Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
Mars transit 2022: செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் 12 ராசிக்கும் எப்படி இருக்கப் போகுது தெரியுமா?
செவ்வாய் தற்போது மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் 2022 ஜூன் 27 ஆம் தேதி செவ்வாய் அதிகாலை 5.39 மணிக்கு செவ்வாய் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு செல்கிறார்.

நவகிரகங்களில் மாபெரும் வலிமைமிக்க கிரகமாக கருதப்படும் செவ்வாய் தற்போது மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் 2022 ஜூன் 27 ஆம் தேதி செவ்வாய் அதிகாலை 5.39 மணிக்கு செவ்வாய் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு செல்கிறார். ஒருவரது ராசியில் செவ்வாய் பலவீனமாக இருந்தால், அவர்கள் உணர்ச்சி ரீதியாக பலவீனமாக இருப்பதோடு, உறுதியற்ற தன்மையுடனும் இருப்பார்கள். அதுவே செவ்வாய் நல்ல நிலையில் இருந்தால், அவர் தங்கள் திறமைகளை திறம்பட வெளிப்படுத்துவார்கள். வாழ்க்கையில் உள்ள அனைத்து தடைகளையும் எதிர்த்து போராடும் தைரியமும் அவர்களுக்கு இருக்கும். இப்போது மேஷம் செல்லும் செவ்வாயால் 12 ராசிக்காரர்களும் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் பணியிடத்தில் நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும். இது உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை கொண்டுவரும். அலுவலகத்தில் அனைவரும் பாராட்டுவதால், இக்காலத்தில் விரும்பிய முடிவுகளைப் பெறுவீர்கள். இக்காலத்தில் பணிபுரிபவர்கள் பதவி உயர்வு கிடைக்கும். தாயின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. திருமணம் செய்ய விரும்புபவர்களுக்கு இது சரியான காலம்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 12 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் செலவுகள் அதிகமாக இருக்கும். நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக இருக்கும். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும். உடன்பிறந்தவர்களுடன் வாக்குவாதங்களில் ஈடுபடாதீர்கள். ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். உங்கள் தாயாரிடம் இருந்து இக்காலத்தில் சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள்.

மிதுனம்
மிதுன ராசியின் 11 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் சிக்கிய பணம் திரும்ப கிடைக்கும். அலுவலகத்தில் உங்களின் கடின உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். அன்பை தேடுபவர்களுக்கு நேரம் சாதகமாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். ஜங்க் உணவுகளைத் தவிர்த்திடுங்கள். இக்காலத்தில் பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். குழந்தைகளிடம் இருந்து நல்ல செய்தியை பெறுவீர்கள்.

கடகம்
கடக ராசியின் 10 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் பணியிடத்தில் உங்கள் உடன்பணிபுரிபவர்களின் உதவியால் பெரிய திட்டத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். கடின உழைப்பிற்கு சரியான அங்கீகாரம் கிடைப்பதோடு பதவி உயர்வும் கிடைக்கும். வாக்குவாதத்தால் உங்கள் இமேஜ் பாழாகலாம். எனவே கவனமாக இருங்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் நேரம் சாதகமாக இருக்கும்.

சிம்மம்
சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் பொருளாதார ரீதியாக வலுவாக இருப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். ஏதாவது புதிய முதலீடு செய்ய திட்டமிட்டால், அதற்கு இது சரியான காலம். வருமான உயர்வால் மகிழ்ச்சி அடைவீர்கள். பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்க, உங்கள் வாழ்க்கைத் துணையுடன் தரமான நேரத்தை செலவிடுங்கள்.

கன்னி
கன்னி ராசியின் 8 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்காது. மேலும் பல சவால்களை சந்திப்பீர்கள். கடினமாக உழைப்பீர்கள். ஆனால் அதில் வெற்றி பெற முடியாது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். வியாபாரிகள் நல்ல லாபத்தை அடைவார்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும் மற்றும் உங்கள் மாமியார் மாமனார்களுடனான உறவு மேம்படும்.

துலாம்
துலாம் ராசியின் 7 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் உங்களுக்கும் உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் இடையே மனக்கசப்புகள் இருக்கும். பணிச்சுமை காரணமாக இருவருக்கும் இடையே தவறான புரிதல் மற்றும் டென்சன் இருக்கும். உங்கள் ஆரோக்கியம் மேம்படும். பணியிடத்தில் பொறுமையுடன் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். முக்கியமாக இக்காலத்தில் மனம் திறந்து பேசுவதன் மூலமும், பிரச்சனைகளை புரிந்து கொள்வதன் மூலமும், கடந்த கால பாரத்தைக் குறைக்க முடியும்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 6 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் மாணவர்களுக்கு இக்காலத்தில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்கள் இக்காலத்தில் வெற்றி பெறுவார்கள். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாமல் செலவழிக்காமல் உங்கள் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது.

தனுசு
தனுசு ராசியின் 5 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் படிப்பிற்காக வெளியூர் செல்லும் மாணவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். நிதியைப் பொறுத்தவரை, செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். அப்படியென்றால் தான் பணத்தை சேமிக்க முடியும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே ஆரோக்கியமான உணவை உண்து ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே சில பிரச்சனைகள் இருக்கும்.

மகரம்
மகர ராசியின் 4 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் புதிய வாகனம் அல்லது சொத்து வாங்க திட்டமிட்டால், அதில் வெற்றி கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். வீட்டில் அமைதியும், நல்லிணக்கமும் நிலவ வேண்டும். நீங்களும், உங்கள் வாழ்க்கை துணையும் ஒருவரை ஒருவர் ஆதரிப்பீர்கள். யாராவது உங்களைப் புண்படுத்தினால், அவர்களிடம் இருந்து விலகி இருங்கள். யாருடனும் வாக்குவாதங்களில் ஈடுபடாதீர்கள்.

கும்பம்
கும்ப ராசியின் 3 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் நீங்கள் செய்யும் எந்த வேலையிலும் உங்கள் உடன்பிறப்புகள் உதவுவார்கள். வேலை செய்பவர்களுக்கு நல்ல வேலைக்கான சலுகைகள் கிடைக்கும். இக்காலத்தில் ஆற்றல் நிறைந்தவராக இருப்பீர்கள். எந்த வேலை செய்தாலும் வெற்றி பெறுவீர்கள். வங்கியில் வேலை செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலையை மாற்ற திட்டமிட்டால், முடிவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். மாணவர்கள் இக்காலத்தில் சிறப்பாக செயல்படுவார்கள்.

மீனம்
மீன ராசியின் 2 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் உங்கள் வருமானம் அதிகரிக்கும். குடும்ப தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு லாபம் கிடைக்கும். தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியம் சற்று மோசமடையும்.



Click it and Unblock the Notifications