For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மகாளய அமாவாசையில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது?

மகாளயா அமாவாசை முன்னோர்களுக்கு நாம் பித்ரு காரியங்களை செய்வதற்கான முக்கியமான அமாவாசை. மகாளய பட்ச காலம் பிரதமை தொடங்கி அமாவாசை வரை அனுஷ்டிக்கப்படுகிறது.

|

மகாளய பட்ச காலம் தற்போது நடைபெற்றுக்கெண்டிருக்கிறது. முன்னோர்கள் பூலோகம் வந்து நம்முடன் தங்கியிருக்கும் இந்த நாளில் நாம் அவர்களுக்கு உணவளிக்க வேண்டும். இந்த மகாளய அமாவாசையில் கோவில்களுக்கு சென்று வழிபடுவதோடு பித்ரு தோஷம் நீங்க திதி தர்ப்பணம் கொடுங்க. முக்கியமாக தானம் செய்யுங்கள்.

துர்மரணம் அடைந்தவர்களுக்கு கண்டிப்பாக திதி கொடுப்பது அவசியம். இந்த மகாளய அமாவாசையில் இறந்தவர்களுக்கு திதி கொடுப்பது நல்லது தோஷம் தீரும். பித்ரு தோஷம் உள்ளவர்கள் பூர்வ புண்ணியம் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கால கட்டத்தில் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வழிபட தோஷங்கள் நீங்கி நன்மைகளும், புண்ணியமும் கிடைக்கும்.

Mahalaya Amavasya

மகாளய பட்ச காலத்தில் வீடுகளை சுத்தமாக வைத்திருந்து முன்னோர்களை வரவேற்க வேண்டும். நாம் அசைவ உணவு சமைத்து சாப்பிடக்கூடாது. முடி, நகம் வெட்டக்கூடாது. தாம்பத்ய உறவில் ஈடுபடக்கூடாது. காக்கைக்கு பிடித்தமான உணவு கொடுக்க வேண்டும்.

மகாளய அமாவாசை தினத்திலும் மகாளய பட்ச காலத்திலும் தானம் செய்வதினாலும் திதி கொடுப்பதனாலும் பூர்வ புண்ணிய பலன்கள் அதிகரிக்கும். தோஷமான ஜாதகமாக இருந்தாலும் முன்னோர்களின் ஆசி இருந்தால் நல்லவைகள் நடக்கும். அதே நேரத்தில் நம்முடைய ஜாதகம் யோக ஜாதகமாக இருந்து நாம் முன்னோர்களின் சாபத்தோடு இருந்தால் நமக்கு பாதிப்புகள் அதிகமாகும். எனவே நாம் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து அவர்களின் ஆசியை பெறுவோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Mahalaya Amavasya: Do’s and Don’ts Mahalaya Pitri Paksha

Mahalaya amavasya or simply Mahalaya Know about do's don'ts during pitru paksha and mahalaya amavasai Sarva Pitru Amavasya is also known as Pitru Amavasya, Peddala Amavasya.
Desktop Bottom Promotion