Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
செவ்வாய் 66 நாட்கள் ரிஷப ராசியில் இருப்பதால் இந்த ராசிக்காரர்களின் செல்வம் பெருகப் போகுது...
ரிஷப ராசியில் செவ்வாய் சுமார் 66 நாட்கள் இருப்பார். செவ்வாயின் இந்த ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், சில ராசிக்காரர்களின் செல்வம் பெருகப் போகிறது.

நவகிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். பொதுவாக கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றும். அப்படி மாற்றும் போது அதன் விளைவாக நற்பலன்களும், கெடு பலன்களையும் பெறக்கூடும். அந்த வகையில் செவ்வாய் 2022 ஆகஸ்ட் 10 ஆம் தேதி மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு சென்றார். இந்த ரிஷப ராசியில் செவ்வாய் சுமார் 66 நாட்கள் இருப்பார். செவ்வாயின் இந்த ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், சில ராசிக்காரர்களின் செல்வம் பெருகப் போகிறது. இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

கடகம்
கடக ராசியின் 11 ஆவது வீட்டில் செவ்வாய் இருக்கிறார். இது வருமானம் மற்றும் லாப வீடாகும். எனவே இக்காலத்தில் வருமானத்தில் நல்ல வளர்ச்சியைக் காணலாம். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலை வலுவாக இருக்கும். இக்காலத்தில் உங்களின் பணி மேம்படும். இதனால் பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவையும், பாராட்டையும் பெறுவீர்கள். இக்காலத்தில் இன்னும் சிறப்பான பலன்கள் கிடைக்க முத்துக்கள் பதித்த மோதிரத்தை அணியலாம். இது அதிர்ஷ்டத்தை ஈர்க்கும்.

சிம்மம்
சிம்ம ராசியின் 10 ஆவது வீட்டில் செவ்வாய் உள்ளார். இது வியாபாரம் மற்றும் வேலையின் வீடாகும். ஆகவே இக்காலத்தில் புதிய வேலை வாய்ப்பைப் பெறுவீர்கள். பணியிடத்தில் பதவி உயர்வைப் பெறலாம். புதிய வணிக உறவுகளை உருவாக்குவதன் மூலம் நல்ல பணத்தை சம்பாதிக்கலாம். வணிகர்களின் வணிகம் விரிவடையும். சொத்து மற்றும் வாகனம் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.

கன்னி
கன்னி ராசியின் 9 ஆவது வீட்டில் செவ்வாய் உள்ளார். இது அதிர்ஷ்டம் மற்றும் வெளிநாடு ஆகியவற்றைக் குறிக்கும் வீடு. ஆகவே இக்காலகட்டத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஒத்துழைப்பும் ஒவ்வொரு வேலையிலும் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலை வெற்றிகரமாக முடியும். அரசு டெண்டர் பெற முயற்சிப்பவர்களுக்கு இந்த நேரம் சாதகமாக அமையும். வணிகம் தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இது நல்ல லாபகரமான பயணமாக இருக்கும். மாணவர்கள் இக்காலத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். இந்த ராசிக்காரர்கள் மரகதம் அணிவது அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும்.



Click it and Unblock the Notifications