Just In
- 1 hr ago
மட்டன் சுக்கா
- 1 hr ago
இந்த சைவ உணவுகளால் உங்கள் ஆயுள் குறையும் ஆபத்து அதிகரிக்கிறதாம்... ஜாக்கிரதையா சாப்பிடுங்க...!
- 1 hr ago
பெண்களே! உங்க கணவன் ரொம்ப சந்தோஷமா இருக்க நீங்க என்ன பண்ணனும் தெரியுமா?
- 2 hrs ago
இந்த உணவுகளை மாம்பழத்துடன் சேர்த்து சாப்பிடாதீங்க.. இல்லன்னா அது கோமாவுக்கே கொண்டு போயிடும்..
Don't Miss
- Movies
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்த அவதூறு கருத்து.. ரோஜா சீரியல் நடிகை நேரில் ஆஜராக உத்தரவு!
- News
எந்த மொழியையும் திணிக்க கூடாது.. கருணாநிதி சிலை திறப்பு விழாவில் வெங்கையா நாயுடு முழக்கம்
- Automobiles
விலையை கேட்டதும் தலையே சுத்துது... காஸ்ட்லியான காரை வாங்கிய பிரபல நடிகரின் மனைவி... யார்னு தெரியுமா?
- Sports
"யாருப்பா நீ விநோதமா பண்ற" விராட் கோலிக்காக ரசிகர் செய்த விஷயம்.. இதை சரியா கவனிச்சீங்களா??
- Technology
பிளிப்கார்ட் எலக்ட்ரானிக் விற்பனை 2022: முக்கிய ஸ்மார்ட்போன்களுக்கு அட்டகாச தள்ளுபடி!
- Finance
இந்தியாவில் இ-காமர்ஸ் வணிகம்: பேச்சுவார்த்தையை தொடங்கியது கூகுள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
செவ்வாய் பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்களோட நிதி நிலைமை அட்டகாசமா இருக்கப் போகுது... உங்க ராசி இதுல இருக்கா?
நவகிரகங்களில் சுறுசுறுப்பான மற்றும் உமிழும் கிரகமான செவ்வாய், மேஷம் மற்றும் விருச்சிக ராசியின் அதிபதி. இந்த செவ்வாய் 2022 ஜனவரி 16 ஆம் தேதி விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடம் மாறினார். ஜோதிடத்தின் படி, கிரகங்கள் இடம் மாறும் போது, ஒவ்வொரு ராசிக்காரரும் அதனால் பாதிக்கப்படுகின்றனர். ஏற்கனவே தனுசு ராசியில் சுக்கிரன் இருக்கிறார். இந்நிலையில் தனுசு ராசிக்கு செவ்வாய் செல்லும் போது, செவ்வாய் சுக்கிரனுடன் சேர்ந்து தனுசு ராசியில் பயணிப்பார்.
சுக்கிரனுடன் செவ்வாய் பயணிப்பதால் 3 ராசிக்காரர்களுக்கு நல்ல பலன் கிடைக்கப் போகிறது. அதுவும் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படுவதோடு, லட்சுமி தேவியின் ஆசியையும் பெறவுள்ளார்கள். இதனால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலைமை முன்பை விட சிறப்பாக இருக்கும். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார், எந்த மாதிரியான பலன்களைப் பெறவுள்ளார்கள் என்பதைக் காண்போம்.

மேஷம்
செவ்வாய் பெயர்ச்சியானது மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானது என்பதை நிரூபிக்கும். நீண்ட நாட்களாக செய்து முடிக்க முயற்சி செய்து கொண்டிருந்த பணிகள் அனைத்தும் இக்காலத்தில் முடியும். உத்தியோகத்தில் நல்ல வளர்ச்சியைக் காண வாய்ப்பு உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், பதவி மற்றும் அந்தஸ்து அதிகரிக்கும். பண லாபம் உண்டாகும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் தரும். மொத்தத்தில் இந்த காலம் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

மிதுனம்
செவ்வாய் பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். இக்காலத்தில் ஒரு பெரிய லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்தாலும் சரி, வியாபாரத்தில் இருந்தாலும் சரி, இரண்டு வகையிலும் பலன்களைப் பெறுவீர்கள். பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். உயர் அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டால் பெரிய பதவியையும் பெறலாம்.

மீனம்
செவ்வாய் பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு நற்பலன்களைத் தருவதாக இருக்கும். அதுவும் இக்காலத்தில் உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ப முழுமையான முடிவுகளைப் பெறுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் எந்த பெரிய பொறுப்பும் உங்களிடம் கொடுக்கப்படலாம். நீங்கள் வேலையை மாற்ற நினைத்தால், அதற்கு இந்த காலம் பொருத்தமானதாக இருக்கும். தொழிலில் நீங்கள் எடுக்கும் முயற்சிகளால் வெற்றி கிடைத்து, அதிக லாபத்தைப் பெறுவீர்கள்.