For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிம்ம ராசிக்கு செவ்வாய் செல்வதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?

செவ்வாய் கடக ராசியில் இருந்து வெளியேறி, சிம்ம ராசிக்கு ஜூலை 20 ஆம் தேதி செவ்வாய் கிழமை மாலை 05.21 மணிக்கு இடம் பெயர்கிறார். இந்த ராசியில் செவ்வாய் செப்டம்பர் 6 ஆம் தேதி வரை இருந்து, பின் கன்னி ராசிக்கு இடம் பெயர்வார்.

|

மேஷம் மற்றும் விருச்சிக ராசியின் அதிபதியான செவ்வாய் ஒரு உமிழும் கிரகம். இத்தகைய செவ்வாய் கடக ராசியில் இருந்து வெளியேறி, சிம்ம ராசிக்கு ஜூலை 20 ஆம் தேதி செவ்வாய் கிழமை மாலை 05.21 மணிக்கு இடம் பெயர்கிறார். இந்த ராசியில் செவ்வாய் செப்டம்பர் 6 ஆம் தேதி வரை இருந்து, பின் கன்னி ராசிக்கு இடம் பெயர்வார்.

Mars Transit in Leo On 20 July 2021 Effects on Zodiac Signs in Tamil

செவ்வாயின் நட்பு கிரகங்கள் சூரியன், குரு மற்றும் சந்திரன் ஆகியவை ஆகும். சுறுசுறுப்பான மற்றும் உமிழும் கிரகமான செவ்வாய் ஒருவரது ஜாதகத்தில் முதல், நான்காவது, ஏழாவது, எட்டாவது மற்றும் பன்னிரெண்டாவது வீட்டில் இருந்தால், அது மங்கள தோஷம் உருவாக்கும். இத்தகைய செவ்வாய் கடக ராசியில் இருந்து நட்பு கிரகமான சூரியன் ஆளும் சிம்ம ராசிக்கு செல்வதால் ஒவ்வொரு ராசிக்காரரும் எம்மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதை இப்போது காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசியின் 5 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் வயிற்று பிரச்சனைகள், நெஞ்செரிச்சல் மற்றும் அசிடிட்டி ஆகிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதால் ஆரோக்கியத்தை நன்கு கவனித்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. மேலும், இந்த நேரத்தில் வாகனங்களை ஓட்டும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் தீவிர உணர்வுகளும் செயல்களும் உங்கள் அன்பானவரை அச்சுறுத்தி, உங்கள் காதல் வாழ்க்கையில் இடையூறுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால், காதல் உறவுகளில் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். பொருளாதார வாழ்க்கை நன்றாக இருக்கும். எதிர்பாராத அல்லது திடீர் ஆதாயங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. மருத்துவ மாணவர்களுக்கு சாதகமான காலமாக இருக்கும். மாணவர்கள் தேர்வுகளில் சிறப்பாக செயல்படுவார்கள்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசியின் 4 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் உங்கள் தாயின் உடல்நலம் கவலைகளைத் தரக்கூடும். எனவே அவர்களின் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள். எந்தவொரு சொத்திலும் முதலீடு செய்ய திட்டமிட்டால், நேரம் சாதகமானது. திருமணமானவர்கள் வாழ்க்கைத் துணையுடன் சில இடையூறுகளை சந்திக்க நேரிடும், இருப்பினும், பெரிய சண்டைகளைத் தவிர்ப்பதற்காக அவர்களை நிதானமாகப் புரிந்துகொள்ள முயலுங்கள். இராணுவ சேவைகள், போலீஸ் மற்றும் பொறியியலாளர்கள், மருத்துவர்கள், அறுவைசிகிச்சை ஆகியவற்றில் இருப்பவர்கள் தங்கள் தொழிலில் வளர்ச்சியைக் காண்பார்கள். உங்கள் வருவாயில் பெரும்பகுதியை உங்கள் அன்பானவர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்காக செலவிடுவதால் நிதி நிலை சமநிலையில் இருக்காது. இந்த காலகட்டத்தில் நீங்கள் சில வணிக பயணங்களுக்கும் நிதியை செலவிடலாம்.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசியின் 3 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலம் நன்மை பயக்கும் காலமாக இருக்கும். ஏனெனில் இக்காலத்தில் தனிநபர்கள் தங்கள் பணிகளை திறமையாக முடிக்க தைரியமும் சக்தியும் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் மற்றும் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். மேலும் உங்கள் முயற்சிகளால் சிறந்ததை பெற முடியும் என்பதால், வேலைகளைத் தேடுபவர்கள் பயனடைவார்கள். உங்கள் இளைய சகோதர சகோதரிகளுடனான உங்கள் உறவு மிகவும் நட்பாக இருக்காது, நீங்கள் அவர்களுடன் சண்டையிடலாம். இந்த காலத்தில் நீங்கள் புதிய நண்பர்களை உருவாக்குவீர்கள். மேலும் உங்கள் நண்பர்கள் மற்றும் அறிமுகமானவர்களுடன் நீங்கள் குறுகிய பயணங்களை மேற்கொள்ளலாம்.

