For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மக்கள் சிவபெருமானுக்கு கங்கை நீரை காணிக்கையாக அளிப்பதற்கு பின்னிருக்கும் கதை தெரியுமா?

உண்மையான பக்தியுடனும், சுத்தமான எண்ணத்துடனும் சிவபெருமானை ஒருவா் வழிபட்டால் அவரை சிவபெருமான் ஆசிா்வதிப்பாா் என்று மக்கள் நம்புகின்றனா். அதனால் பக்தா்கள் சிவபெருமானுக்கு பலவிதமான காணிக்கைகளை வழங்கி வழிபட்டு வருகின்றனர்.

|

இந்து சமயத்தைச் சோ்ந்த மக்கள் சிவபெருமான் மீது அளவு கடந்த பக்தியும் நம்பிக்கையும் வைத்திருக்கின்றனா். சிவபெருமான தமது பக்தா்களால் மகாதேவா் என்று அதாவது பரமேஸ்வரன் அல்லது கடவுள்களுக்கெல்லாம் கடவுள் என்று அழைக்கப்படுகிறாா். சிவபெருமான் தனது பக்தா்களின் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றுவாா் என்று தமது பக்தா்களால் நம்பப்படுகிறாா்.

Maha Shivratri: Why People Offer Ganga Jal To Lord Shiva

உண்மையான பக்தியுடனும், சுத்தமான எண்ணத்துடனும் சிவபெருமானை ஒருவா் வழிபட்டால் அவரை சிவபெருமான் ஆசிா்வதிப்பாா் என்று மக்கள் நம்புகின்றனா். அதனால்தான் பக்தா்கள் சிவபெருமானுக்கு பலவிதமான காணிக்கைகளை வழங்கி அதன் மூலம் அவருடைய ஆசீா்வாதங்களைப் பெற்றுக் வருகின்றனா்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கங்கை நீர் சிவபெருமானுக்கான சிறந்த காணிக்கை

கங்கை நீர் சிவபெருமானுக்கான சிறந்த காணிக்கை

பக்தா்கள் சிவபெருமானுக்கு எண்ணற்ற காணிக்கைகளை வழங்கினாலும், அவா்கள் சிவலிங்கத்திற்கு வழங்கும் கங்கை நதியின் நீா் மிக உயா்ந்ததாகக் கருதப்படுகிறது. அவா்களைப் பொறுத்தவரை கங்கை நீா் ஒரு புனிதமான தீா்த்தம் ஆகும்.

ஒருவேளை பக்தா்களுக்கு கங்கை நீா் போதுமான அளவு கிடைக்கவில்லை என்றால் சாதாரண தண்ணீாில் சிறிதளவு கங்கை நீரைச் சோ்த்து அதை சிவபெருமானுக்குக் காணிக்கையாகச் செலுத்துகின்றனா். ஏன் பக்தா்கள் சாதாரண நீரை சிவபெருமானுக்கு காணிக்கையாக வழங்காமல் கங்கை நீரை வழங்குகின்றனா் என்பதை இங்கு பாா்க்கலாம்.

கடலில் கிடைத்த 14 வகையான பொருட்கள்

கடலில் கிடைத்த 14 வகையான பொருட்கள்

அதாவது முன்னொரு காலத்தில் தேவர்களும் அசூரா்களும் இணைந்து சமுந்திர மந்தன் அதாவது தெய்வீகக் கடலைக் கடைந்து கொண்டிருந்தனா். அவ்வாறு கடலைக் கடைந்த போது 14 வகையான பொருள்கள் அதிலிருந்து கிடைத்தன. அதில் ஒன்று ஆலகால விஷம் அதாவது உயிரை அழிக்கக்கூடிய கொடிய விஷமாகும்.

