For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மிதுனம் செல்லும் செவ்வாயால் அடுத்த 2 மாசம் இந்த ராசிக்காரங்க ரொம்ப கவனமா இருக்கணுமாம்.. உங்க ராசியும் இருக்கா?

செவ்வாய் ரிஷப ராசியில் இருந்து வெளியேறி, மிதுன ராசிக்கு ஏப்ரல் 14 ஆம் தேதி புதன்கிழமை 1:16 மணிக்கு இடம் பெயர்கிறார். செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசியின் அதிபதி. அதே சமயம் செவ்வாய் ஒரு உமிழும் கிரகம்.

|

செவ்வாய் ரிஷப ராசியில் இருந்து வெளியேறி, மிதுன ராசிக்கு ஏப்ரல் 14 ஆம் தேதி புதன்கிழமை 1:16 மணிக்கு இடம் பெயர்கிறார். செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசியின் அதிபதி. அதே சமயம் செவ்வாய் ஒரு உமிழும் கிரகம்.

Mars Transit in Gemini on 14 April 2021 Effects on Zodiac Signs in Tamil

சூரியன், குரு மற்றும் சந்திரன் ஆகியவை செவ்வாயின் நட்பு கிரகங்களாகும். செவ்வாய் ஒரு சுறுசுறுப்பான மற்றும் உமிழும் கிரகம் மற்றும் இது ஜாதகத்தில் முதல், நான்காவது, ஏழாவது, எட்டாவது மற்றும் பன்னிரெண்டாவது வீட்டில் இருந்தால், அது மங்கள தோஷம் உருவாகும். இத்தகைய செவ்வாய் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்வதால் ஒவ்வொரு ராசிக்கும் எம்மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன என்பதை இப்போது காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசியின் 3 ஆவது வீட்டின் வழியே செவ்வாய் செல்கிறார். இக்காலம் இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமான காலமாக இருக்கும். தொழில் வாழ்க்கையைப் பொறுத்தவரை, உங்கள் இலக்குகளை முடிக்க உங்களுக்கு கூடுதல் கடின உழைப்பு தேவைப்படலாம். இது தவிர, சொந்த வாழ்க்கை மற்றும் னிப்பட்ட வாழ்க்கைக்கு இடையே சமநிலையை வெற்றிகரமாக பராமரித்தால், உங்கள் தொழில் தொடர்பான குறிக்கோளை எளிதில் அடைவீர்கள். இக்காலத்தில் வேலை இல்லாதவர்கள் அல்லது வேலை தேடுபவர்கள் விரும்பிய வேலை வாய்ப்புக்களைப் பெறுவார்கள். எதிர்கால முதலீடூகள் மற்றும் பிற நிதி திட்டங்கள் குறித்து கவனமாக இருக்க வேண்டும். முடிந்தால், இக்காலத்தில் அவற்றைத் தவிர்ப்பது நல்லது. தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இக்காலத்தில் மெதுவாக குணமடையக்கூடும். இருப்பினும், அனைத்து விஷயங்களிலும் பதட்டமடைவதைத் தவிர்க்கவும். இல்லாவிட்டால், அது இரத்த அழுத்தத்தை அதிகரித்துவிடும். காதலிப்பவர்கள் வாக்குறுதிகள் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. உடன்பிறப்புகளுடனான உறவு மேம்படும். இக்கால கட்டத்தில் குடும்பத்துடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசியின் 2 ஆவது வீட்டின் வழியே செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் பண ஆதாயங்களைப் பெற வாய்ப்புள்ளது. தொழில் வாழ்க்கையைப் பொறுத்தவரை, முதலீட்டாளர்கள் முந்தைய முதலீடுகளில் இருந்து லாபத்தைப் பெறலாம். வேலைத் தேடுபவர்கள் தங்கள் துறையில் புதிய வேலை வாய்ப்புக்களைப் பெற வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் பதவி உயர்வைப் பெறலாம். இக்காலத்தில் வருமான உயர்வைக் காணும் அதே சமயம் தேவையற்ற செலவுகளையும் காண்பீர்கள். தொழில் வளர்ச்சியில் தடைகளை உருவாக்கக்கூடும். எனவே, உங்கள் உயர் அதிகாரிகளுடன் அமைதியாக நடந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, இக்காலம் ஒரு நல்ல நேரமாக இருக்கும். உங்கள் அன்புக்குரியவர்களுடன் தரமான நேரத்தை நீங்கள் தொடர்ந்து அனுபவிப்பீர்கள். இக்காலத்தில் நீங்கள் பேசும் வார்த்தைகள் மற்றவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தக்கூடும். எனவே பேச்சில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசியின் முதல் வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இது இந்த ராசிக்காரர்களுக்கு கலவையான முடிவுகளைக் கொண்டு வரக்கூடும். தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் சிறந்த நேரமாக இருக்கும். தொழில் வாழ்க்கையைப் பொறுத்தவரை, நீங்கள் நேர்மறையாக உணர்வீர்கள். உங்களின் பணி இலக்குகளை எளிதில் அடைவீர்கள். ஆனால் பல சந்தர்ப்பங்களில், நீங்கள் காரியங்களைச் செய்ய முடியாமல் போகலாம். இதன் காரணமாக, நீங்கள் உங்கள் உடன் வேலை செய்பவர்களுடன் வாதங்களில் ஈடுபடலாம். எனவே, உங்கள் மனதை குளிர்ச்சியாக வைத்திருப்பது நல்லது. பணிபுரிபவர்கள் இக்காலத்தில் பதவி உணர்வு பெற வாய்ப்புள்ளது. வர்த்தகர்கள் உள்நாட்டு அல்லது சர்வதேச விற்பனையிலிருந்து லாபம் ஈட்டலாம். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, இக்காலத்தில் அதிகமான உடல்நல பிரச்சனைகளை காணலாம். அதில் இரத்த அழுத்தம் அதிகரிக்கக்கூடும் அல்லது தலைவலியால் பாதிக்கப்படலாம். இக்கால கட்டத்தில் திருமண உறவில் சிக்கல்களை சந்திக்கக்கூடும். இந்த சிக்கல்களைத் தவிர்க்க அமைதியாகவும், பொறுமையுடனும் இருக்க வேண்டும்.

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சி காலம் சாதகமற்றதாக இருக்கும். எனவே தொழில்முறை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் அதிக கவனம் தேவைப்படலாம். தொழில் வாழ்க்கையைப் பொறுத்தவரை, உங்கள் வருமானத்திற்கும் செலவினங்களுக்கும் இடையில் ஒரு சமநிலையை பராமரிக்காவிட்டால், மன அழுத்தத்தால் அவதிப்படக்கூடும். எனவே வருமானத்திற்கு ஏற்ப திட்டமிட்டு செலவு செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. சர்வதேச வருமான ஆதாரங்கள் காரணமாக வணிகர்கள் லாபம் ஈட்டலாம். இக்காலத்தில் வணிக பயணங்கள் தேவையற்ற செலவுகளை உண்டாக்கும் என்பதால் அவற்றை மேற்கொள்வதைத் தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது. தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, உங்கள் உடன்பிறப்புகளுடனான உறவு பாதிக்கப்படலாம். உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். எனவே அவர்களின் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள். இந்த ராசிக்காரர்களின் ஆரோக்கியத்தைப் பொறுத்தரை, கவலை காரணமாக உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசியின் 11 ஆவது வீட்டின் வழியே செவ்வாய் செல்கிறார். இக்காலம் இந்த ராசிக்காரர்களுக்கு சிறந்த காலமாக இருக்கும். தொழில் வாழ்க்கையைப் பொறுத்தவரை, உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறவீர்கள். உங்கள் இலக்குகளை அடைய தடையாக உள்ளதை எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். இக்காலத்தில் உங்களின் எதிரிகளை வெல்வீர்கள். இக்கால கட்டத்தில் பதவி உயர்வைப் பெறலாம். வர்த்தகவர்கள் லாபம் ஈட்ட புதிய உத்திகளை உருவாக்கலாம். வேலை தேடுபவர்கள் சாதகமான முடிவுகளைப் பெறலாம். உங்கள் முந்தைய முதலீடுகள் லாபத்தை தந்து உதவக்கூடும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, உடன்பிறப்புகளிடமிருந்து நீங்கள் ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் பழைய நண்பர்களைச் சந்திக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். திருமணமான தம்பதிகள் தங்கள் காதல் வாழ்க்கையில் தரமான நேரத்தை தொடர்ந்து செலவிடுவார்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்களுக்கு சாதகமான காலம் இருக்கலாம். வரவிருக்கும் நாட்களில் உங்கள் உடல்நலப் பிரச்சினைகளை சமாளித்து வெளிவருவீர்கள்.

கன்னி

கன்னி

கன்னி ராசியின் 10 ஆவது வீட்டின் வழியே செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த பெயர்ச்சி இந்த ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும் ஒன்றாகவே இருக்கும். இக்காலத்தில் தொழில் வளர்ச்சி அடையக்கூடும். உங்கள் முதலாளியிடமிருந்து உங்கள் வேலையில் கூடுதல் பொறுப்புகளைப் பெறலாம். வேலையை மாற்ற விரும்புவோர் வெற்றி பெறலாம். உங்கள் உயர் அதிகாரிகளிடமிருந்து ஆதரவைப் பெறலாம். இக்காலத்தில் நீங்கள் வேலையில் பிஸியாக இருப்பதைக் காணலாம். மேலும் இது உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைத் தொந்தரவு செய்யலாம். உங்கள் அன்புக்குரியவர்களுடன் நீங்கள் நேரத்தை செலவிட முடியாமல் போகலாம். உங்கள் பிஸியான தொழில் வாழ்க்கை காரணமாக, உங்கள் ஆரோக்கியத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். அதுவும் அது உங்கள் இரத்த அழுத்தம் அல்லது இதயம் தொடர்பான பிரச்சினைகளாக இருக்கலாம். இதுப்போன்ற உடல்நல பிரச்சனைகளைத் தவிர்க்க, தினமும் உடற்பயிற்சி செய்ய அறிவுறுத்தப்படுகிறீர்கள். உங்கள் தந்தையின் ஆரோக்கியத்தில் குறைபாடு ஏற்படக்கூடும் என்பதால், அவரின் உடல்நிலையை கவனியுங்கள்.

துலாம்

துலாம்

துலாம் ராசியின் 9 ஆவது வீட்டின் வழியே செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலம் இந்த ராசிக்காரர்களுக்கு கலவையான முடிவுகளையே தரும். தொழில் வாழ்க்கையைப் பொறுத்தவரை, வேலை செய்பவர்கள் தங்கள் குடும்பம் அல்லது குடும்பத்தினரின் ஆரோக்கிய பிரச்சனைகளுக்காக அதிக பணத்தை செலவழிக்கலாம். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்கள் தோல்வியைத் தரலாம். மேலும் இந்த பயணங்களுக்காக அதிக செலவு செய்ய வேண்டியிருக்கும். உங்கள் தோல்வியுற்ற பயணங்கள் உங்கள் உயர் அதிகாரிகளுடன் வாதங்களுக்கு வழிவகுக்கும். இக்காலத்தில் முதலீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, குடும்பத்தினருடன் பேசும் போது, உங்கள் வார்த்தைகளை கவனித்துக் கொள்ளுங்கள். இல்லையெனில், நீங்கள் அவர்களுடன் மோதலில் ஈடுபடலாம். இக்காலத்தில் உங்கள் துணையுடன் நல்ல நேரத்தை அனுபவிக்கலாம்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 8 ஆவது வீட்டின் வழியே செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையின் ஒரு கடினமான கட்டத்திற்கு ஆளாகக்கூடும். பணிபுரிபவர்கள் தங்கள் இலக்குகளை நிறைவேற்ற பல தடைகளைக் காணலாம். பணியிடத்தில் பிரச்சனைகள் திடீரென அதிகரிப்பதைக் காணலாம். உங்களின் உற்பத்தி திறன் மற்றும் வேலையில் செயல்திறன் பாதிக்கப்படலாம். இது மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும். இக்காலத்தில் அவசரமாக முடிவுகளை எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. உங்கள் இலக்குகளை அடைய அமைதியைக் கையாள வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, இக்காலத்தில் துணையுடனான உறவை நீங்களே கெடுக்கக்கூடும். எனவே பேசும் வார்த்தைகளைக் கவனித்து பேசுங்கள். மேலும் உங்கள் வார்த்தைகள் உங்கள் குடும்ப உறுப்பினர்களையும் பாதிக்கலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உடல்நலம் குறித்து கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். வயிற்று வலி, தோல் பிரச்சனைகள் அல்லது ஹார்மோன் பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.

தனுசு

தனுசு

தனுசு ராசியின் 7 ஆவது வீட்டின் வழியே செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சாதகமான முடிவுகளைப் பெற வாய்ப்புள்ளது. தொழில் வாழ்க்கையைப் பொறுத்தவரை, சாதகமான முடிவுகளைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம். வேலை தேடுபவர்கள் புதிய வேலையைப் பெற வாய்ப்புள்ளது. ஏற்கனவே பணியில் உள்ளவர்கள் அவர்கள் விரும்பிய இடத்திற்கு பதவி உயர்வை அல்லது இட மாற்றத்தைப் பெறலாம். வணிகர்கள் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்துவதற்காக வெளிநாடுகளில் இருந்து லாபத்தையும் நிதி உதவியையும் பெறலாம். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, குடும்பத்துடன் ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டிருக்கலாம். உங்களின் மாறுபட்ட எண்ணங்களும், பார்வையும் குடும்ப உறுப்பினர்களுடன் வேறுபாடுகளை உருவாக்கக்கூடும். இதனால் உங்கள் துணையுடன் தவறான புரிதல்கள் ஏற்படலாம்.

மகரம்

மகரம்

மகர ராசியின் 6 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த செவ்வாய் பெயர்ச்சி ஆற்றலுடனும், உற்சாகமாகவும் இருக்கும். தொழில் வாழ்க்கையைப் பொறுத்தவரை, பணிபுரிபவர்கள் வேலையில் நன்மைகளையும், மகத்தான வெற்றிகளையும் பெறலாம். உங்களின் கடின உழைப்பு உயர் அதிகாரிகளால் அங்கீகரிக்கப்படலாம். இது உங்களுக்கு சம்பள உயர்வு அல்லது பதவி உயர்வு பெற உதவக்கூடும். தொழிலை விரிவுபடுத்த விரும்பும் வணிகர்களுக்கு வங்கிகளிடமிருந்து நிதி உதவி கிடைக்கும். வணிகர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுடன் வாதாடுவதைத் தவிர்க்குமாறு பரிந்துரைக்கப்படுகிறார்கள். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, உங்கள் துணையுடன் தரமான நேரத்தை செலவிடலாம். உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கக்கூடும். ஒட்டுமொத்தமாக தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை சாதகமான நேரமாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நீண்ட கால சுகாதார பிரச்சினைகளிலிருந்து வெளியே வரலாம். நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க, நீங்கள் வெளியே உணவை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

கும்பம்

கும்பம்

கும்ப ராசியின் 5 ஆவது வீட்டின் வழியே செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சாதகமான விளைவுகளைப் பெறலாம். பணிபுரிபவர்கள், சாதகமான முடிவுகளைப் பெறலாம். புதிய யோசனைகளை நீங்கள் செயல்படுத்துவது உங்கள் பணி திறனை மேம்படுத்த உதவும். இறுதியில், இது பதவி உயர்வு பெற உங்களுக்கு உதவும். தனிப்பட்ட வாழ்க்கையை பொறுத்தவரை, உங்கள் உணர்வுகளை நீங்கள் காதலிப்பவரிடம் வெளிப்படுத்த உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். திருமணமான தம்பதிகள் தங்கள் உறவில் ஏற்ற தாழ்வுகளை அனுபவிக்கலாம். தவறான புரிதல்களைத் தவிர்க்க உங்கள் துணை சொல்வதைக் காது கொடுத்து கேட்க அறிவுறுத்தப்படுகிறது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நீங்கள் அமிலத்தன்மை அல்லது வாய்பு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், வெளியில் உணவு வாங்கி சாப்பிடுவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

மீனம்

மீனம்

மீன ராசியின் 4 ஆவது வீட்டின் வழியே செவ்வாய் செல்கிறார். இதன் விளைவாக இக்காலத்தில் நீங்கள் ஒரு சிறந்த நேரத்தை அனுபவிக்கலாம். பணிபுரிபவர்கள், தங்கள் இலக்குகளை அடைய கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். மேலும், நீங்கள் அதிக பணி பொறுப்புகளைப் பெறலாம். ஆனால் அது உங்கள் உயர் அதிகாரிகளால் அங்கீகரிக்கப்படாமல் போகலாம். உங்கள் பணியிடத்தில் வாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது. வணிகர்கள் நேர்மறையான முடிவுகளையும் வெளிநாடுகளில் இருந்து விரும்பிய ஆதரவையும் பெறலாம். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் மோதலில் நீங்கள் ஈடுபடலாம். உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையில் தவறான தொடர்பு அல்லது தவறான புரிதல் காரணமாக ஈகோ மோதல்கள் இருக்கலாம். இக்காலத்தில் உங்கள் தாயின் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உயர் இரத்த அழுத்தம், இதயம் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் இரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைக் கொண்டவர்கள், தங்கள் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள். மன அழுத்தத்தை எடுத்துக்கொள்வதையும், ஆக்கிரோஷமாக இருப்பதையும் தவிர்ப்பது நல்லது. இல்லையெனில், உங்கள் உடல்நிலை மோசமடையக்கூடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Mars Transit in Gemini on 14 April 2021 Effects on Zodiac Signs in Tamil

Mars Transit in Gemini Effects on Zodiac Signs in tamil: The Mars Transit in Gemini will take place on 14 April 2021. Learn about remedies to perform in tamil.
Story first published: Monday, April 12, 2021, 16:30 [IST]
Desktop Bottom Promotion