Just In
- 10 min ago
இந்த ராசிக்காரங்க முதல் பார்வையிலேயே காதலில் விழுந்துவிடுவார்களாம்…நீங்க எந்த ராசி?
- 3 hrs ago
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை தரிசிப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
- 3 hrs ago
மிஸ் யுனிவர்ஸ் 2019 பட்டம் பெற்ற தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சோசிபினி பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்..
- 5 hrs ago
திருவண்ணாமலை அஷ்ட லிங்கங்கள் - எந்த ராசிக்காரர்கள் எந்த லிங்கத்தை கும்பிடணும் தெரியுமா?
Don't Miss
- Automobiles
டீ பாய் வேலை செய்தவர் இன்று பெரும் செல்வந்தர்... சொகுசு கார்களுடன் செம வாழ்க்கை... எப்படி தெரியுமா?
- Finance
பேங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளரா நீங்க.. உங்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்..!
- News
குடும்ப கட்சிக்கு நாட்டு நலனாம்.. ஆட்டுக்காக ஓநாய் அழுவுது.. எஸ் வி சேகர் கடும் தாக்கு
- Sports
தோனி எப்படிப்பட்டவர் தெரியுமா? அவரை போய் இப்படி பேசலாமா.. ரவி சாஸ்திரி ஆவேசம்!
- Movies
சிலர் என்னிடம் ஆபாசமாக பேசினர்.. தவறாக நடக்க முயன்றனர்.. விஜய் பட நடிகை பரபரப்பு!
- Education
பி.இ பட்டதாரிகளும் ஆசிரியர் ஆகலாம்! தமிழக அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்த பொறியாளர்கள்!
- Technology
அட்டகாசமான ரெட்மி கே30 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மஹாளய அமாவாசை 2019: பித்ரு தர்ப்பணம் கொடுப்பதனால் அதிகரிக்கும் பலன்கள்
மஹாளயம் என்றால் மகான்கள் வாழும் இடம். பட்சம் என்றால் 15 நாட்கள். மஹாளய பட்சம் பிரதமை தொடங்கி அமாவாசை வரை 15 நாட்கள் சிறப்பான நாட்கள். இந்த நாட்களில் நாம் முன்னோர்களை வணங்கினால் அவர்கள் மகிழ்ச்சியடைந்து நம்மை ஆசிர்வாதம் செய்வார்கள். புரட்டாசி சனிக்கிழமை நாளில் மஹாளய அமாவாசை வருவது சிறப்பானது என்பதால் காசி, கயா, ராமேஸ்வரம் உள்ளிட்ட புண்ணிய தலங்களில் தர்ப்பணம் கொடுக்க மக்கள் குவிந்து வருகின்றனர். மகாளய அமாவாசை சனிக்கிழமை அதிகாலை 3.08 மணிக்கு தொடங்குகிறது. முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபடுவதன் தோஷங்கள் நீங்கி தெய்வீக சக்தி நமக்கு கிடைக்கும்.
முன்னோர்களுக்கு நாம் கொடுக்கும் தர்ப்பணங்கள், சிரார்த்தங்கள் மூலம் பித்ருக்களுக்கு கூடுதல் பலமும் ஆத்மசக்திகளும் கிடைக்கும். அந்த சக்தியை பெறும் பித்ருக்கள் அவற்றை மகாவிஷ்ணுவின் பாதங்களில் சமர்ப்பிப்பதாக ஐதீகம். நாம் செய்யும் பித்ருதர்ப்பணங்கள், சிரார்த்தங்கள் நம் முன்னோருக்கு மட்டுமின்றி, நாம் வணங்கும் மகாவிஷ்ணுவையும் சென்று அடைகிறது. எனவேதான் மகாளய அமாவாசை மற்ற எல்லா அமாவாசை நாட்களையும் விட உயர்ந்ததாக கருதப்படுகிறது.
ஒவ்வொரு அமாவாசையன்றும் விடும் தர்ப்பணம் எமதர்மராஜனின் கைகளுக்கு சென்று அவர் நம் முன்னோர்களை அழைத்து அவர்களிடம் ஒப்படைப்பாராம். மஹாளய பட்சம் ஆரம்பிக்கும் நாளன்று நம் முன்னோர்களை அவரவர்கள் விருப்பமான இடத்திற்க்கு சென்று வரும்படி அனுமதிப்பாராம். நம் முன்னோர்களுக்கு விருப்பமான இடம் நம் இல்லம் தானே, எனவே அவர்கள் மஹாள்ய பட்சமான பதினைந்து நாட்களும் முன்னோர்கள் நம் இல்லத்தில் வந்திருப்பதாக நம்பிக்கை. இந்த பதினைந்து நாட்களும் நம் வசிப்பிடத்தை சுத்தமாக வைத்திருந்து நம் முன்னோர்களை வணங்கி வந்தால் நம் வாழ்க்கை விருத்தியடைவது உறுதி.

