For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2020 மகர சங்கராந்தி பலன்கள்: சங்கராந்தி நாளில் சூரிய பூஜை செய்து தானம் கொடுங்க...

மகரசங்கராந்தி நாளில் சூரியனின் வடதிசை பயணம் தொடங்குகிறது. சங்கராந்தி எனும் ஒவ்வொரு மாதப்பிறப்பன்றும் கதிரவனை வழிபட இயலாவிட்டாலும், இயன்ற தானங்களையாவது செய்தால் சூரிய பகவானின் திருவருள் கிடைக்கும்.

|

சூரிய பகவான் ஒரு ராசியைக் கடந்து அடுத்த ராசிக்குப் பிரவேசிக்கும் நேரத்தில்தான் தமிழ் மாதம் பிறக்கிறது. இதை வடமொழியில் சங்கராந்தி என்கின்றனர். தை மாதப் பிறப்பு மகர சங்கராந்தி எனக் கொண்டாடப்படுகிறது. சூரியபகவானின் வடதிசை பயணத்தின் துவக்கத்தை மக்கள் கொண்டாடுகின்றனர். ஒவ்வொரு மாத சங்கராந்தியும் ஒவ்வொரு பெயரால் அழைக்கப்பட்டு, அன்று செய்ய வேண்டிய பூஜைகள், தானங்கள் பற்றி முன்னோர்கள் ஒரு நெறிமுறையை வகுத்துள்ளனர். 12 சங்கராந்திகளைப் பற்றி பார்க்கலாம்.

Makara Sankranti 2020: Sun God Enter 12 Zodiac Signs Predictions

மகரசங்கராந்தி தேவதை இந்த ஆண்டு விகாரி வருடம் மார்கழி மாதம் 29ஆம் தேதி ஜனவரி 14, 2020 செவ்வாய்கிழமை நள்ளிரவில் 2.08 மணியளவில் கிருஷ்ண பட்சம் பஞ்சமி திதி துலா லக்னம் சிம்ம ராசி பூரம் நட்சத்திரத்தில் சோபனம் நாமயோகம் தைதூலை கரணத்தில் மகர சங்கராந்தி மகர ராசியில் பிரவேசிக்கிறார்.

MOST READ: பொங்கல் பண்டிகையை இந்தியாவின் மற்ற பகுதி மக்கள் எப்படியெல்லாம் கொண்டாடுராங்கன்னு தெரியுமா?

ஒவ்வொரு ஆண்டுக்கும் சங்கராந்தி தேவதை என்று ஒன்று உண்டு. இதனை 'மகர சங்கராந்தி தேவதை' என்று அழைப்பார்கள். 60 வருடங்களுக்கு தனித்தனிப் பெயருடைய சங்கராந்தி தேவதைகள் உள்ளன. இந்த தேவதைகளின் தோற்றம், உடை, வாகனம், உணவு, அணிந்திருக்கும் ஆபரணம், புஷ்பம் போன்றவற்றுக்குத் தக்கபடி தேசத்தின் அப்போதைய நன்மை தீமைகளுக்குப் பலன் கூறுவார்கள். தைதூலை கரணத்திற்கான விலங்கு கழுதை என்பதால் இந்த ஆண்டு மகர சங்கராந்தி கழுதை வாகனத்தில் உலா வருகிறார். 12 சங்கராந்திகளைப் பற்றியும், என்ன செய்யலாம் என்றும் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சித்திரையில் தானம் கொடுங்கள்

சித்திரையில் தானம் கொடுங்கள்

சூரியன் மேஷ ராசியில் நுழையும் சித்திரை மாதத்தின் முதல் நாள், தான்ய சங்கராந்தி என அழைக்கப்படுகிறது. அன்று சூரியபகவானை பூஜித்து தானிய வகைகளை தானம் செய்தால் ஆயிரம் யாகங்கள் செய்த பலன்கள் கிடைக்கும். வைகாசி, ரிஷபராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலம். இம்மாதப் பிறப்பு, தாம்பூல சங்கராந்தி எனப்படுகிறது. அன்று சூரியனுக்கு அர்ச்சனை செய்து ஒரு மண் பாத்திரத்தில் வெற்றிலை, பாக்கு, பழம், இயன்ற தட்சணை வைத்து வாசனைப் பொருட்களுடன் வயதான தம்பதியருக்கு தானம் அளித்தால் நற்பலன்கள் பெருகும்.

முன்னோர்கள் வழிபாடு அன்னதானம்

முன்னோர்கள் வழிபாடு அன்னதானம்

மிதுன ராசிக்கு சூரிய பகவான் இடம் பெயரும் ஆனி மாதப் பிறப்பு, மனோரத சங்கராந்தி என வழங்கப்படுகிறது. அன்று ஒரு குடத்தில் வெல்லத்தை நிரப்பி, வேதம் கற்ற பெரியோருக்கு அறுசுவை உணவளித்து, பின் அந்த வெல்லக்குடத்தை தானம் செய்ய வேண்டும். இதனால், நியாயமான விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். ஆடி மாத ஆரம்பம், சூரிய பகவான் கடக ராசியில் பிரவேசிக்கும் காலம் அசோக சங்கராந்தி எனப்படும். அன்றைய தினம், சூரியபகவானை நினைத்து ஆதித்ய ஹ்ருதயம் சொல்லவோ கேட்கவோ வேண்டும். முன்னோர்களை நினைத்து வணங்க வேண்டும். இது அசோக சங்கராந்தி எனப்படுகிறது. அன்று ஆதித்யனை வணங்குவதால், சோகங்கள் நாசமாகும்.

