Just In
- 2 hrs ago
இந்த படத்துல முதலில் உங்களுக்கு என்ன தெரியுது சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்...
- 2 hrs ago
தினமும் 10000 அடிகள் நடந்தால் எடையைக் குறைக்கலாம் என்பது உண்மையா? ஆய்வு சொல்லும் உண்மை என்ன?
- 3 hrs ago
கொரிய பெண்கள் அழகாக பொலிவாக இருக்க இந்த ஒரு விஷயம் தான் காரணமாம்... அது என்ன தெரியுமா?
- 4 hrs ago
கத்திரிக்காய் பொடி கறி
Don't Miss
- Finance
ரூ.7 டூ 1005: ரூ.1 லட்சம் 1 கோடியான பங்கு.. என்ன நிறுவனம் அது.. உங்க கிட்ட இருக்கா?
- Movies
ஜான்விக்கு சினிமாத்துறை பற்றி அட்வைஸ் கொடுத்த நடிகை ஸ்ரீதேவி
- News
அசிங்கப்படுத்திட்டாங்க! ‘ஆல்அவுட்’ குடித்து அட்மிட் ஆன நடிகை! நள்ளிரவில் எஸ்கேப்பானவரை தேடிய போலீஸ்!
- Automobiles
தன்னம்பிக்கை... எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் கன்னியாகுமரி-காஷ்மீர் பயணம்... பிரம்மிக்க வைத்த கர்நாடக யூ-டியூபர்!
- Sports
இவருக்கா இந்த நிலைமை? மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோயிப் அக்தர்.. ரசிகர்களுக்கு கோரிக்கை
- Technology
50எம்பி கேமராவுடன் களமிறங்கும் Moto G62 போன்: எப்போது அறிமுகம் தெரியுமா?
- Education
கால்நடை ஆலோசகர் ஆகனும்?
- Travel
"ஜுவல் ஆஃப் பே ஆஃப் பெங்கால்" என்றழைக்கப்படும் கடற்கரை எதுவென்று உங்களுக்கு தெரியுமா?
மேஷம் செல்லும் செவ்வாயால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதா இருக்கப் போகுது...
ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுகின்றன. இப்படி கிரகங்கள் ராசியை மாற்றும் போது சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாகவும், சிலருக்கு துரதிர்ஷ்டமானதாகவும் இருக்கும். ஜோதிடத்தில் செவ்வாய் தைரியம், வலிமை ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறது. இத்தகைய செவ்வாய் மேஷ ராசியின் அதிபதியாவார். செவ்வாய் கடக ராசியில் வலுவிழந்தும், மகர ராசியில் வலிமையாகவும் இருப்பார்.
செவ்வாய் இதுவரை மீன ராசியில் பயணித்து வந்தார். 2022 ஜூன் 27 ஆம் தேதி செவ்வாய் மீனத்தில் இருந்து தனது சொந்த ராசியான மேஷ ராசிக்கு செல்கிறார். செவ்வாயின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளையும் பாதித்தாலும், சிலருக்கு நல்ல பலன்களும், சிலருக்கு கெட்ட பலன்களும் கிடைக்கும். இப்போது செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கப் போகின்றன என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் அதிபதியான செவ்வாய் இப்பெயர்ச்சியால் முதல் வீட்டிற்கு செல்கிறார். இதனால் பணியிடத்தில் மிகவும் ஆற்றலுடன் செயல்படுவீர்கள். இக்காலத்தில் நேர்மறை ஆற்றலுடன் நிறைந்திருப்பீர்கள். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு இக்காலம் மிகவும் நல்ல பலன்களைத் தரும். பணிடத்தில் வெற்றி பெற்று அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். பலருக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆனால் இதற்கு சற்று கடினமாக உழைக்க வேண்டும்.

மிதுனம்
மிதுன ராசியின் 11 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இப்பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் கணிசமான அதிகரிப்பைக் காணலாம். மேலும் இக்காலத்தில் ஒருவித நல்ல லாபமும் கிடைக்கும். உங்களின் பணம் எங்கேனும் சிக்கியிருந்தால், இக்காலத்தில் திரும்பப் பெறுவீர்கள். அதே வேளையில் பணியிடத்தில் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். இது உங்களின் தொழில் வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் வழிவகுக்கும்.

கடகம்
கடக ராசியின் 10 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். செவ்வாய் பத்தாம் வீட்டில் இருப்பது மகத்தான வெற்றியைத் தரும். அதுவும் இந்த ராசிக்காரர்களுக்கு சம்பள உயர்வைத் தருவதோடு, பதவி உயர்வுக்கான வாய்ப்புக்களையும் அதிகரிக்கும். பணியிடத்தில் உங்களின் பெரிய முக்கியமான வேலைகள் உடன்பணிபுரிபவரகளின் உதவியுடன் முடிப்பீர்கள். உங்களின் கடின உழைப்பு உயர் அதிகாரிகளால் பெரிதும் பாராட்டப்படும். காதலிப்பவர்கள் இக்காலத்தில் தங்கள் உறவை மேலும் வலுப்படுத்துவார்கள்.

சிம்மம்
சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் பொருளாதார நிலை வலுவாகும். பணிபுரிந்தாலும், வியாபாரம் செய்தாலும் மகத்தான வெற்றி கிடைக்கும். இது தவிர இக்காலத்தில் உங்கள் தந்தையின் முழு ஆதரவும் கிடைக்க வாய்ப்புள்ளது. சகோதர சகோதரிகளின் ஆதரவால் எந்த பிரச்சனையில் இருந்தும் விடுபடுவீர்கள். சொத்து வாங்க விரும்புவோருக்கு அல்லது முதலீடு செய்ய நினைப்போருக்கு இந்த நேரம் சிறப்பாக இருக்கும். வருமான உயர்வால் மகிழ்ச்சியடைவீர்கள். சிலர் இக்காலத்தில் நீண்ட தூர பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது.