For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மஹாளய அமாவாசை 2021: பித்ரு தர்ப்பணம் கொடுப்பதனால் அதிகரிக்கும் பலன்கள்

மஹாளய பட்சம் பிரதமை தொடங்கி அமாவாசை வரை 15 நாட்கள் சிறப்பான நாட்கள். இந்த நாட்களில் நாம் முன்னோர்களை வணங்கினால் அவர்கள் மகிழ்ச்சியடைந்து நம்மை ஆசிர்வாதம் செய்வார்கள்.

|

மஹாளயம் என்றால் மகான்கள் வாழும் இடம். பட்சம் என்றால் 15 நாட்கள். மஹாளய பட்சம் பிரதமை தொடங்கி அமாவாசை வரை 15 நாட்கள் சிறப்பான நாட்கள். இந்த நாட்களில் நாம் முன்னோர்களை வணங்கினால் அவர்கள் மகிழ்ச்சியடைந்து நம்மை ஆசிர்வாதம் செய்வார்கள். புரட்டாசி சனிக்கிழமை நாளில் மஹாளய அமாவாசை வருவது சிறப்பானது என்பதால் காசி, கயா, ராமேஸ்வரம் உள்ளிட்ட புண்ணிய தலங்களில் தர்ப்பணம் கொடுக்க மக்கள் குவிந்து வருகின்றனர். முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபடுவதால் தோஷங்கள் நீங்கி தெய்வீக சக்தி நமக்கு கிடைக்கும்.

Mahalaya Amavasya 2019

முன்னோர்களுக்கு நாம் கொடுக்கும் தர்ப்பணங்கள், சிரார்த்தங்கள் மூலம் பித்ருக்களுக்கு கூடுதல் பலமும் ஆத்மசக்திகளும் கிடைக்கும். அந்த சக்தியை பெறும் பித்ருக்கள் அவற்றை மகாவிஷ்ணுவின் பாதங்களில் சமர்ப்பிப்பதாக ஐதீகம். நாம் செய்யும் பித்ருதர்ப்பணங்கள், சிரார்த்தங்கள் நம் முன்னோருக்கு மட்டுமின்றி, நாம் வணங்கும் மகாவிஷ்ணுவையும் சென்று அடைகிறது. எனவேதான் மகாளய அமாவாசை மற்ற எல்லா அமாவாசை நாட்களையும் விட உயர்ந்ததாக கருதப்படுகிறது.

ஒவ்வொரு அமாவாசையன்றும் விடும் தர்ப்பணம் எமதர்மராஜனின் கைகளுக்கு சென்று அவர் நம் முன்னோர்களை அழைத்து அவர்களிடம் ஒப்படைப்பாராம். மஹாளய பட்சம் ஆரம்பிக்கும் நாளன்று நம் முன்னோர்களை அவரவர்கள் விருப்பமான இடத்திற்க்கு சென்று வரும்படி அனுமதிப்பாராம். நம் முன்னோர்களுக்கு விருப்பமான இடம் நம் இல்லம் தானே, எனவே அவர்கள் மஹாள்ய பட்சமான பதினைந்து நாட்களும் முன்னோர்கள் நம் இல்லத்தில் வந்திருப்பதாக நம்பிக்கை. இந்த பதினைந்து நாட்களும் நம் வசிப்பிடத்தை சுத்தமாக வைத்திருந்து நம் முன்னோர்களை வணங்கி வந்தால் நம் வாழ்க்கை விருத்தியடைவது உறுதி.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Mahalaya Amavasya 2021: Date And Time, History, Significance and Importance In Tamil

Mahalaya amavasya, also called Sarvapitri Amavasya, Pitra Moksha Amavasya or Pitru Amavasya is a Hindu tradition dedicated to the ‘pitrs’ or ancestors. It is observed on the amavasya new moon day of the Tamil Month of Purattasi.Mahalaya Amavasya, this ‘Pitru Dosh’ can be removed and also provide salvation to the deceased soul.
Desktop Bottom Promotion