For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மார்கழி மாதத்தைப் பற்றி பலருக்குத் தெரியாத சில சுவாரஸ்யமான விஷயங்கள்!

தமிழ் மாதங்களில் ஒன்று மார்கழி மாதம் ஆகும். மார்கழி மாதம் என்றாலே அதை பக்தியின் மாதம் மற்றும் இசையின் மாதம் என்று அழைக்கலாம். இந்த வருடம் டிசம்பர் 16, 2020 புதன்கிழமை அன்று மார்கழி மாதம் தொடங்கி ஜனவரி மாதம் 14, 2021 வியா

|

தமிழ் மாதங்களில் ஒன்று மார்கழி மாதம் ஆகும். மார்கழி மாதம் என்றாலே அதை பக்தியின் மாதம் மற்றும் இசையின் மாதம் என்று அழைக்கலாம். இந்த வருடம் டிசம்பர் 16, 2020 புதன்கிழமை அன்று மார்கழி மாதம் தொடங்கி ஜனவரி மாதம் 14, 2021 வியாழக்கிழமை அன்று முடிவடைகிறது.

Margazhi Month 2020-21 Dates, Importance And Dos And Donts

பகவத் கீதையில் மார்கழி மாதத்தின் முக்கியத்துவத்தை பகவான் கிருஷ்ணர் சொல்கிறார். அதாவது மாசனம் மார்கஷீர்ஷோகம் என்று பகவான் கிருஷ்ணர் கூறுகிறார். அதற்கு 12 மாதங்களில் நான் தான் மார்கழி என்று பொருள். அதாவது தன்னையே மார்கழி மாதம் என்று பகவான் கிருஷ்ணர் குறிப்பிடுகின்றார். இந்த மார்கழி மாதத்தில் திருப்பாவை, திருவெம்பாவை போன்ற ஆன்மீகப் பாடல்கள் பாடப்படும் மற்றும் இசை உற்சவங்கள் நடைபெறும்.

MOST READ: சூரிய பெயர்ச்சி: தனுசு செல்லும் சூரியனால் அதிகம் சிரமப்படப்போகும் ராசிக்காரர்கள் யார்யார்?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தமிழ் நாட்காட்டியில் மார்கழியின் முக்கியத்துவம்

தமிழ் நாட்காட்டியில் மார்கழியின் முக்கியத்துவம்

மார்கழி மாதம் ஆன்மீகக் காரியங்களில் ஈடுபடுவதற்காகவே என்று ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. திருமணம் போன்ற சுபகாரியங்கள் இந்த மாதத்தில் நடைபெறுவதில்லை. மேலும் இந்த மார்கழி மாதம் தேவர்களின் விடியற்காலம் என்று கருதப்படுவதால், மக்கள் இந்த மாதத்தில் எந்த ஒரு சுபகாரியத்தையும் செய்வதில்லை. மாறாக இறைவனை வழிபடும் ஆன்மீகக் காரியங்களில் மட்டுமே ஈடுபடுவர்.

ஆன்மீக காரியங்களுக்கு முக்கியத்தும் தரும் மார்கழி

ஆன்மீக காரியங்களுக்கு முக்கியத்தும் தரும் மார்கழி

மார்கழி மாதம் ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவதற்கு ஏற்ற ஒரு சிறந்த மாதம் ஆகும். ஏனெனில் பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் "12 மாதங்களில் நானே மார்கழி" என்று தன்னையே மார்கழி மாதம் என்று கூறுகிறார். அதன் அடிப்படையில் மார்கழி மாதத்தில் மக்கள் ஆன்மீக காரியங்களில் அதிகம் கவனம் செலுத்துகின்றனர்.

ஆண்டாளின் திருப்பாவை

ஆண்டாளின் திருப்பாவை

ஆண்டாள் அவர்களின் திருப்பாவையை பாடுவது மார்கழி மாதத்தின் ஒரு முக்கியமான சிறப்பு அம்சமாகும். திருப்பாவை 30 வசனங்களைக் கொண்டிருக்கிறது. நாள் ஒன்றுக்கு 1 வசனம் வீதம் மார்கழி மாதத்தின் 30 நாட்களும் திருப்பாவையை மக்கள் பாடி வருகின்றனர்.

திருப்பதியில் காலையில் வழக்கமாக சொல்லப்படும் மந்திரங்களுக்குப் பதிலாக மார்கழி மாதம் முழுவதும் காலையில் திருப்பாவை சொல்லப்படுகிறது.

மார்கழி கோலம்

மார்கழி கோலம்

மார்கழி மாதத்தின் மற்றுமொரு சிறப்பு என்னவென்றால் வீட்டு முற்றங்களில் கோலம் (ரங்கோலி) போடுவதாகும். குறிப்பாக மார்கழி மாதத்தில் தமிழகத்தின் தெருக்களில் உள்ள வீடுகளின் முற்றங்களில் பல வண்ணங்களில் அழகான பெரிய பெரிய கோலங்களைப் பார்க்கலாம்.