கடகம்

கடகம்

கடக ராசியின் 2 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்கள் வெளிப்பாடு முரட்டுத்தனமாகவும் ஆக்ரோஷமாகவும் இருக்கலாம் என்பதால், பேசும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. உங்கள் கோபம் வீட்டில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். முக்கியமாக உங்கள் தாயுடனான உங்கள் உறவைக் கெடுக்கும். இந்த காலம் பொதுவாக மாணவர்களுக்கு சாதகமாக இருக்கும். குடும்ப வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் சில நல்ல வருவாயை எதிர்பார்க்கலாம். இந்த காலகட்டத்தில், உங்கள் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். மேலும் நீங்கள் அதிக முயற்சி இல்லாமல் உங்கள் முயற்சிகளில் வெற்றியை அடைவீர்கள்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசியின் முதல் வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்கள் அணுகுமுறை முழு நம்பிக்கையுடன் இருக்கும். இக்காலத்தில் ஒரு ராயல் வாழ்க்கையை வாழ விரும்புவீர்கள். காதலிப்பவர்கள், கூடுதல் தைரியத்துடன் இருப்பார்கள். திருமணமானவர்களைப் பொறுத்தவரை, உங்கள் துணையுடன் சில தவறான புரிதல்களை நீங்கள் சந்திக்க நேரிடும், அதை நீங்கள் அமைதியான முடிவோடு தீர்க்க முயற்சிக்க வேண்டும். . நீங்கள் அரசாங்கம் அல்லது நிர்வாகம் போன்ற சில அதிகாரபூர்வமான பதவியில் பணிபுரிந்தால் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். அதிக மன அழுத்தம் காரணமாக சில தலைவலிகளை நீங்கள் காணக்கூடும் என்பதால் இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் உடல்நலத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியிருக்கும். மேலும் நீங்கள் சில அசிடிட்டி பிரச்சனையாலும் பாதிக்கப்படலாம் .

கன்னி

கன்னி

கன்னி ராசியின் 12 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலம் உங்களுக்கு கலவையான முடிவுகளைத் தருவதாக இருக்கும். வணிகத்தில் அல்லது வேலையில் இருப்பவர்களுக்கு, நீங்கள் அதிக பண ஆதாயங்களை எதிர்பார்க்கலாம். இந்த காலகட்டத்தில் உங்கள் புகழ் மற்றும் சமூகத்தில் உங்கள் அந்தஸ்தும் அதிகரிக்கும். இருப்பினும், நீங்கள் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகலாம் மற்றும் தூக்கமில்லாத இரவுகளைக் கொண்டிருக்கலாம். எதிர்பாராத சில செலவுகளை செய்யலாம். இது உங்களை நிதி ரீதியாக நிலையற்றதாக மாற்றும். எனவே உங்கள் நிதிகளை நன்கு நிர்வகிக்க பரிந்துரைக்கப்படுகிறது. விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக மிகவும் கவனமாக இருக்க வேண்டும். திருமணமானவர்கள் தங்கள் துணையுடன் சில வாதங்களைக் காணலாம். ஆனால் அதை நீங்கள் தவிர்க்க வேண்டும்.

