Just In
- 5 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களின் திருமணம் பற்றி வீட்டில் பேச தொடங்கலாம்...
- 14 hrs ago
Coconut Rice Recipe : சுவையான... தேங்காய் சாதம்
- 15 hrs ago
ஆண்களே! உங்க மனைவிகிட்ட இந்த அறிகுறிகள் தெரிஞ்சா ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணுமாம்...ஏன் தெரியுமா?
- 16 hrs ago
இந்த பிரச்சனை இருந்தா மாம்பழம் சாப்பிடாதீங்க... இல்லன்னா அது பெரிய ஆபத்தாயிடும்...
Don't Miss
- Automobiles
இந்த வருஷம் புதுசா 8 எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகமாகுது... நீங்க எதை வாங்க போறீங்க ?
- News
கொடூரம்.. மதம்விட்டு மதம் காதல்! துடிக்க துடிக்க 20 வயது இளம்பெண் படுகொலை..பெற்றோர் வெறிச்செயல்
- Movies
பிக்பாஸ் சீசன் 6 ல் இமானின் முன்னாள் மனைவியா...ரைட்டு...அடுத்த சம்பவம் ரெடியாயிடுச்சு
- Sports
"அந்த ஒன்னு போதும் எனக்கு".. ஆர்சிபியின் எதிர்பாராத தோல்வி.. டூப்ளசிஸ் மனம்கலங்கி சொன்ன வார்த்தைகள்!
- Technology
Google Pay மூலம் கரண்ட் பில் செலுத்துவது எப்படி? வீட்டில் இருந்தபடி சில நொடியில் கரண்ட் பில் செலுத்தலாம்..
- Finance
2000 ரூபாய் நோட்டுக்கு எண்ட் கார்டா? ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்ன?
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மார்கழி மாதம் ஏன் கல்யாணம் பண்ணக்கூடாதுனு சொல்றாங்க தெரியுமா? இப்பயாவது தெரிஞ்சிக்கோங்க...!
மார்கழி மாதம் என்றாலே, நம் நினைவுக்கு வருவது இறைவன், பூஜை போன்றவைதான். ஏனெனில், மார்கழி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. மார்கழி மாதம் பக்தி மற்றும் இசையின் மாதம். 2021 ஆம் ஆண்டில், மார்கழி மாதம் டிசம்பர் 16, 2021 வியாழன் அன்று தொடங்கி ஜனவரி 13, 2022 வியாழன் அன்று முடிவடைகிறது. மார்கழி மாசத்தின் முக்கியத்துவம் பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது. திருப்பாவை மற்றும் திருவெம்பாவை, ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் பஜனைகள் இம்மாதத்தின் முக்கிய நிகழ்வுகள்.
மார்கழி மாதம் ஏன் விசேஷமாக பார்க்கப்படுகின்றது. இந்த மாதத்தில் ஏன் அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும்? இம்மாதத்தில் ஏன் இறைவனை வழிபட வேண்டும்? திருமணங்கள் போன்ற சுப நிகழ்ச்சிகள் ஏன் தவிர்க்க வேண்டும் என்பதற்கான காரணங்களை இக்கட்டுரையில் காணலாம்.

மார்கழி மாதம்
மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம் என இறைவனை சரணடையக் கூடிய இரு பெரிய விழாக்கள் வருகின்றன. மார்கழி மாதம் என்றால் அது பீடை மாதம் என பலர் சொல்வதுண்டு. அதனால், பெரும்பாலான மக்கள் இந்த மாதம் முழுவதும் கடவுளை வணங்கி வழிபடுவார்கள். அதனால், மார்கழி தெய்வீகமான மாதமாகும். மேலும், "மாதங்களில் நான் மார்கழியாக இருக்கின்றேன்" என்று மாதங்களில் சிறந்தது மார்கழி என்று கிருஷ்ணன் பாடியுள்ளார்.

பீடை மாதம்
மார்கழியை பீடை மாதம் என்றும் கூறுவதால், எல்லா கஷ்டமும் நீங்கி, தைத் திங்களில் இருந்து புது வாழ்வு மலர வேண்டும் என்று இம்மாதத்தில் தான் அதிக பூஜைகள் செய்யப்படுகின்றன. பெருமைகள் நிறைந்த மாதம் என்பதே மருவி "பீடை" என்று ஆனதாக கூறப்படுகிறது. மேலும், இம்மாதத்தின் பெருமையாக மார்கழியின் 30 நாட்களும் விரதம் இருந்து, பெருமாளைத் தனது கணவனாக ஆண்டாள் ஏற்றுக் கொண்டாள் என்று கூறுவதும் உண்டு.