புனித நீராடல்
மஹாளய அமாவாசை காலத்தில் புண்ணிய தீர்த்தங்களுக்கு சென்று புனித நீராடி நம் முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக ப்ரார்த்தனை செய்து வர வேண்டும் என்பதற்காகவே ஏராளமானோர் வேதாரண்யம், ராமேஸ்வரம், கன்னியாகுமரி, திருச்சி அம்மா மண்டபம் உள்ளிட்ட பல புண்ணிய தலங்களில் ஏராளமானோர் குவிந்துள்ளனர். புனித நீராடி திதி கொடுத்து முன்னோர்களை வணங்கிய பின்னர் தானம் கொடுக்க வேண்டும்.

தலைமுறைக்கும் தர்ப்பணம்
நமது மூததையர்கள், முன்னோர்களை மறக்க கூடாது. தாத்தா, கொள்ளுத்தாத்தா, எள்ளுத்தாத்தா, பாட்டன் பூட்டன் என பல தலைமுறையினரை பெயரை நினைவில் வைத்து நாம் தர்ப்பணம் தரவேண்டும். அரிசி, பருப்பு, காய்கறிகள் குறிப்பாக வாழைக்காய், குடை, வஸ்திரங்கள், காலணி உள்பட பல பொருட்களை சக்திக்கு ஏற்ப தானம் கொடுக்க வேண்டும். வருங்கால சந்ததியினருக்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதனால் ஏற்படும் நன்மைகளை எடுத்துக்கூற வேண்டும். எள்ளும் தண்ணீரும் கொடுப்பது நம் முன்னோர்களை மகிழ்விக்கும்.

மஹாளய தர்ப்பணம்
தந்தை, தாத்தா, கொள்ளுத் தாத்தா, தாய் வழி தாத்தா, கொள்ளுத்தாத்தா, தந்தை வழி பாட்டி, கொள்ளுப் பாட்டி, தாய் வழி பாட்டி, கொள்ளுப் பாட்டி ஆகியோருக்கு திதி கொடுக்கலாம். அதே போல இறந்து போன அப்பா, அப்பாவின் சகோதரர்கள், சகோதரிகள் அவர்களது கணவர்கள் இறந்து போன குரு, எஜமானர், நண்பர்களுக்கும் கூட திதி கொடுக்கலாம்.

மஹாளய அமாவாசை நாட்கள்
மஹாயள அமாவாசை இந்த ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி அனுஷ்டிக்கப்படுகிறது. புரட்டாசி சனிக்கிழமை நாளில் அமாவாசை வருவது சிறப்பு. இதே போல இனி வரும் ஆண்டுகளில் மஹாளய அமாவாசை எப்போது வருகிறது என்று பார்க்கலாம். 2020 ஆம் ஆண்டு மஹாளய அமாவாசை செப்டம்பர் 17ஆம் தேதி வியாழக்கிழமை வருகிறது. 2021ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி புதன்கிழமை மஹாளய அமாவாசை வருகிறது. 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி ஞாயிறன்று மஹாளய அமாவாசை கடைபிடிக்கப்படுகிறது. 2023ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி புரட்டாசி கடைசி சனிக்கிழமையன்று மஹாளய அமாவாசை வருகிறது. 2024ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி மஹாளய அமாவாசை வருகிறது. இந்த நாட்களில் காசி, கயா உள்ளிட்ட புனித தலங்களுக்கு சென்று முன்னோர்களுக்கு திதி கொடுக்கலாம்.

முன்னோர்கள் வாழ்த்து
இருபத்தேழு நட்சத்திரம் உள்ளது போல் இருபத்தேழு யோகம் உள்ளது. இதில் மறைந்த நம் முன்னோர்களுக்கு என்று உள்ளது வியதீபாதயோகம். இருபத்தேழு நாட்களுக்கு ஓரு முறை வரும். அமாவாசை விட சிறப்பான நாள் முன்னோர் வழிபாடு செய்வதற்கு. இந்த நாளில் பகல் 12மணிக்கு இறந்த முன்னோர்களை நினைவு கூர்ந்து அவர்கள் ஆத்மா சாந்தி அடைய வேண்டி பசித்தோர்க்கு உணவு அளிக்க வேண்டும். இதனால் முன்னோர்கள் திருப்தி அடைந்து நம்மை வாழ்த்துவார்கள். தோஷங்கள் நீங்குவதோடு தடைகளும் நோய்களும் நீங்கும் நன்மைகள் நடக்கும்.

அமாவாசையில் பைரவருக்கு படையல்
காசி, கயா, ராமேஸ்வரத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுக்கலாம். காசி நகர காவல் தெய்வமாக திகழும் காலபைரவர்க்கு அமாவாசை இரவு படையலிட்டு பிதுர் தோஷநிவர்த்தியாக வேண்டி பிரார்த்தனை செய்து பின் படையல் பொருட்களை நாய்களுக்கு உணவளிக்க வேண்டும். இது போல் தொடர்ந்து செய்து வர சில மாதங்களில் பிதுர் தோஷம் குறைந்து குடும்பத்தில் அமைதி சந்தோஷம் ஏற்படும். இந்த ஆண்டு தர்ப்பணம் கொடுக்க இயலாதவர்கள் இனி வரும் காலங்களில் மறக்காமல் தர்ப்பணம் கொடுங்கள். நன்மைகள் நடக்கும்.