துலாம்

துலாம்

துலாம் ராசியின் 11 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் செவ்வாய் உங்களுக்கு வலிமையைத் தரும். நீங்கள் மிகவும் சவாலான பணிகளை எளிதில் சமாளிப்பீர்கள். வெற்றியைப் பெறுவதற்கு நீங்கள் கடுமையாக உழைப்பீர்கள். செல்வத்தை குவிப்பதில் நீங்கள் வெற்றி காண்பீர்கள். இதனால் உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடமிருந்து ஆதரவைப் பெறுவீர்கள். நீங்கள் ஒரு விளையாட்டு வீரராக இருந்தால், இந்த நேரத்தில் நீங்கள் முன்னேற்றங்களைக் காண்பீர்கள். இந்த காலத்தில் நீங்கள் வீட்டு விஷயங்களுக்காகவும், உங்கள் குடும்பத்தின் நலனுக்காகவும் செலவிடுவீர்கள். காதலிப்பவர்கள், தங்கள் துணையுடன் சண்டையில் ஈடுபடலாம். ஆனால் அதை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும் இந்த காலத்தில் நீங்கள் மிகவும் கவனமாக பேச வேண்டும்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 10 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் அரசாங்க வேலை செய்பவர்களுக்கு வெற்றிகரமான காலமாக இருக்கும். இக்காலத்தில் நீங்கள் செய்யும் எதையும் விதிமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ள வேண்டும். இக்கால கட்டத்தில் நீங்கள் முழு நம்பிக்கையுடன் இருப்பீர்கள். உங்கள் ஆளுமை வலுவானதாக இருக்கும். உங்கள் பேச்சில் உறுதியும், மக்கள் உங்களுக்குக் கீழ்ப்படிந்து மதிப்பார்கள். இருப்பினும், அலுவலக அரசியலில் ஈடுபட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது, ஏனெனில் இது உங்கள் வேலையின் வளர்ச்சியைத் தடுக்கக்கூடும். செவ்வாய் பத்தாவது வீட்டில் இருப்பதால், தாயின் ஆரோக்கியத்தை பாதிக்கும். ஆகவே அவரது ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள். திருமணமானவர்களுக்கு, இக்காலம் நல்ல காலமாக இருக்கும். குடும்பத்தில் நீங்கள் பொறுப்புடன் செயல்படுவீர்கள், எல்லோரும் உங்களை நம்புவார்கள்.

தனுசு

தனுசு

தனுசு ராசியின் 9 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இது அதிர்ஷ்ட வீடு. இக்காலத்தில் நீங்கள் ஆன்மீக பயணத்தை மேற்கொள்ளலாம். அறிஞர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சாதகமான காலம் இருக்கும். உயர்கல்வி படிக்கத் திட்டமிடுபவர்கள் இந்த காலகட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த காலக்கட்டத்தில் உங்கள் தந்தை மற்றும் ஆசிரியர்களுடனான உங்கள் உறவில் சில சிக்கல்களை நீங்கள் சந்திக்க நேரிடும். அவர்களுடன் எந்தவிதமான விவாதமும் உரையாடலும் வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. இந்த காலத்தில் வேதங்களையும் புராண பாடங்களையும் படிக்க நீங்கள் ஆர்வமாக இருப்பீர்கள். கல்லூரி அல்லது பணியிடத்தில் உங்கள் திட்டங்களை முடிக்க உங்கள் இளைய உடன்பிறப்புகளிடமிருந்து உதவி பெறுவீர்கள். இக்காலத்தில் அன்பின் உணர்வுகள் தீவிரமாக இருக்கும். காதலிப்பவர்கள் தங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல சிறந்த காலம்.

