Just In
- 22 min ago
உங்களுக்கு வயசாகாம எப்பவும் இளமையா ஜொலிக்க நீங்க என்ன பண்ணனும் தெரியுமா?
- 32 min ago
ராசிப்படி கிருஷ்ணருக்கு எந்த பொருளை படைத்தால், அவரின் முழு அருள் கிடைக்கும் தெரியுமா?
- 52 min ago
உங்கள் மூட்டுகளில் இந்த பிரச்சினை இருக்கா? அப்ப உங்க இதயம் ஆபத்தில் இருக்குனு அர்த்தம்... ஜாக்கிரதை!
- 2 hrs ago
இந்த 5 ராசிக்காரங்க எந்த உறவிலும் கடைசி வர உறுதியா இருக்க மாட்டாங்களாம்... ஏன் தெரியுமா?
Don't Miss
- Technology
Moto G62 5G ரிவ்யூ- இந்த மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போனை வாங்கலாமா? வேண்டாமா?
- Movies
ரெண்டு பேரில் யார் வேண்டும்.. மகள் இனியாவிடம் சிக்கலின் முடிச்சை கொடுத்த பாக்கியா!
- News
செஸ் ஒலிம்பியாட் செலவு கணக்கை பொதுவில் வைக்கிறோம்.. அதிமுகவுக்கு அமைச்சர் மெய்யநாதன் சவால்!
- Automobiles
எந்த பிரச்சனையும் இல்லை.. நடுவானிலேயே விமானிகள் அசந்து தூங்குவார்கள்... ஆனால் ஒன்று மட்டும் முக்கியம்...
- Sports
இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு தடை எதற்காக தடை.. பல முறை வந்த எச்சரிக்கை.. முழு விவரம் இதோ!
- Finance
8 நிமிடங்களில் தேவையான சேவை.. கொரோனாவினால் தோன்றிய புதிய வணிகம்.. அசத்தும் கேரளா மாணவன்!
- Travel
உலகின் மிக உயரமான ரயில்வே பாலத்தில் பறந்த இந்திய தேசக் கொடி!
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
நவகிரகங்களில் செவ்வாய் 2022 ஜூன் 27 ஆம் தேதி மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு செல்கிறார். ஜோதிடத்தில் செவ்வாய் ஆற்றல் மற்றும் சக்தியின் ஆதாரமாக கருதப்படுகிறது. செவ்வாய் ஒரு உமிழும் கிரகம். இத்தகைய செவ்வாய் குரு ஆளும் மீன ராசியில் இருந்து, தனது சொந்த ராசியான மேஷ ராசிக்கு செல்கிறார். சொந்த ராசிக்கு செவ்வாய் செல்வதால், இந்த செவ்வாய் பெயர்ச்சி மிகவும் முக்கியமானது ஆகும்.
ஏற்கனவே மேஷ ராசியில் ராகு பயணித்து வருகிறார். இந்நிலையில் செவ்வாய் மேஷம் செல்லும் போது, ராகுவுடன் இணைந்து பயணிக்கும். செவ்வாய் ராகுவுடன் சேர்ந்து பயணிப்பதால் சில ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகள் அதிகரிக்கும். இப்போது மேஷம் செல்லும் செவ்வாயால் எந்த ராசிக்காரர்கள் எல்லாம் பிரச்சனைகளை சந்திக்கப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு செலவுகள் அதிகமாக இருக்கும். உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் நிதி நெருக்கடியை சந்திக்க வேண்டியிருக்கும். இக்காலத்தில் உங்கள் எதிரிகள் உங்களுக்கு எதிராக சதி செய்யலாம். உடன்பிறப்புகளிடம் பேசும் போது நாக்கை கட்டுப்படுத்துங்கள். இக்காலத்தில் வணிக முடிவுகளை எடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். பணியிடத்தில் சண்டைகளைத் தவிர்த்திடுங்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். இக்காலத்தில் இரத்தம் தொடர்பான நோய்கள், விபத்துகள் அல்லது அறுவை சிகிச்சைகளை சந்திக்க நேரிடும். எனவே வாகனம் ஓட்டும் போது கவனமாக இருங்கள். அளவாக சாப்பிடுங்கள். ஜங்க் உணவுகளைத் தவிர்த்திடுங்கள். தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கை நிலையற்றதாக இருக்கும். இக்காலத்தில் சகோதரர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். முக்கியமாக உங்கள் பேச்சை கட்டுப்படுத்துங்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இப்பெயர்ச்சியால் பெரும்பாலான நேரங்களில் கோபமாகவும் விரக்தியாகவும் இருப்பார்கள். உங்களின் முயற்சிகளுக்கு ஏற்ற பலன் கிடைக்காது. கடின உழைப்பிற்கு பலன் கிடைக்காமல் போகும். உங்களின் தவறான பேச்சு குடும்பத்தில் சச்சரவுகளுக்கு வழிவகுக்கும். உணவுகளில் கவனம் செலுத்துங்கள். இல்லாவிட்டால் ஆரோக்கியம் மோசமடையும். தொழில் ரீதியாக நேரம் நன்றாக இருந்தாலும் உறவுகளில் அதிக கவனம் தேவை.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் செவ்வாய் பெயர்ச்சியால் பணியிடத்தில் சக ஊழியர்களிடம் நன்றாக நடந்து கொள்வார்கள். இந்த காலத்தில் செலவுகள் அதிகரிக்கலாம். இக்காலத்தில் உங்கள் இலக்குகளை அடைய கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உங்களின் செலவுகளை கவனியுங்கள்.

செவ்வாய் தோஷத்தைப் போக்கும் பரிகாரங்கள்
* செவ்வாய் பெயர்ச்சியால் சந்திக்கும் பிரச்சனைகளைத் தவிர்க்க ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் நவகிரகம் அல்லது காயத்ரி மந்திரம் சொல்லுங்கள்.
* செவ்வாய் கிழமை விரதம் இருங்கள்.
* செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செம்பு அல்லது வெள்ளி மோதிரத்தை அணிவது நல்லது.
* செவ்வாய் தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இடது கையில் வெள்ளி வளையல் அணிய வேண்டும்.
* செவ்வாய் கிழமைகளில் பசுக்களுக்கு வெல்லத்தைக் கொடுங்கள்.