Latest Updates
-
ஜூன் 30-ல் நடக்கும் ராகு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
மதியம் லன்ச் பாக்ஸ்-க்கு இந்த ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
ஃபேஸ் பேக் Vs ஃபேஸ் மாஸ்க் - இவற்றில் சிறந்தது எது? -
ஜூன் 22-ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பணமழை கொட்டப்போகுது! -
முருங்கைக்கீரை கடையலும், வாழைக்காய் வறுவலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
எகிறும் முட்டை விலை.. இந்த முட்டைக்கு இணையான புரோட்டீன் நிறைந்த சைவ உணவுகள் இதோ! -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
தள்ளுவண்டி கடை புதினா கொத்தமல்லி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 18 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு ஆரோக்கியம் மோசமாகப் போகுதாம் - ஜாக்கிரதை -
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெற்று ஜெயிக்கப்போகும் 3 ராசிகள்
ரிஷப ராசியில் செவ்வாய் இருப்பதால் அக்டோபர் 16 வரை இந்த 4 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்..
செவ்வாய் 2022 ஆகஸ்ட் 10 ஆம் தேதி மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு சென்றார். இந்த ரிஷப ராசியில் செவ்வாய் 2022 அக்டோபர் 16 ஆம் தேதி வரை இருப்பார். அதன் பின் மிதுன ராசிக்கு செல்வார்.

ஜோதிடத்தில் செவ்வாயின் நிலை மிகவும் முக்கியமானது. செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசியின் அதிபதியாவார். பொதவாக செவ்வாய் ஒரு ராசியில் 45 நாட்கள் இருப்பார். சில நேரங்களில் செவ்வாய் வேகமாகவும், சில நேரங்களில் மெதுவாகவும் செவ்வாய் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்வார். இந்நிலையில் செவ்வாய் 2022 ஆகஸ்ட் 10 ஆம் தேதி மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு சென்றார். இந்த ரிஷப ராசியில் செவ்வாய் 2022 அக்டோபர் 16 ஆம் தேதி வரை இருப்பார். அதன் பின் மிதுன ராசிக்கு செல்வார். செவ்வாய் ரிஷப ராசிக்கு சென்றிருப்பதால், சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதை இப்போது காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 2 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்றிருப்பதால், இக்காலத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்காது. வழக்கத்தை விட அதிக கோபம் வரும். இதன் விளைவாக சிலருடன் சண்டைகள் வரலாம். தனிப்பட்ட வாழ்க்கையிலும் பிரச்சனைகளை சந்திப்பார்கள். பணம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. முக்கியமாக வாழ்க்கைத் துணையுடன் அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்படும்.

மிதுனம்
மிதுன ராசியின் 12 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்றிருப்பதால், இப்பெயர்ச்சி காலம் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்காது. இந்த காலகட்டத்தில் அதிக பணம் செலவு செய்ய வேண்டியிருக்கும். ஆரோக்கியத்திலும் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சிலருக்கு இரத்தம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கையில் வாழ்க்கைத் துணையுடன் சில தகராறு ஏற்படலாம்.

துலாம்
துலாம் ராசியின் 8 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்றிருப்பதால், இக்காலம் இந்த ராசிக்காரர்களுக்கு சற்று சவால் நிறைந்ததாக இருக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் எதிர்பாராத விஷயம் ஒன்று நடந்து, அது மன உளைச்சலை ஏற்படுத்தும். தனிப்பட்ட வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இக்காலத்தில் உங்கள் பேச்சிலும், மொழியிலும் நிதானத்தை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில் உங்களின் பேச்சு மற்றவர்களை காயப்படுத்தலாம்.

மீனம்
மீன ராசியின் 3 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்றிருப்பதால், இக்காலத்தில் மீன ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், அது உங்கள் நிதி நிலையை மோசமாக பாதித்துவிடும். இக்காலத்தில் உங்கள் உடன்பிறப்புகளுடனான உறவு மோசமடையும். பேசும் போது கொஞ்சம் கவனமாகவும் நிதானமாகவும் இருங்கள். உங்கள் தந்தையுடனான உறவு மோசமடைவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. பணியிடத்தில் கூட உடன் பணிபுரிபவர்களின் முழு ஆதரவு கிடைக்காது.



Click it and Unblock the Notifications