Just In
- 19 min ago
பட்ஜெட் 2023: இந்த ஆண்டு சிவப்பு நிற கைத்தறி புடவையில் பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
- 3 hrs ago
பிப்ரவரி மாதம் இந்த 4 ராசிக்காரர்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்கப்போகுதாம்... ஜாக்கிரதையா இருங்க...!
- 6 hrs ago
Today Rasi Palan 01 February 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் முக்கிய வேலை பாதியில் தடைபடலாம்...
- 15 hrs ago
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
Don't Miss
- Finance
மத்திய பட்ஜெட் 2023: மோடி அரசின் 7 முன்னுரிமைகள் - நிர்மலா சீதாராமன்
- News
சபாஷ்.. விவசாயக் கடன் இலக்கு ரூ.20 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
- Movies
தப்பா உன்னைத் தொட்டு தள்ளிவிட்டேனா.. தனாவுக்கு போன் போட்டு கேட்ட அசீம்.. அந்தர் பல்டி தான்!
- Technology
BSNL சூப்பர் ரீசார்ஜ்: மாதம் ரூ.184 தான் செலவு 395 நாளுக்கு வேலிடிட்டி.! மாஸ் ஆன பிளான் இதான்.!
- Automobiles
ஃப்ரீனாலும் இந்த 5 ரயில்கள்ல மட்டும் போயிடாதீங்க... போனவங்க எல்லாம் கழுவி கழுவி ஊத்துறாங்க!
- Sports
2 தீராத குழப்பங்கள்.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. முடிவெடுக்க தடுமாறும் ஹர்திக் பாண்ட்யா!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
மிதுனம் செல்லும் செவ்வாயால் அக்டோபர் 16 முதல் இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் பெரிய மாற்றம் ஏற்படப் போகுது...
ஜோதிடத்தில் கிரகங்களின் ராசி மாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அதுவும் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் நற்பலன்களையும், சிலர் மோசமான பலன்களையும் பெறக்கூடும். அந்த வகையில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் தான் செவ்வாய். இந்த செவ்வாய் தற்போது ரிஷப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் செவ்வாய் பகவான் அக்டோபர் 16 ஆம் தேதி ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்கிறார்.
ஜோதிடத்தில் செவ்வாய்க்கு தனி இடம் உண்டு. ஏனெனில் செவ்வாய் வலிமை மற்றும் ஆற்றலின் கிரகமாவார். மேலும் செவ்வாய் மேஷம் மற்றும் கன்னி ராசியின் அதிபதியாவார். இந்த செவ்வாயின் ராசி மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் நிச்சயம் தெரியும். இப்போது மிதுனம் செல்லும் செவ்வாயால் 12 ராசிக்காரர்களும் பெறும் பலன்கள் என்னவென்பதைக் காண்போம் வாருங்கள்.

மேஷம்
மேஷ ராசியின் 3 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த காலத்தில் மேஷ ராசிக்காரர்கள் சற்று பொறுமையிழந்து இருக்கக்கூடும். இருப்பினும், சுய கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கவும். மாணவர்களின் படிப்பில் இடையூறு ஏற்படலாம். நண்பர்களின் உதவியால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அலுவலகத்தில் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்துடன் வெளியூர் செல்ல வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் நண்பர்களின் ஆதரவைப் பெறுவார்கள்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 2 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் வேலையில் உற்சாகமாக இருப்பீர்கள். ஆனால் பேசும் போது நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். மனம் சற்று அமைதியின்றி இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உங்கள் தந்தையின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். தாயின் ஆதரவு கிடைக்கும். வேலை மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்பத்தினருடன் பயணம் மேற்கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட அறிவுறுத்தப்படுகிறது.

மிதுனம்
மிதுன ராசியின் முதல் வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். எனவே இக்காலத்தில் உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்பாட்டில் வைத்திருங்கள். உங்களின் தன்னம்பிக்கை குறையும். கோபம் அதிகம் கொள்வதைத் தவிர்க்கவும். குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் மூத்தவர்களால் அனுகூலம் உண்டாகும். சகோதரர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். சிக்கிய பணம் கிடைக்கும். பணி மாற்றம் மற்றும் இடமாற்றத்திற்கு வாய்ப்புள்ளது.

