For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மார்கழியில் அதிகாலை குளியல் என்னென்ன நன்மை தரும் தெரியுமா?

|

பனிக்காலத்தின் தொடக்க மாதமாக வரும் மார்கழி மாதம் என்றாலே ரத்தத்தை உறைய வைக்கும் குளிர் தான் அனைவரின் நினைவுக்கும் வரும். பக்தியில் ஈடுபட்டு இறைவனை சரணடைய உரிய மாதம் மார்கழி மாதமாகும். ஐயப்பனுக்கு விரதம் இருப்பவர்கள் கார்த்திகையில் மாலை அணிய முடியாவிட்டாலும் கூட, மார்கழி மாத தொடக்கத்தில் மாலை அணிந்து விரதம் இருப்பார்கள். அதே போல், பழனி,திருச்செந்தூர் முருகன் ஆலயங்களுக்கு பாதயாத்திரை செல்பவர்களும் மார்கழி மாதத்தில் மாலை அணிந்து விரதம் இருக்க தொடங்குவார்கள். மார்கழி மாதத்தில் அதிகாலை வேளையில் எழுந்து குளிர்ந்த நீரில் குளித்து முடித்து கோவிலுக்கு சென்று இறைவனை தரிசித்தால், புண்ணியம் கிடைக்கும்.

Margazhi Month Is Devotion And Surrender To The Lord

மார்கழி மாதம் தனுசு ராசியில் சூரியன் சஞ்சரிப்பார். தனுசு ராசி கால புருஷ தத்துவப்படி பாக்ய ஸ்தானம். இது குருவின் வீடு. குரு வீட்டில் சூரியன் சஞ்சரிப்பது சிறப்பு. இறைவனை அடைய பக்தி மார்க்கமே அனைத்திலும் சிறந்த மேலான வழி. அர்ச்சுனனுக்கு கீதா உபதேசம் செய்யும் போது கிருஷ்ண பகவான், மாதங்களில் நான் மார்கழியாக இருப்பேன் என்று சொன்னார்.

MOST READ: உடல் எடையைக் குறைக்க உதவும் ஹாலிவுட் டயட் பற்றி தெரியுமா?

ஓராண்டுக் காலம் என்பது தேவர்களுக்கு ஒருநாள் ஆகும். பகல் பொழுது உத்தராயணம் என்றும், இரவுப் பொழுதை தட்க்ஷிணாயணம் என்றும் சொல்வார்கள். உத்தராயணம் தொடங்கும் முன், வருகின்ற மார்கழி மாதமே தேவர்களுக்கு உஷத் காலம். இறைவனை எண்ணி தியானம், ஜபம் செய்ய தேவர்களின் உஷத் காலமான மார்கழி மாதம்தான் மிகவும் உயர்ந்தது.

MOST READ: காலை நேர உடற்பயிற்சி Vs மாலை நேர உடற்பயிற்சி - இரண்டில் எது சிறந்தது?

மாம் ஏகம் சரணம் வ்ரஜ (நான் ஒருவனே சரணடையத்தக்கவன்) என்று பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா கூறியுள்ளார். இதைத்தான் திருப்பாவையை அருளிய ஆண்டாளும் கூட, 'மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்' என்று பாடி, மார்கழி மாதத்தில் நோன்பிருந்து பகவான் கிருஷ்ணரை சரணடைந்தால், அவன் ஓடோடி வந்து நமக்கு மோட்சம் அளிப்பான் என்று கூறியுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மார்கழி திருவிழா

மார்கழி திருவிழா

மார்கழி மாதம் பிறந்துவிட்டாலே, நகரங்களில் வசிக்கும் ஆண்கள் எப்படி உணர்வார்களோ தெரியாது. ஆனால், கிராமப்புறங்களில் வசிக்கும் சிறுவர், சிறுமிகளுக்கு ஒரே கொண்டாட்டம் தான். மார்கழி முதல் நாளிலிருந்து தை முதல் நாள் வரையிலும் அவர்களுக்கு திருவிழா மாதிரி தான்.