மகரம்

மகரம்

மகர ராசியின் 8 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இந்த செவ்வாய் பெயர்ச்சி ஆரோக்கியத்திற்கும், ஆறுதலுக்கும் நல்ல காலமல்ல. எனவே உங்கள் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள். வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. வாகனம் வாங்க திட்டமிட்டிருந்தால், அதற்கு இது சரியான காலம் அல்ல. குடும்பத்தில் நீங்கள் சில நெருக்கடிகளை சந்திக்க நேரிடலாம். குடும்பத்தினருடனோ அல்லது வெளியாட்களுடனோ எந்தவிதமான சண்டையிலும் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். இந்த நேரத்தில் உங்கள் வருமானத்தில் திடீர் லாபம் ஏற்படலாம். இந்த காலகட்டத்தில் புதிய நண்பர்களை உருவாக்கும் போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும், ஏனென்றால் அவர்கள் உங்களுக்கு எதிராக சதி செய்வார்கள். உங்கள் வணிகத் திட்டங்கள் மற்றும் ஒப்பந்தங்களை ரகசியமாக வைத்திருங்கள்.

கும்பம்

கும்பம்

கும்ப ராசியின் 7 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த காலகட்டத்தில் வணிக தொழில் முனைவோர் செழிப்பார்கள். நீங்கள் பணியுரியும் துறையில் ஒரு நல்ல பெயரைப் பெறுவீர்கள். எல்லா வகையிலும் உங்கள் வளங்களில் விரிவாக்கம் இருக்கும் மற்றும் வணிகம் வளரும். இந்த காலகட்டத்தில் உங்கள் நண்பர் மற்றும் அறிமுகமானவர்களிடமிருந்தும் நீங்கள் உதவி பெறலாம். நீங்கள் வேலைக்காக இக்காலத்தில் பயணிக்கலாம். இந்த குறுகிய பயணங்கள் எதிர்காலத்தில் நல்ல முடிவுகளைத் தரும். திருமண வாழ்க்கையில் நீங்கள் சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்பதால், திருமணமானவர்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மீனம்

மீனம்

மீன ராசியின் 6 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த காலம் உங்களுக்கு கலவையான முடிவுகளைத் தரும். ஆனால் சில போராட்டங்கள் மற்றும் கடின உழைப்பால் வெற்றி பெற முடியும். நீங்கள் ஒரு ஆசிரியர், அல்லது பொறியாளர், அல்லது மெக்கானிக் போன்ற வேலைகளில் இருந்தால், வெற்றி உங்களுக்கு எளிதாக வரும். சில சமயங்களில்உடன் பணிபுரிபவர்களிடமிருந்து உங்களுக்கு ஆதரவு கிடைக்கவில்லை என்பதையும் நீங்கள் காணலாம். இக்காலத்தில் நீங்கள் மனிதாபிமானத்துடன் செயல்பட வேண்டும் என்றும், நம்பத்தகாத எதிர்பார்ப்பைத் தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. இந்த காலத்தில் நீங்கள் வலுவாக இருப்பீர்கள், உங்கள் எதிரிகளை நீங்கள் வெல்ல முடியும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, எலும்பு, தோல் அல்லது கண்கள் தொடர்பான சில நோய்களால் பாதிக்கப்படக்கூடும் என்பதால் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. குடும்ப வாழ்க்கையைப் பொறுத்தவரை, நீங்கள் உங்கள் சகோதரருடன் வாக்குவாதத்தில் ஈடுபடலாம். ஆனால் அதை நீங்கள் அமைதியாக தீர்த்துக் கொள்ள வேண்டும். இந்த காலக்கட்டத்தில் உங்கள் குடும்பத்தினரிடமிருந்து உங்களுக்கு ஆதரவு கிடைக்காமல் போகலாம், இது உங்களுக்கு சற்று கடினமாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Mars Transit in Leo On 20 July 2021 Effects on Zodiac Signs in Tamil

Mars Transit in Leo Effects on Zodiac Signs in tamil: The Mars Transit in Leo will take place on 20 July 2021. Learn about remedies to perform in tamil.
Desktop Bottom Promotion