மார்கழி மாத பூஜைகள்
மார்கழி மாதத்தில் சிவன், விஷ்ணு ஆலயங்களில் திருப்பாவை, திருவெம்பாவை திருவிழாக்கள் நடைபெறும். ஆருத்ரா தரிசனம், வைகுண்ட ஏகாதசி போன்ற பண்டிகைகளை கொண்டாடப்படுகின்றன. பெளர்ணமி பூஜை, ஆருத்ரா அபிஷேகம், சங்கடஹர சதுர்த்தி விரதம், அனங்க திரயோதசி கிருத்திகை விரதம், சஷ்டி விரதம், வைகுண்ட ஏகாதசி, மார்கழி கிருத்திகை விரதம் போன்ற பல விழாக்கள் மற்றும் பூஜைகள் இம்மாதத்தில் உள்ளன.

அதிகாலையில் எழுவது
மார்கழி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது குளிர். இம்மாதத்தில் அதிகாலையில் எழுவது மிகவும் நல்லது. அதாவது சூரிய உதயத்திற்கு முன் பிரம்ம முகூர்த்தமான 4.30 மணிக்கு எழுந்து குளித்துவிட்டு பூஜையை தொடங்க வேண்டும். மார்கழி மாதத்தில் அதிகாலையில் இயற்கையாகக் கிடைக்கக் கூடிய அதீத ஆக்ஸிஜன் நம் உடலுக்கு ஆண்டு முழுவதும் தேவையான நலனை தருகிறது. இதனால் தான் மார்கழி மாதம் அதிகாலையில் குளிக்க சொல்வதற்கான காரணம்.

கோலம் போடுதல்
மார்கழி மாதத்தின் மற்றொரு சிறப்பு, கோலம். மார்கழி மாதத்தில் அனைத்து வீடுகளிலும் கோலம் போடப்பட்டிருக்கும். அதிகாலையில் எழுந்து கோலம் போடுவது நம் உடலுக்கு மிகவும் நல்லது. கோலம் போட்டு சாணியை பிடித்து அதில் பூசணி பூவை வைப்பது சம்பிராதயம். அப்பொழுதுதான் அந்த கோலம் முழுமை பெறுகிறதாக கூறுவார்கள்.

மார்கழி பஜனை
மார்கழி மாத பஜனை மிகவும் சிறப்பு வாய்ந்தது. மக்கள் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு பஜனை மேற்கொள்வார்கள். அதன் பின்னர் திருப்பாவை, திருவெண்பாவை படிக்க வேண்டும். மார்கழி மாதம் 30 நாட்களும் இந்த திருப்பாவை, திருவெம்பாவையை பாட வேண்டும். இவற்றை படுவது நமக்கு பல நன்மைகள் நடக்க உதவும்.

கோயிலுக்கு சென்று வணங்குதல்
மார்கழி மாதம் பக்திக்கு உரிய மாதம். இம்மாதத்தில் கடவுளை வணங்கி பூஜை செய்து தொழுதுவந்தால், இறைவனை அடையாளம். வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம் போன்ற மிக முக்கியமான விழாவைக் கொண்ட மாதம். இதன் காரணமாக மார்கழியில் தினமும் காலை நீராடி, வீட்டில் இறைவனை வணங்கி விட்டு, அருக்கில் உள்ள திருமால் அல்லது சிவன் கோயிலுக்குச் சென்று வணங்கி வந்தால், இறைவன் அருள் பெறுவீர்கள்.

ஏன் சுப காரியங்கள் நடைபெறாது?
மாதங்களில் சிறந்தது மார்கழி. இந்த மாதத்தில் பல சிறப்புகள் உள்ளது. பொதுவாக இந்த மாதத்தில் கல்யாணம், காது குத்து போன்ற எந்த சுப நிகழ்ச்சிகளும் செய்யக்கூடாது என்று கூறுவார்கள். ஆடி மாதம் போல, மார்கழி மாதம் இறைவனுக்குரிய மாதம். இறைவனை வணங்க வேண்டிய மிக அற்புத மாதம் என்பதால் திருமணம் செய்யப்படுவதில்லை.