கடகம்
கடக ராசியின் 12 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் சற்று நம்பிக்கையை இழப்பீர்கள். சற்று அமைதியாக இருங்கள். உணவில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கலாம். நண்பர்களின் உதவியால் சொத்தில் முதலீடு செய்வீர்கள். கலை மற்றும் இசையில் ஆர்வம் அதிகரிக்கும். ஆடைகளுக்கு நிறைய செலவு செய்வீர்கள். அலுவலகத்தில் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். செலவுகள் அதிகரிக்கும்.

சிம்மம்
சிம்ம ராசியின் 11 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் சிம்ம ராசிக்காரர்கள் மனதில் ஏமாற்றமும், அதிருப்தியும் அடைய நேரிடும். நம்பிக்கை குறைவு ஏற்படும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. தாயாரின் ஆதரவு கிடைக்கும். செலவுகள் அதிகரிக்கும். வாகன பராமரிப்புக்கான செலவுகள் அதிகரிக்கும். இனிப்பான உணவுகளின் மீது ஆர்வம் அதிகரிக்கும்.

கன்னி
கன்னி ராசியின் 10 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். எனவே இக்காலத்தில் வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான திட்டத்தை உருவாக்குவீர்கள். சகோதரர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். எதிர்பாராத வகையில் செலவுகள் அதிகரிக்கும். இறக்குமதி, ஏற்றுமதி தொழிலில் லாபம் கிடைக்கும். வாகன வசதி அதிகரிக்கும். பணியில் மேலதிகாரிகளின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள்.

துலாம்
துலாம் ராசியின் 9 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். எனவே இக்காலத்தில் முழு நம்பிக்கையுடன் இருப்பீர்கள். வாழ்வில் சுயக்கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். சற்று சோம்பேறித்தனமாக இருப்பீர்கள். வாழ்க்கைத் துணையிடம் இருந்து விலக வாய்ப்புள்ளது. பணியிடத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். தாயின் ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் மேலதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 8 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலகட்டத்தில் பேச்சில் கடுமை இருக்கும். எனவே பேசும் போது சற்று நிதானமாக இருங்கள். ஆடையின் மீதான ஆவல் அதிகரிக்கும். தாயுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். பணியிடத்தில் உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு கிடைக்கும். சொத்துக்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தனுசு
தனுசு ராசியின் 7 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் வாழ்க்கையில் அமைதியின்மையை உணர்வீர்கள். இனிப்பு உணவின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். சொத்து மூலம் வருமானம் அதிகரிக்கும். பணியில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. பணியிடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மொத்தத்தில் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புள்ளது.

மகரம்
மகர ராசியின் 6 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். எனவே இக்காலத்தில் நம்பிக்கையுடன் இருப்பீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். பணியில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் வீட்டை விட்டு விலகி இருக்க வேண்டியிருக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும்.

கும்பம்
கும்ப ராசியின் 5 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதன் விளைவாக இக்காலத்தில் நம்பிக்கை குறைவு ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தினருடன் பயணம் செய்ய வாய்ப்புள்ளது. ஆரோக்கிய பிரச்சனை அதிகரிக்கலாம். பழைய நண்பர்களின் உதவியால் நல்ல தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். பேச்சில் நிதானமாக இருங்கள். இக்காலத்தில் உங்கள் செலவுகள் அதிகரிக்கும்.

மீனம்
மீன ராசியின் 4 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். இருப்பினும் அதிகப்படியான கோபத்தைத் தவிர்க்கவும். தாயுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். வேலை காரணமாக வேறு இடங்களுக்கு செல்ல நேரிடும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தினர்களின் ஆதரவு கிடைக்கும். ஆடைகளுக்கான செலவுகள் அதிகரிக்கும். தாயின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)