Latest Updates
-
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா?
Mangal Gochar 2022: செவ்வாய் பெயர்ச்சியால் அடுத்த 2 மாசம் இந்த ராசிகளுக்கு கஷ்டமா இருக்கப் போகுது..
செவ்வாய் 2022 ஆகஸ்ட் 10 ஆம் தேதி மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு செவ்கிறார். ரிஷபம் செல்லும் செவ்வாய் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

நவகிரகங்களில் வலிமை, ஆற்றல், தைரியம் ஆகியவற்றின் காரணி தான் செவ்வாய். ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் நல்ல நிலையில் இருந்தால், அவர் தைரியமாகவும், அச்சமற்றவராகவும் இருப்பார். இந்த செவ்வாய் மேஷ ராசியில் ராகுவுடன் சேர்ந்து பயணித்து வருகிறார். இந்நிலையில் செவ்வாய் 2022 ஆகஸ்ட் 10 ஆம் தேதி மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு செவ்கிறார். ரிஷபம் செல்லும் செவ்வாய் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாகவும், சில ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகள் நிறைந்தும் இருக்கலாம். இப்போது ரிஷபம் செல்லும் செவ்வாயால் 12 ராசிக்காரர்களும் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 2 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் மற்றவர்களுக்கு நீங்கள் முரட்டுத்தனமாக காணப்படலாம். இதனால் குடும்பத்தில் பிளவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நிதி நிலைமை ஏற்றத்தாழ்வுகளுடன் இருக்கும். எனவே சற்று விழிப்புடன் இருங்கள். மாணவர்களுக்கு இது ஒரு நல்ல காலமாக இருக்கும். திருமணமானவர்கள் மாமியார் மாமனாரின் ஆதரவைப் பெறுவார்கள். இக்காலத்தில் யாத்திரை செல்ல திட்டமிடுவீர்கள்.

ரிஷபம்
ரிஷப ராசியின் முதல் வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் வெளிநாடு மற்றும் திருமண வாழ்க்கையில் இருந்து புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். தாயாரின் ஆதரவைப் பெறுவார்கள். சொத்துக்களால் நல்ல லாபத்தை பெற வாய்ப்புள்ளது. வியாபாரிகள் ஒப்பந்தத்தின் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. திருமணம் செய்ய விரும்புவோருக்கு இது நல்ல காலம். திருமணமானவர்கள் வாழ்க்கைத் துணையின் ஆதரவைப் பெறுவார்கள். இக்காலத்தில் பயணம் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மிதுனம்
மிதுன ராசியின் 12 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் இளைய உடன்பிறப்புகளின் ஆதரவு கிடைக்கும். பொழுதுபோக்கிற்காக பணத்தை செலவிடுவீர்கள். ஏதேனும் உடல்நலப் பிரச்சினையால் அவதிப்பட்டால், அதை அலட்சியப்படுத்த வேண்டாம், உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து பாருங்கள். உங்களின் ஆதிக்க இயல்பு மற்றும் சில தேவையற்ற ஈகோ காரணமாக, உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படலாம். எனவே திருமண வாழ்க்கையில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

கடகம்
கடக ராசியின் 11 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இது லாப வீடு. எனவே இக்காலத்தில் ஆசைகளை நிறைவேற்ற மிகவும் நல்ல காலம். பணியிடத்தில் கடின உழைப்பிற்கான பலனைப் பெறுவீர்கள். நீங்கள் ரியல் எஸ்டேட், இன்ஜினியரிங் அல்லது ஆயுதப்படை துறையில் இருந்து, உங்கள் பதவி உயர்வு நிலுவையில் இருந்தால், இக்காலத்தில் அதைப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு இது நல்ல காலம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இதுவரை ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், இக்காலத்தில் அது சரியாகும்.