நெய் தானம் நல்லது

நெய் தானம் நல்லது

ஆவணி மாதப் பிறப்பு, சிம்மராசியில் சூரியன் நுழையும் நேரம். இது ரூப சங்கராந்தி எனப்படுகிறது. ஒரு பாத்திரத்தில் நெய்யை நிரப்பி சூரியனை வழிபட்டபின் அதனை தானமளிப்பது நல்லது. இதனால் நோய்கள் நீங்கும். கன்னிராசியில் சூரியன் பிரவேசிக்கும் புரட்டாசி மாதப்பிறப்பு அன்று தேஜசங்கராந்தி. அன்று நெல், அரிசி போன்றவற்றின் மீது கலசம் வைத்து அதில் சூரியனை எழுந்தருளச் செய்து மோதகம் நிவேதிக்க வேண்டும். இதனால் காரியத்தடைகள் அகலும்.

வெண்ணெய் கும்பம் தானம்

வெண்ணெய் கும்பம் தானம்

ஐப்பசி மாத முதல் நாள், சூரியன் துலாம் ராசியில் பிரவேசிக்கிறார். இந்த நாள், ஆயுர் சங்கராந்தி எனப் போற்றப்படுகிறது. அன்று கும்பத்தில் பசுவின் பாலோடு வெண்ணெய் சேர்த்து நிரப்பி, சூரியனை வழிபட்டபின், வேதியர்க்கு அந்த கும்பத்தை தானமாக அளிக்க வேண்டும். இதனைச் செய்வதால் ஆயுள்பலம் கூடும். கார்த்திகை மாத முதல் நாள் சூரியன் விருச்சிக ராசியில் நுழைகிறார். இந்நாள் சௌபாக்கிய சங்கராந்தி என்று அழைக்கப்படுகிறது. அன்று சூரிய பகவானுக்கு அர்ச்சனை செய்து சிவப்பு நிற துணி சாத்தி, இயன்ற மங்களப் பொருள்கள் அல்லது ஆடை தானம் செய்ய வேண்டும். இதனால் தடைகள் விலகி எ ண்ணியது ஈடேறும்..

தண்ணீர் தானம் தோஷங்களை நீக்கும்

தண்ணீர் தானம் தோஷங்களை நீக்கும்

சூரியன் தனுசு ராசியில் வாசம் செய்யத் தொடங்கும் மார்கழி மாதப் பிறப்பினை தனுர் சங்கராந்தி என அழைப்பர். அன்றைய தினம் ஒரு கலசத்தில் சுத்தமான நீரை நிரப்பி சூரியனின் பிரதிமையை அதில் போட்டு அல்லது சூரியனின் பிம்பம் அதில் விழும்படி வைத்து பூஜித்து, அதனை தானமாக அளிக்க வேண்டும். எளியவர்களுக்கு இயன்ற உணவளிக்க வேண்டும். இதனால் கிரக தோஷங்கள் நீங்கும்.

தை மாதம் மகரசங்கராந்தி

தை மாதம் மகரசங்கராந்தி

தைமாதம் கதிரவன் மகர ராசியில் சஞ்சரிப்பதால், இது மகரசங்கராந்தி. இதுவே பொங்கல் திருநாள £க பிரசித்தி பெற்றது. இது மற்ற அனைத்து சங்கராந்திகளைவிட முக்கியமாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இம்மாதமே தேவர்களின் விடியற்காலை நேரமாகும். முதல் நாளில் பொங்கலிட்டு சூரியனை வழிபடுவதோடு, இந்த மாதம் முழுவதும் இஷ்ட தெய்வ ஆராதனை செய்தால் மகத்தான புண்ணியம் கிட்டி, செல்வ வளம் சேரும்.

சூரிய பூஜை உப்பு தானம்

சூரிய பூஜை உப்பு தானம்

மாசிமாதம், கும்ப ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலம். இம்மாத பிறப்பு லவண சங்கராந்தி என அழைக்கப்படுகிறது. அன்று சூரிய பூஜை செய்து உப்பினை தானமாக அளித்தால் மோட்சம் கிட்டும் எனக் கூறப்பட்டுள்ளது. பங்குனி மாத முதல் நாள், போக சங்கராந்தி தினம். ஆதவன் மீன ராசியில் பிரவேசிக்கும் நாள் இது. இம்மாதம் முதல் நாளிலும், கடைசி நாளிலும் சூரிய பூஜை செய்ய வேண்டும். அதனால் தனதான்யம் அபிவிருத்தியாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Makara Sankranti 2020: Sun God Enter 12 Zodiac Signs Predictions

The Sun Gods enters every month one rasi from Mesham to Meenam that is called sankaranti This month sun enters makaram rasi, that is called makara sankaranthi.
Desktop Bottom Promotion