29 வருடங்களுக்கு பின் சூரியன்-சனி இணைவதால் இந்த ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. உங்க ராசிக்கு எப்படி?

சுமார் 29 வருட இடைவெளிக்கு பிறகு சூரியனும், சனியும் மகர ராசியில் சேர்ந்திருக்கப் போகிறார்கள். ஏற்கனவே 1993 ஆம் ஆண்டு மகர ராசியில் சூரியனும், சனியும் சேர்ந்திருந்தனர்.

ஒவ்வொரு ஆண்டையும் போல், இந்த ஆண்டும் ஜனவரி 14 ஆம் தேதி மகர சங்கராந்தி வருகிறது. ஆனால் இந்த ஆண்டில் வரும் மகர சங்கராந்தி நாளில் சூரியன் சனியின் வீடான மகரத்தில் நுழைந்து ஒரு மாத காலம் இருக்கப் போகிறார். ஏற்கனவே சனி மகர ராசியில் சஞ்சரித்து வருகிறார். இக்காலத்தில் சூரியன் சனியின் மீதான கோபத்தை மறந்து இருப்பார். இது வாழ்வில் உறவுகளின் மீதான முக்கியத்துவத்தைக் குறிக்கிறது. சூரியன் ஒவ்வொரு ஆண்டும் மகர சங்கராந்தி நாளில் மகர ராசியில் நுழையும் போது, மிகவும் அரிதாகவே தனது மகனான சனியை சந்திப்பார். அந்த அபூர்வமான நிகழ்வு இந்த ஆண்டு நிகழ்கிறது. சுமார் 29 வருட இடைவெளிக்கு பிறகு சூரியனும், சனியும் மகர ராசியில் சேர்ந்திருக்கப் போகிறார்கள். ஏற்கனவே 1993 ஆம் ஆண்டு மகர ராசியில் சூரியனும், சனியும் சேர்ந்திருந்தனர். அதற்கு பின் இப்போது தான் மீண்டும் சேர்கிறார்கள்.

இதய நோயால் அவதிப்படும் 5 மாத குழந்தை உயிர் பிழைக்க உதவுங்கள் ப்ளீஸ்

Makar Sankranti 2022: Know The Impact Of Sun-Saturn Conjunction After 29 Years In Tamil

ஜோதிடத்தில், சூரியன்-சனி சேர்க்கை நிகழ்வு மிகவும் சுவாரஸ்யமான மற்றும் பயமுறுத்தக்கூடிய ஒன்றாகும். சூரியனும், சனியும் கடுமையான எதிரிகள். ஆனால் சூரியன் சனி பகவானின் தந்தை. இவர்கள் இருவரும் வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்டவர்கள். வெப்பமான மற்றும் உமிழம் கிரகமான சூரியன், நமக்குள் இருக்கும் அதிகாரம், தன்னம்பிக்கை மற்றும் ஈகோவைக் குறிக்கிறார். மறுபுறம், இயற்கையில் குளிர்ச்சியான மெதுவாக நகரும் கிரகமான சனி கர்மாவை பிரதிபலிப்பவர் மற்றும் வாழ்க்கையின் கடினமான பாடங்களைக் கற்றுக் கொடுப்பவர். இப்படிப்பட்ட சூரியனும், சனியும் ஒன்றாக மகர ராசியில் 2022 ஜனவரி 14 ஆம் தேதி இணையும் போது, ஒவ்வொரு ராசிக்காரர்களும் எம்மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதை இப்போது காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

சனி-சூரியன் சேர்க்கையால் மேஷ ராசிக்காரர்கள் தங்களின் கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் இருக்கலாம். ஆனால் இது எளிதானது அல்ல. மேலும் இது உங்கள் உயர் அதிகாரிகளுடன் மோதலுக்கு வழிவகுக்கும். திருமணமானவர்கள், தங்கள் மாமியாருடன் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சிலர் தங்களின் தொழில் வாழ்க்கையில் சில குழப்பத்தை சந்திக்க நேரிடும்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் இக்கால கட்டத்தில் வாழ்வில் வெற்றியைப் பெறுவதற்கு கீழ்படிதலுடனும், ஒழுக்கத்துடனும் இருக்க வேண்டும். சிலர் நீண்ட தூர பயணத்தை மேற்கொள்ளலாம். சிலருக்கு வெளிநாட்டில் குடியேறுவதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. தந்தையுடனான உறவுகள் மோசமடையலாம். மேலும் தந்தையின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் என்பதால் அவரை கவனித்துக் கொள்ளுங்கள்.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! இக்காலத்தில் கூட்டுத்தொழிலில் இருப்பவர்களுக்கு திடீர் வெற்றி கிடைக்கும். ஏற்கனவே ஆரோக்கிய பிரச்சனைகளைக் கொண்டவர்கள் இக்காலத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காயங்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சிலருக்கு பரம்பரை தொடர்பான விஷயங்களில் ஆதாயம் கிடைக்கலாம்.