சிவன், விஷ்ணு மற்றும் அனுமனுக்கான திருவிழாக்கள் நடைபெறும் மாதம் மார்கழி

சிவன், விஷ்ணு மற்றும் அனுமனுக்கான திருவிழாக்கள் நடைபெறும் மாதம் மார்கழி

மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதேசி, அனுமன் ஜெயந்தி மற்றும் ஆரூத்ரா தரிசனம் ஆகிய மூன்று முக்கிய திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

இந்த மாதத்தில் தான் திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதேசி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அதைத் தவிர்த்து திருவாய்மொழியில் உள்ள பாடல்கள் பகல் பத்து இராப்பத்து என்று பிரித்துப் பாடப்படுகின்றன.

திருவாய்மொழி 4000 வசனங்களைக் கொண்டிருக்கிறது. இந்த பாடல்கள் பகவான் நாராயணனைப் போற்றி புகழ்ந்து பாடுகின்றன. திருவாய்மொழியில் உள்ள முதல் 1000 வசனங்கள் வைகுண்ட ஏகாதேசிக்கு முந்தைய 10 நாட்கள் பாடப்படும். இந்த 10 நாட்கள் பகல் பத்து என்று அழைக்கப்படுகின்றன. வைகுண்ட ஏகாதேசியைத் தொடர்ந்து வரும் 10 நாட்களில் எஞ்சியிருக்கும் 3000 வசனங்கள் பாடப்படும். இந்த காலத்தை இராப்பத்து அல்லது இருப்பத்து என்று அழைப்பர்.

மார்கழியின் மற்றொரு சிறப்பு

மார்கழியின் மற்றொரு சிறப்பு

மார்கழி மாதத்தின் இன்னுமொரு முக்கிய சிறப்பு என்னவென்றால் இந்த மாதத்தில் தான் ஐயப்ப பக்தர்களான ஐயப்ப சுவாமிகள் விரதம் இருந்து இறைவன் ஐயப்பனைத் தரிசிக்க பாதயாத்திரை மேற்கொள்வர்.

மார்கழி மாதம் குளிர்காலத்தில் வரும். அதனால் இந்த மாதத்தின் பகல் நேரங்கள் குறைவாகவும் இரவு நேரங்கள் நீண்டதாகவும் இருக்கும்.

மார்கழி மாதம் தேவர்களின் விடியற்காலமாகக் கருதப்படுகிறது. தேவர்களின் பகல் நேரமான உத்தரயன புன்யகலம் ஜனவரி மாதத்தின் நடுவில் தொடங்குகிறது. நம்முடைய ஓராண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள் போன்றதாகும். தேவர்களின் இரவு நேரம் தக்ஷினாயன புன்யகலத்தின் போது தொடங்குகிறது.

மார்கழி மாதத்தில் குறித்து வைத்துக் கொள்ள வேண்டிய முக்கிய நாட்கள் மற்றும் விழாக்கள்:

மார்கழி மாதத்தில் குறித்து வைத்துக் கொள்ள வேண்டிய முக்கிய நாட்கள் மற்றும் விழாக்கள்:

* வைகுண்ட ஏகாதசி - டிசம்பர் 25, 2020

* ஆரூத்ரா தரிசனம் - டிசம்பர் 30, 2020

* அனுமன் ஜெயந்தி - ஜனவரி 12, 2021

* போகி பொங்கல் - ஜனவரி 13, 2021

* பௌர்ணமி - டிசம்பர் 29, 2020

* அமாவாசை - ஜனவரி - 12, 2021

* சஷ்டி - டிசம்பர் 20, 2020

மார்கழி மாத சிறப்பு உணவுகள்:

மார்கழி மாத சிறப்பு உணவுகள்:

மார்கழி மாதம் மக்கள் சில பிரபலமான பாரம்பரிய உணவுகளை சமைத்து உண்பர். அவற்றில் முக்கியமானவை அம்மினி கொழுக்கட்டை, பிடி கொழுக்கட்டை, கார அப்பம், மோர் களி, அடை அவியல் மற்றும் வெல்லம் மற்றும் இனிப்புப் போலி ஆகும்.

மார்கழி மாத இசை மற்றும் நடன விழாக்கள்:

மார்கழி மாத இசை மற்றும் நடன விழாக்கள்:

மார்கழி மாதம் என்றாலே சென்னையில் நடைபெறும் இந்திய பாரம்பரிய கர்நாடக சங்கீத இசை நிகழ்ச்சிகள் மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் தான் நமது ஞாபகத்திற்கு வரும். பெரும்பாலானோர் இந்த மாதம் முழுவதையும் இசை மற்றும் ஆன்மீகக் காரியங்களில் ஈடுபடுவதற்காகப் பயன்படுத்துவர்.

மார்கழி உற்சவம் என்று அழைக்கப்படும் இந்த இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் மார்கழி மாதத்தின் போது சென்னையில் மட்டும் 3500 நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இது உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான நிகழ்ச்சிகளாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Margazhi Month 2020-21 Dates, Importance And Dos And Don'ts

Margazhi month 2020-21 Dates, Importance and Dos and don'ts. Read on to know more...
Desktop Bottom Promotion