பஜனை பாடல்

பஜனை பாடல்

கிராமப்புறங்களில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே வயது வித்தியாசம் இல்லாமல், அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து, கும்பலாக பஜனை பாடிக்கொண்டு வீதிகளில் உலா வருவது தனி சுகம் தான். அப்போது அவர்கள் நினைப்பது ச்சே... ஆண்டு முழுவதும் மார்கழி மாதமாகவே இருந்து விட்டால் எவ்வளவு சுகமாக இருக்கும் என்பது தான். அதிலும் பஜனை முடிந்து கொஞ்சூண்டு பொங்கல் பிரசாதம் வாங்கி சாப்பிடும் சுகம் இருக்கே. அந்த சுகத்திற்கு எத்தனை கோடி கொடுத்தாலும் ஈடாகாது.

மார்கழி கோலங்கள்

மார்கழி கோலங்கள்

மாறிவிட்ட இன்றைய சூழலில், மற்ற மாதங்களில் வேண்டுமானால், கன்னிப் பெண்கள் சூரியன் வந்து முதுகில் அறையும் வரை தூங்கினாலும், மார்கழி மாதம் பிறந்து விட்டலே, அதிகாலையில் எழுந்து குளித்து வீட்டு, நோன்பிருந்து, வாசலில் கோலமிடுவார்கள். அதோடு அருகிலுள்ள கோவில்களுக்கு சென்று திருப்பாவை மற்றும் திருவெம்பாவை பாடல்களை பாடி வருவார்கள். எனவே, மற்ற மாதங்களில் இழுத்து போர்த்திக் கொண்டு தூங்கினாலும், இந்த மார்கழி மாதத்திலாவது அனைவருமே அதிகாலை வேளையில் எழுந்து குளிர்ந்த நீரில் குளித்து முடித்து கோவிலுக்கு சென்று இறைவனை தரிசித்தால், புண்ணியம் கிடைக்கும்.

மார்கழியில் விரதம்

மார்கழியில் விரதம்

பனிக்காலத்தின் தொடக்க மாதமாக வரும் மார்கழி மாதம் என்றாலே ரத்தத்தை உறைய வைக்கும் குளிர் தான் அனைவரின் நினைவுக்கும் வரும். ஐயப்பனுக்கு விரதம் இருப்பவர்கள் கார்த்திகையில் மாலை அணிய முடியாவிட்டாலும் கூட, மார்கழி மாத தொடக்கத்தில் மாலை அணிந்து விரதம் இருப்பார்கள். அதே போல், பழனி, திருச்செந்தூருக்கு பாதயாத்திரை செல்பவர்களும் மார்கழி முதல் தேதியே மாலை அணிந்து விரதம் இருக்க தொடங்குவார்கள்.

உஷத் கால பூஜை

உஷத் கால பூஜை

பொதுவாகவே அதிகாலை எழுவதால் உடல் சுறுசுறுப்படையும், ஆரோக்யமாக இருக்கும். மனஅழுத்தம் இல்லாமலும், பரபரப்பில்லாமலும் காரியங்கள் சிறப்பாக முடியும். உடலுக்கும், உள்ளத்துக்கும் ஊட்டம் தருவது காலையில் கண்விழிப்பதாகும். உஷத்காலம் உஷஸ் என்னும் பெண் தேவதையைப் பற்றி ரிக் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. இவளே விடியற்காலை நேரத்திற்கு உரியவள். இவள் தோன்றிய பின்பே சூரியன் உதயமாகிறான். இதனாலேயே விடியற்காலை நேரம் உஷத் காலம் எனப்படுகிறது. இந்த தேவதையின் செழிப்பான கிரணங்கள் விடியற்காலையில் பூமியை நோக்கிப்பாய்வதால்தான் அந்த வேளையில் நீரில் மூழ்கி நீராடுதல் விசேசமாக சொல்லப்படுகிறது. மார்கழியில் அதிகாலை நேரத்தில் நீரும் வெதுவெதுப்பாக காணப்படுகிறது, மார்கழியில் நீராடி திருப்பாவை, திருவெம்பாவை பாடிக்கொண்டு இறைவனை தரிசித்தால் மனதிற்கு பிடித்த வாழ்க்கை துணை அமையும் என்பதும் நம்பிக்கை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Margazhi Month Is Devotion And Surrender To The Lord

As the first month of winter, the month of Magazhi, the blood-freezing cold comes to everyone's memory. Even those who are fasting for Ayyappan will not be able to wear a Malai on Karthigai month, they will wear Malai and fasting in the early evening of the month.
Story first published: Monday, December 16, 2019, 14:20 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more