சிம்மம்
சிம்ம ராசியின் 10 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் தொழில் வாழ்க்கையில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். அறுவை சிகிச்சை நிபுணர், ரியல் எஸ்டேட் மற்றும் ஆயுதப்படைத் துறையில் உள்ளவர்கள் மிகவும் பயனடைவார்கள். உடல் ஆரோக்கியத்தில் நேர்மறையான மாற்றம் ஏற்படும். தாயாரின் ஆதரவு கிடைக்கும். ஆனால் மாணவர்கள் இக்காலத்தில் படிப்பில் சில கவனச்சிதறல்களை சந்திக்கலாம். எனவே கூடுதல் கவனத்துடன் இருக்கவும். மொத்தத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு இக்காலம் நன்றாக இருக்கும்.

கன்னி
கன்னி ராசியின் 9 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்கள் தந்தை மற்றும் குருவால் திடீர் நன்மைகள் உண்டாகும். திடீர் பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. இக்காலத்தில் உங்கள் தந்தையுடன் சண்டைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சில எதிர்பாராத செலவுகளும் ஏற்படலாம். இளைய உடன்பிறப்புக்களின் ஆதரவு கிடைக்கும். தாயின் ஆரோக்கியம் சற்று மோசமாக வாய்ப்புள்ளது. எனவே அவர்கள் மீது சற்று அதிக அக்கறை காட்டுங்கள்.

துலாம்
துலாம் ராசியின் 8 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இது சவாலான காலம். சற்று மன அமைதியின்மையுடன் இருப்பீர்கள். நிதி நிலையில், திடீர் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படலாம். இக்காலத்தில் உங்களின் பேச்சுக்களையும், பயன்படுத்தும் வார்த்தைகளையும் கவனமாக பயன்படுத்துங்கள். இக்காலத்தில் பயணம் மேற்கொள்ளும் போது அதிக எச்சரிக்கையுடன் இருக்க முயற்சி செய்யுங்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 7 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உறவுகளில் தேவையற்ற ஈகோ மோதல்கள் மற்றும் வாக்குவாதங்கள் ஏற்படலாம். எனவே திருமண வாழ்க்கையில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். தொழிலில் நல்ல பலன்கள் கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக உண்ணும் உணவுகளில் விழிப்புடன் இருக்க வேண்டும்.

தனுசு
தனுசு ராசியின் 6 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் வெற்றி பெறுவார்கள். நீண்ட தூர பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. இது சில செலவுகளை ஏற்படுத்தலாம். இருப்பினும் இப்பயணம் பலனளிக்கும். ஏனெனில் இக்காலத்தில் அதிர்ஷ்டம் உங்கள் அருகில் இருக்கும். கடவுளின் ஆசீர்வாதம் இருப்பதை உணர்வீர்கள்.

மகரம்
மகர ராசியின் 5 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் மாணவர்கள் அவர்களின் இலக்குகளை அடைவார்கள். பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் பணிச்சுமை மற்றும் பொறுப்பு அதிகரிக்கும். அதோடு சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. திருமணமானவர்கள் ங்கள் குழந்தைகள் மீது சற்று அதிக கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.

கும்பம்
கும்ப ராசியின் 4 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்கள் உடன்பிறந்தவர்களுடன் தரமான நேரத்தைச் செலவிடும் வாய்ப்பும், பிணைப்பை வலுப்படுத்தும் வாய்ப்பும் கிடைக்கும். இக்காலத்தில் உங்களின் தாயார் சற்று ஆற்றலுடன் இருப்பார். பணியிடத்தில் நன்கு சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். முக்கியமான பணிகளை முடிக்க நீங்கள் ஆலோசனைகளை வழங்க வேண்டியிருக்கும். உங்கள் பணியிடத்திலும் சில மாற்றங்கள் வரலாம்.

மீனம்
மீன ராசியின் 3 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பொழுது போக்குகளில் தங்களை அதிகம் ஈடுபடுத்திக் கொள்வார்கள். இக்காலத்தில் மிகவும் தைரியமாகவும், நேர்மையாகவும் பேசுவார்கள். நீண்ட காலமாக அவதிப்பட்டு வந்த நோயில் இருந்து இக்காலத்தில் விடுபடுவார்கள். நீங்கள் ஜோதிடம் கற்க நினைத்தால் அதற்கு இது மிகவும் நல்ல காலம்.



Click it and Unblock the Notifications