For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மார்கழி வியாழக்கிழமை - குருவார பூஜை பண்ணுங்க.. மகாலட்சுமியின் அருள் கிடைக்கும்...

மார்கழி மாதத்தை செல்வம் தரும் மாதம் என்று அழைக்கின்றனர். மார்கழி மாதம் மிகவும் மகத்துவம் நிறைந்த மாதமாகும். வருடம் முழுவதும் கோவிலுக்கு செல்ல இயலாதவர்கள், மார்கழி மாதம் மட்டும் கோவிலுக்கு சென்றாலே வரு

|

மகாலட்சுமி பூஜை மகத்துவமானது. செல்வ வளம் தரும் மார்கழி மாத வியாழக்கிழமைகளில் மகாலட்சுமி பூஜை செய்தால் அன்னை மகாலட்சுமியின் அருளால் செல்வம் நிறையும். ஐப்பசி மாதம் தீபாவளி பண்டிகை நாளில் மகாலட்சுமி பூஜை, குபேர பூஜை செய்வார்கள். அதே போல மார்கழி குருவார பூஜை செய்வதால் வீட்டில் செல்வ வளம் பெருகும் என்பது ஐதீகம்.

Margazhi Goddess Mahalaksmi Guruvar Vratham

மார்கழி மாத வியாழக்கிழமைகளில் மகாலட்சுமி பூஜையை கணவன் மனைவி இருவரும் இணைந்து செய்யலாம். இந்த பூஜை செய்வதால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். இந்த குருவார ஸ்ரீ மகாலட்சுமி விரதம் பற்றி ஸ்ரீபத்ம புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

MOST READ: மார்பு மற்றும் தொண்டையில் உள்ள துர்நாற்றமிக்க சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்!

பக்தியுடனும் நியமத்துடனும் இந்தப் பூஜை செய்யும் பெண்களை விட்டு மகாலட்சுமியானவள் என்றும் விலகாமல் காப்பாற்றுவாள். தனம், தான்யம், புகழ் மற்றும் பூரண அருள் கிடைக்கும். துக்கம், தரித்திரம் விலகும். உங்களின் குலம் தழைக்கும் நினைத்தது நிறைவேறும்.

MOST READ: மார்கழி மாதத்தில் இந்த விசயத்தை எல்லாம் மறந்து கூட செய்யாதீங்க...

மார்கழி மாதம் முதல் வியாழக்கிழமை ஆரம்பித்து ஒவ்வொரு வியாழனன்றும் விரதமிருந்து, கடைசி வியாழனன்று முடிக்க வேண்டும். பிறகு வருடம் முழுவதும் வியாழக்கிழமைகள் தோறும் கதையை மட்டும் படிக்க வேண்டும். இதுதான் குருவார மகாலட்சுமி விரதமாகும். நாள் முழுவதும் உபவாசம், இரவில் மட்டும் சாப்பிடலாம். விரதம் முடியும் வியாழக்கிழமை அன்று ஏழு கன்னிப் பெண்கள் அல்லது சுமங்கலிகளை அழைத்து, பிரசாதம், தாம்பூலம், பழம் கொடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குரு வார விரதம்

குரு வார விரதம்

வீட்டின் பூஜை அறையில் சுத்தம் செய்து ஸ்வஸ்திக் கோலம் அல்லது ஐஸ்வர்ய கோலம் போட வேண்டும் அதன் மீது பலகையை வைத்து நான்கு மூலைகளிலும் கோலம் போட வேண்டும். நடுவில் பச்சரிசி அல்லது கோதுமையை பரப்பி மஞ்சள் மற்றும் குங்குமத்தால் கோலம் போட வேண்டும்.

ஐந்து மரக்கிளைகள்

ஐந்து மரக்கிளைகள்

கலசத்தில் சுத்தமான நீர் பரப்பி அதில் அருகம்புல், கொட்டைப்பாக்கு மற்றும் ஒரு ரூபாய் நாணயம் போட வேண்டும். மா, பலா, கொய்யா, சப்போட்டா, அரசு, ஆல மரக்கிளைகளை பூஜைக்கு பயன்படுத்த வேண்டும். மரக்கிளைகள் கிடைக்காதவர்கள் பூச்செடிகளின் கிளைகளைப் பயன்படுத்தலாம். மகாலட்சுமி படம் எந்திரத்தை கலசத்தின் முன்பு வைத்து சந்தனம் குங்குமம் வைத்து பூக்களால் அலங்கரிக்கலாம் படத்தின் அருகே ஒன்றேகால் ரூபாயை வைத்து வணங்க வேண்டும். பிரசாதமாக வைக்கப்படுவதில் வாழை பழம், மற்ற பல பழ வகைகள் மற்றும் பால் அவசியம் வைக்க வேண்டும்.

