

அதிர்ஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, மஞ்சள், நீலம், பழுப்பு

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்களே! கலை, கல்வி, ஊடகம் போன்ற துறைகளுடன் தொடர்புடையவர்களுக்கு இந்த மாதம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். இம்மாதத்தில் முன்னேற்றத்திற்கான பாதைகள் உங்களுக்கு திறக்கப்படும். உங்கள் கௌரவம் உயரும், சமூகத்தில் உங்கள் அந்தஸ்து கூடும். அரசு வேலை செய்பவர்களுக்கு இந்த மாதம் சற்று சவாலாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் பணிச்சுமை அதிகரிக்கும். உயர் அதிகாரிகளுடன் உங்கள் மோதல்களும் சாத்தியமாகும். இதனால் மன அழுத்தம் அதிகரிக்கும். மறுபுறம், இந்த மாதம் வியாபாரம் செய்பவர்களுக்கு நன்றாக இருக்கும். இருப்பினும், நிறைய ஓட வேண்டியிருக்கும். மாத இறுதியில் நீங்கள் நிதி ஆதாயங்களைப் பெறலாம். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். பெற்றோரின் ஆதரவைப் பெறுவீர்கள். எந்தவொரு பண விஷயத்திலும் அலட்சியமாக இருக்காதீர்கள். இல்லையெனில் நீங்கள் சிக்கலில் மாட்டிக் கொள்ளலாம். இதயம் தொடர்பான நோய் இருந்தால், உங்களைக் கவனித்துக் கொள்ளுங்கள். மாத இறுதியில் உங்கள் ஆரோக்கியம் சற்று பலவீனமாக இருக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்: 4, 14, 26, 34, 45, 55

அதிர்ஷ்ட நாட்கள்: செவ்வாய், வியாழன், சனி, திங்கள்

அதிர்ஷ்ட நிறங்கள்: பச்சை, ஊதா, சிவப்பு, வெள்ளை, கிரீம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

May 2022 Monthly Horoscope In Tamil

Check out the monthly horoscope of May 2022 for all zodiac signs. Read on.
Desktop Bottom Promotion