Just In
- 2 min ago
இந்த பழங்களை ஒன்றாக சாப்பிடுவது விஷத்திற்கு சமமாம்... இது உங்க உயிருக்கே ஆபத்தாகும்... ஜாக்கிரதை!
- 6 hrs ago
இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பணம் சம்பந்தமாக ஏதேனும் தகராறு ஏற்படலாம்...
- 13 hrs ago
ஆண்களை விட பெண்கள் எப்படி வித்தியாசமாக கள்ள உறவில் ஏமாற்றுகிறார்கள்? ஏன் ஏமாற்றுகிறார்கள் தெரியுமா?
- 16 hrs ago
மாம்பழ பூரி
Don't Miss
- Automobiles
ஆல்டோ போன்ற சின்ன கார்களை கை கழுவ முடிவு? மாருதியின் திடீர் மன மாற்றத்திற்கு இதுதான் காரணம்!
- Movies
வாழ்க்கை ரொம்ப கொடுமையானதா இருக்கே.. மீனாவுக்கு என்ன ஆறுதல் சொல்வேன்.. கதறி அழுத குஷ்பு!
- News
சி.வி.சண்முகம் காட்டுமிராண்டி! தேவையில்லாமல் திமுகவை வம்பு இழுக்காதீர் -அமைச்சர் பெரியகருப்பன்
- Finance
Gold price: செம சர்பிரைஸ் கொடுத்த தங்கம்.. இன்று எவ்வளவு குறைஞ்சிருக்கு?
- Technology
Best Smartphone: உங்க பட்ஜெட் ரூ.6000-ஆ? அப்போ 1 இல்ல.. மொத்தம் 7 அட்டகாச மாடல்ஸ் இருக்கு!
- Sports
உம்ரான் மாலிக் மீது வைத்த நம்பிக்கை வீண் போகல.. இது ஸ்பெஷல் வெற்றி.. ஹர்திக் பாண்டியா மகிழ்ச்சி
- Travel
இந்தியாவின் மார்பில் சிட்டிக்குள் ஒரு சுற்றுலா – கிஷன்கரில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
செவ்வாய் மீன ராசிக்கு செல்வதால் அடுத்த 42 நாட்கள் இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டமானதா இருக்கப் போகுது...
ஜோதிடத்தில் செவ்வாய்க்கு தனிச்சிறப்பு உள்ளது. நவகிரகங்களில் செவ்வாய் அனைத்து கிரகங்களுக்கும் தளபதி என்று கூறப்படுகிறது. அதோடு செவ்வாய் ஆற்றல், சகோதரன், நிலம், வலிமை, தைரியம், வீரம் ஆகியவற்றின் காரக கிரகம் என்று கூறப்படுகிறது. இத்தகைய செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசியின் அதிபதி ஆவார். இந்த செவ்வாய் மகர ராசியில் பலமாகவும், கடக ராசியில் பலவீனமாகவும் இருப்பார்.
இத்தகைய செவ்வாய் இதுவரை கும்ப ராசியில் பயணித்து வந்தார். 2022 மே 17 ஆம் தேதியில் இருந்து மீன ராசிக்குள் நுழைந்து பயணிக்க ஆரம்பித்துள்ளார். செவ்வாய் மீன ராசிக்கு சென்றுள்ளதால், எந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகிறது என்பதை இப்போது காண்போம்.

மேஷம்
செவ்வாய் பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்கள் வேலையில் உற்சாகமாக இருப்பார்கள். சமய விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். இக்காலத்தில் தாயாரின் ஆதரவு கிடைக்கும். உங்கள் தாயிடம் இருந்து பணம் கிடைக்க வாய்ப்புள்ளது. இக்கால கட்டத்தில் உங்கள் பழைய நண்பரை சந்திப்பீர்கள். நல்ல வருமானம் இருக்கும். வேலை மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. குடும்பத்துடன் ஆன்மீக ஸ்தலங்களுக்கு பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களின் வியாபாரத்தை விரிவடையச் செய்யும் திட்டம் நிறைவேறும். சகோதரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆனால் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்புள்ளது. வேலை மாற்றம் அல்லது இடமாற்றத்திற்கான வாய்ப்புள்ளது. இக்காலத்தில் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் தாயாரின் அன்பு கிடைக்கும். வாகனம் வாங்கும் யோகம் உண்டு. பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் செவ்வாய் பெயர்ச்சியால் மிகவும் நம்பிக்கையுடன் இருப்பார்கள். ஆனால் சற்று சுய கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியதும் அவசியம். குடும்பத்தின் சௌகரியங்கள் விரிவடையும். பணியிடத்தில் மாற்றத்திற்கான வாய்ப்புள்ளது. இக்காலத்தில் பணியிடத்தில் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். மேலும் தாயாரின் ஆதரவு கிடைக்கும். நல்ல லாபகரமான காலமாக இருக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

மீனம்
செவ்வாய் மீன ராசிக்கு சென்றிருப்பதால், மீன ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகம் இருக்கும். வேலை மாற்றத்திற்கான வாய்ப்புள்ளது. இல்லாவிட்டால் இடமாற்றம் கூட ஏற்படலாம். சகோதர்களின் உதவியால் உங்கள் வேலையை சிறப்பாக செய்வீர்கள். ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்பபு உள்ளது. குடும்ப உறுப்பினர்களுடன் அதிக நேரத்தை செலவிடுவீர்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும்.