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்களே, நீங்கள் காதலிப்பவரானால் இக்காலத்தில் உங்கள் துணையுடன் ஈகோ மோதல் ஏற்படலாம். உங்கள் வாழ்க்கைத் துணையின் உடல்நில பாதிக்கப்படலாம். ஒப்பந்த சிக்கல்கள் காரணமாக வணிக கூட்டாண்மை பாதிக்கப்படலாம். மொத்தத்தில் இக்காலத்தில் உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் நீங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே, உங்களின் தொழில் வாய்ப்புகள் பிரகாசிக்கும் மற்றும் பணியிடத்தில் கூடுதல் பொறுப்புகளுடன் புதிய பதவி உயர்வையும் பெறலாம். இக்காலத்தில் ஒருசில உடல்நல பிரச்சனைகளால் பாதிக்கப்படுவீர்கள். ஆனால் அதிலிருந்து விரைவில் குணமடைவீர்கள். ஆரோக்கியமாக இருக்க, தினமும் உடற்பயிற்சிகளை செய்து வாருங்கள்.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களே! இக்காலத்தில் புதிய விஷயங்களை ஆராயும் எண்ணம் எழும். பங்கு சந்தையில் எந்த ஈடுபாட்டையும் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய இழப்புக்களை சந்திக்க நேரிடும். உங்க்ள குழந்தைகள் உடல்நல பிரச்சனைகளை சந்திக்கலாம். எனவே அவர்களை கவனித்துக் கொள்ளுங்கள். உறவில் இருப்பவர்கள் சில குழப்பங்களை சந்திக்க நேரிடும்.

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்களே! உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் அதிருப்தியை உணர்வீர்கள். நிலம் தொடர்பான விஷயங்களில் முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். உங்கள் தாய் உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொள்ள வாய்ப்புள்ளதால், அவரை கவனித்துக் கொள்ளுங்கள். உங்கள் தொழிலில் சில எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படலாம்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே! இக்காலத்தில் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை அல்லது தொழில் வாழ்க்கையில் சில தேவையற்ற பயணங்களை சந்திக்கலாம். ஆவணங்கள் அல்லது ஒப்பந்தங்களைப் படித்து கையொப்பமிடும்போது கூடுதல் கவனமாக இருங்கள். இளைய உடன்பிறந்தவர்களுடனான உறவுகள் பாதிக்கப்படலாம். எனவே இக்காலத்தில் எதையும் மறைத்து பேசாமல், வெளிப்படையாக பேசுங்கள்.

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் இக்காலத்தில் பொருள் சார்ந்த ஆதாயங்களைப் பெறுவார்கள். உங்கள் வங்கி கணக்கில் சில எதிர்பாராத பணம் வரலாம். ஆனால் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். கண் அல்லது தொண்டையில் தொற்று ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தனிப்பட்ட அல்லது தொழில் வாழ்க்கையில் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். பேசும் போது உங்கள் வார்த்தைகளைக் கவனித்து பேசுங்கள்.

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்களே, இக்காலத்தில் உங்கள் குணாதிசயங்களில் சில முரண்பாடுகள் இருக்கலாம். இது மனதில் குழப்பத்தை ஏற்படுத்துவதோடு, மற்றவர்கள் உங்களைப் புரிந்துகொள்வது கடினமாக இருக்கும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படலாம் என்பதால் இக்காலத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள்.

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே, உங்கள் மன அமைதி சீர்குலையும் மற்றும் இக்காலத்தில் உங்களால் சரியாக தூங்க முடியாது. சிலருக்கு தொழில் ரீதியாக வெளிநாடு செல்ல வாய்ப்புகள் கிடைக்கும். கண் சம்பந்தமான நோய்கள் வராமல் கவனமாக இருங்கள். இக்காலத்தில் மருத்துவமனைக்கு அடிக்கடி செல்லக்கூடும். மனதை அமைதியாக வைத்திருக்க முயலுங்கள்.

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்களே, நீங்கள் நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள். ஆனால் உங்கள் மூத்த சகோதரர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இக்காலத்தில் யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். உங்கள் பிள்ளைகள் உயர்கல்வியைத் தேர்ந்தெடுத்துத் தேர்வுகளில் சிறப்பாகச் செயல்படுவார்கள். உங்களின் வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion