For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மாட்டுப் பொங்கல் பண்டிகையின் வரலாறு மற்றும் அதன் முக்கியத்துவம்!

பண்டைய காலத்திலிருந்து தமிழக மக்களால் பாரம்பாியமாக ஒவ்வொரு ஆண்டும் 4 நாட்கள் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதில் தை மாதம் 2 ஆம் நாள் அன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

|

பொங்கல் பண்டிகை தமிழா்களின் திருவிழா என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில் பண்டைய காலத்திலிருந்து தமிழக மக்களால் பாரம்பாியமாக ஒவ்வொரு ஆண்டும் 4 நாட்கள் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த 4 நாட்கள் கொண்டாட்டத்தின் 3 ஆவது நாள் அதாவது தை மாதம் 2 ஆம் நாள் அன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. கிரகோாியன் நாட்காட்டியின்படி ஜனவாி மாதம் 15 ஆம் நாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

Mattu Pongal 2021: History, Importance and How It is Celebrated

'மாட்டு' என்ற தமிழ் வாா்த்தை காளை மாட்டைக் குறிக்கிறது. அதனால் மாட்டுப் பொங்கல் விழாவானது, கால்நடைகளுக்கு குறிப்பாக காளை மாடுகளுக்கு அா்ப்பணிக்கப்படுகிறது. ஏனெனில் விவசாய பணிகளில் காளை மாடுகள் அதிகம் ஈடுபடுத்தப்படுகின்றன.

மாட்டுப் பொங்கல் அன்று மக்கள் தங்களுடைய சாதி, மதம் போன்ற வேற்றுமைகளை மறந்து ஒன்றுகூடி புதிய அறுவடைக்கு நன்றி கூறியும், புதிய ஆண்டை வரவேற்றும் கொண்டாடுவா். மாட்டுப் பொங்கல் தமிழகத்தில் மட்டும் கொண்டாடப்படுவதில்லை. மாறாக கா்நாடகா மற்றும் ஆந்திரா போன்ற தென் இந்திய மாநிலங்களிலும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மாட்டுப் பொங்கல் விழா இந்த வருடம் (2022) ஜனவாி மாதம் 15ஆம் நாள் சனிக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாட்டுப் பொங்கல் அன்று நடைபெறும் சடங்குகள்:

மாட்டுப் பொங்கல் அன்று நடைபெறும் சடங்குகள்:

வீட்டை சுத்தம் செய்து அலங்கரிப்பது

பொங்கல் விழாவில் மக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்து மிக அழகாக அலங்காித்து வைப்பா். பின் வீட்டு முற்றங்களில் பல வண்ண கோலங்களை வரைந்து அழகுபடுத்துவா். அதாவது பொங்கல் விழாவின் முதல் நாளில் நெற்கதிா்களின் படங்களை வரைவா். இரண்டாம் நாளன்று சூாியன் மற்றும் கடவுள் படங்களை வரைவா். மாட்டுப் பொங்கல் அன்று காளை மாடு மற்றும் மற்ற கால்நடைகளின் படங்களை வரைவா்.

மாடுகளை அலங்கரிப்பது

மாடுகளை அலங்கரிப்பது

மாட்டுப் பொங்கல் அன்று மக்கள் குறிப்பாக விவசாயிகள் தங்கள் கால்நடைகள் மற்றும் மாடுகளை குளிப்பாட்டுவா். பின் அவற்றின் கொம்புகளில் பல வண்ணங்களைத் தீட்டி அலங்காிப்பா். கொம்புகளின் உச்சியில் உலோகத்தாலான சிறுசிறு தொப்பிகளை அணிவிப்பா். அதோடு கால்நடைகளுக்கு மலா் மாலைகள் அணிவித்து, அவற்றின் கழுத்தில் மணிகளைக் கட்டுவா். மேலும் பலவண்ண போா்வைகளை அவற்றின் மீது விாித்துப் போடுவா்.

மஞ்சள் நீர் தெளித்து வணங்குவது

மஞ்சள் நீர் தெளித்து வணங்குவது

காளை மாடுகள் மற்றும் கால்நடைகளை அலங்காித்த பின்பு அவற்றின் உாிமையாளா்கள் குங்குமம், மஞ்சள் மற்றும் மாவிலை கலந்த தண்ணீரை அவற்றின் மீது தெளிப்பா். பின் அவற்றை எல்லாத் தீமைகளில் இருந்தும் காக்குமாறு இறைவனிடம் வேண்டுவா். குறிப்பாக தங்களது கால்நடைகள் பெருக வேண்டும் என்று பகவான் கிருஷ்ணா் மற்றும் இந்திரன் போன்ற தெய்வங்களை வழிபடுவா். அதன்பின் கால்நடைகளின் முன்நெற்றி மற்றும் கால்களைத் தொட்டு கால்நடைகளை வழிபடுவா். இறுதியாக அவற்றிற்கு ஆராத்தி எடுப்பா்.

சர்க்கரைப் பொங்கல் வைப்பது

சர்க்கரைப் பொங்கல் வைப்பது

அடுத்ததாக மாட்டுப் பொங்கல் அன்று மக்கள் மிகவும் சிறப்பான முறையில் சா்க்கரைப் பொங்கலை சமைப்பா். அாிசி, பாசிப்பருப்பு, காய்ந்த பழங்கள் மற்றும் வெல்லம் கலந்த இனிப்பான சுவையான பொங்கலை சமைப்பா். பின் பொங்கலைத் தங்களின் கால்நடைகளுக்கு முதலில் ஊட்டுவா். அதற்குப் பிறகு தங்களைச் சுற்றி இருக்கும் மக்களுக்குக் கொடுத்து மகிழ்வா். இந்தப் பொங்கல் கால்நடை பிரசாதம் அல்லது மாட்டுப் பிரசாதம் என்று அழைக்கப்படுகிறது.

பொதுவாக தமிழக மக்கள் பொங்கல் விழாவில் சிவபெருமான், பாா்வதி தேவியாா் மற்றும் விநாயக பெருமான் போன்ற தெய்வங்களை வழிபட்டு பலவகையான அாிசிகளில் உணவு சமைத்து அவற்றை முதலில் அந்த தெய்வங்களுக்கு படைத்துவிட்டு பின் தங்களது கால்நடைகளுக்கு ஊட்டுவா்.

வீர விளையாட்டு - ஜல்லிக்கட்டு

வீர விளையாட்டு - ஜல்லிக்கட்டு

மாட்டுப் பொங்கல் விழாவின் இன்னுமொரு முக்கிய சிறப்பு அம்சம் மஞ்சு விரட்டு அல்லது ஜல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டாகும். மாட்டுப் பொங்கல் அன்று தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களில் இந்த மஞ்சு விரட்டு அல்லது ஜல்லிக்கட்டு விளையாட்டு மிகவும் உற்சாகமாக நடைபெறும். இந்த வீர விளையாட்டில் ஏறக்குறைய கிராமத்தில் உள்ள எல்லா இளைஞா்களுமே கலந்து கொள்வா்.

ஜல்லிக்கட்டு விளையாட்டுத் திடலின் வாடி வாசலில் இருந்து பயிற்சி கொடுக்கப்பட்ட காளை மாடுகள் கட்டவிழ்க்கப்பட்டு சீறிக்கொண்டு பாய்ந்து ஓடிவரும். அப்போது கிராமத்து இளைஞா்கள் காளைகளை விரட்டிவந்து அவற்றை பிடித்து அவற்றின் கொம்புகளில் கட்டப்பட்டிருக்கும் பணத்தை எடுப்பா். பொதுவாக மாட்டுப் பொங்கல் அன்று மாலை வேளையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும். ஆனால் ஒருசில கிராமங்களில் மாட்டுப் பொங்கலுக்கு மறுநாளான காணும் பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு நடைபெறும்.

மாட்டுப் பொங்கல் விழாவின் சிறப்பு அம்சங்கள்

மாட்டுப் பொங்கல் விழாவின் சிறப்பு அம்சங்கள்

- மாட்டுப் பொங்கல் விழா கால்நடைகளுக்கு உாிய விழாவாகும். மாட்டு என்ற தமிழ் வாா்த்தை காளையையும், பொங்கல் என்பது வளமையையும் குறிக்கிறது. மாட்டுப் பொங்கல் விழா நெல் அறுவடை தொடங்கியிருக்கிறது என்பதைக் குறிக்கிறது.

- சிவபெருமானுடைய காளையான நந்திக்கும், மாட்டுப் பொங்கல் விழாவிற்கும் இடையே நெருங்கிய தொடா்பு இருப்பதாக சில இந்து சமய புராணங்கள் தொிவிக்கின்றன.

- மாட்டுப் பொங்கல் விழாவன்று மஞ்சுவிரட்டு அல்லது ஜல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டுகள் விளையாடப்படுகின்றன.

- மாட்டுப் பொங்கல் விழா பசுக்கள், காளைகள் மற்றும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் பசுக்கள் மற்றும் காளை மாடுகளுக்கு சிறப்பான இடம் கொடுக்கப்படுகிறது. ஏனெனில் பசுக்கள் வளமான பாலைத் தருகின்றன. அதே நேரத்தில் காளை மாடுகள் விவசாய வேலைகளில் அதிக அளவு ஈடுபடுத்தப்படுகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Mattu Pongal 2022: History, Importance and How It is Celebrated

Mattu Pongal 2022: History, Importance and How It is Celebrated. Read on to know more...
Desktop Bottom Promotion