மஞ்சள் பிள்ளையார்

மஞ்சள் பிள்ளையார்

கலசத்திற்கு முன் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைக்க வேண்டும். பிறகு நிவேதனப் பொருட்களை கலசத்தின் முன் வைக்கவும். பிறகு ஆசமனம், சங்கல்பம் செய்து விநாயகர் பூஜையையும், ஸ்ரீ மகாலட்சுமி பூஜையையும் செய்ய வேண்டும். மஞ்சள், குங்குமம், மலர்களால் வழிபட்டு தூப தீப நமஸ்காரம், மற்றும் நைவேத்யம் செய்யப்பட வேண்டும்.

மகாலட்சுமிக்கு ஆரத்தி

மகாலட்சுமிக்கு ஆரத்தி

முடிவில் புத்தகத்தில் உள்ள லட்சுமி அஷ்டோத்திரம், மகா லட்சுமியஷ்டகம், ஸ்ரீ மகாலட்சுமி துதி படித்து விட்டு ஸ்ரீலட்சுமி விரத கதை படிக்க வேண்டும். அதன் பின் ஆரத்தி பாடல்களை படித்து ஆரத்தி எடுக்க வேண்டும். இந்த பூஜையை காலையிலேயே செய்ய வேண்டும். இரவில் பஞ்சோபசார பூஜை செய்து நைவேத்யம் அளிக்க வேண்டும். வெற்றிலையும் சிறிதளவு நைவேத்தியத்தை தனியே எடுத்து வைத்திருந்து காலையில் பசு மாட்டிற்கு கொடுக்க வேண்டும்.

வெள்ளிக்கிழமை பூஜை

வெள்ளிக்கிழமை பூஜை

வெள்ளிக்கிழமை காலையில், கலசத்திற்கு ஆரத்தி எடுக்க வேண்டும். பிறகு கலச தீர்த்தத்தை, பூஜை செய்பவர் சிறிது சாப்பிட்டு விட்டு மேலே தெளித்து கொள்ள வேண்டும். வீடு முழுவதும் தெளித்துக்கொண்டு பூஜைக்கு வந்தவர்களுக்கும் தீர்த்தமாகக் கொடுத்து மீதியை செடிக்கோ அல்லது மரங்களுக்கோ ஊற்ற வேண்டும். பூஜை செய்யும் போது பயன்படுத்திய அரிசியை, தினமும் சமையல் செய்ய உபயோகப்படுத்தும் அரிசியுடன் சேர்த்து கொள்ள வேண்டும். படத்தின் முன் வைக்கப்பட்டிருக்கும் நாணயத்தை தனியே எடுத்து வைத்துக் கொண்டு எல்லா வியாழக்கிழமைகளிலும் அதையே உபயோகிக்கவும். ஒன்றேகால் ரூபாயும், பூஜை செய்த பூக்களையும் ஒரு கவரில் போட்டு பத்திரமாக வைக்கவும்.

வீட்டிற்கு வரும் மகாலட்சுமி

வீட்டிற்கு வரும் மகாலட்சுமி

கடைசி வியாழனன்று பூஜை முடிந்தவுடன், ஒவ்வொரு வியாழனும் சேர்த்து வைத்த பூக்களையும் பூஜித்த கலச தேங்காய், பாக்கு இவற்றை கிணற்றிலோ, கடலிலோ போட வேண்டும். ஒன்றே கால் ரூபாயை பணம் வைத்து உபயோகிக்கும் பர்சிலேயே பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். இந்த குருவார ஸ்ரீ மகாலட்சுமி விரதம் ஸ்ரீபத்ம புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பக்தியுடனும் நியமத்துடனும் இந்தப் பூஜை செய்யும் பெண்களை விட்டு மகாலட்சுமியானவள் என்றும் விலகாமல் காப்பாற்றுவாள் என்பது ஐதீகம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Margazhi Goddess Mahalaksmi Guruvar Vratham 2020

Margazhi Lakshmi Viratham 2020 Margazhi Guruvara Lakshmi Puja in TamilNadu.Lakshmi vratam is observed during the month of Margazhi.
Desktop Bottom Promotion