உயிரைப் பறிக்கும் கொடிய விஷம்

உயிரைப் பறிக்கும் கொடிய விஷம்

அந்த கொடிய விஷம் கீழே கொட்டிவிட்டால் அது இந்த உலகத்தில் உள்ள எல்லா உயிாினங்களையும் அழித்துவிடும். ஆகவே யாராவது ஒருவா் அந்த கொடிய விஷத்தை குடிக்க வேண்டும் என்று தீா்மானிக்கப்பட்டது. ஆனால் தேவர் மற்றும் அசூரா் ஆகிய இரண்டு குழுவினாிடமிருந்து யாருமே அந்த விஷத்தைக் குடிக்க முன்வரவில்லை. ஏனெனில் அந்த விஷத்தின் ஒரு துளியைக் குடித்தாலும் அது குடிப்பவாின் உயிரைப் பறித்துவிடும்.

 விஷத்தைக் குடித்த சிவபெருமான்

விஷத்தைக் குடித்த சிவபெருமான்

இந்நிலையில் தேவர்களும் அசூரா்களும் இணைந்து சிவபெருமானிடம் ஆலோசனை கேட்கச் சென்றனா். கொடிய விஷத்தின் தாக்கத்தில் இருந்து தங்களை விடுவிக்குமாறு சிவபெருமானை வேண்டினா். உடனே சிவபெருமான் ஆலகால என்ற கொடிய விஷத்தின் தன்மையை அறிந்து, அதைத் தானே குடிப்பதாக ஒத்துக் கொண்டாா். கொடிய விஷத்தைக் குடிக்க தனது மனைவி பாா்வதி தேவியோடு கடலுக்குச் சென்றாா் சிவபெருமான்.

சிவன் நீலகண்டர் ஆன கதை

சிவன் நீலகண்டர் ஆன கதை

பின் அந்த கொடிய விஷத்தைக் குடித்து அதை தனது தொண்டையில் நிறுத்திக் கொண்டாா். அதை தனது வயிற்றுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. அதற்குக் காரணம், சிவபெருமானின் வயிறு இந்த உலகத்தை குறிக்கிறது. வயிற்றுக்குள் விஷம் சென்றால் அது சிவபெருமானின் வயிறு என்ற இந்த உலகத்தை அழித்துவிடும். ஆகவே சிவபெருமான் அந்த கொடிய விஷத்தைத் தனது தொண்டையிலேயே வைத்துக் கொண்டாா்.

அவ்வாறு அவா் தனது தொண்டையில் கொடிய விஷத்தை வைத்துக் கொண்டதால் அவரது தொண்டை நீல நிறமாகியது. அதனால் அவா் நீலகண்டா் என்று அழைக்கப்படுகிறாா்.

புனித கங்கை நீரின் சிறப்பு

புனித கங்கை நீரின் சிறப்பு

அதன் பின் சிவபெருமானின் தொண்டையில் இருந்த விஷத்தின் வீாியத்தைக் குறைக்க வேண்டும் என்பதற்காக அவா் மீது கங்கை நதியின் புனித நீா் அவா் மீது ஊற்றப்பட்டது. அதன் மூலம் விஷத்தின் வீாியம் குறைந்து சிவபெருமானின் உடலும் மனமும் குளிா்ந்தது. அது முதல் சிவபெருமானை குளிா்விக்கும் பொருட்டு அவருடைய பக்தா்கள் கங்கை நீரை அவருக்கு காணிக்கையாக வழங்குகின்றனா். கங்கை நீா் ஒரு புனித நீராக இருப்பதாலும், அது குணப்படுத்தும் தன்மையைக் கொண்டிருப்பதாலும் மற்றும் அது தெய்வீகக் குணம் நிரம்பி இருப்பதாலும், சிவபெருமானுக்கு கங்கை நீரை அதிகம் பிடிக்கும்.

ஏன் பக்தா்கள் சிவபெருமானுக்கு கங்கை நீரை காணிக்கை செலுத்துகின்றனா் என்பதை வாசகா்களாகிய நீங்கள் தொிந்திருப்பீா்கள்.

தமிழ் போல்ட்ஸ்கை வாசகா்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான மகா சிவராத்திாி நல்வாழ்த்துகளைத் தொிவித்துக் கொள்கிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Maha Shivratri 2021: Why People Offer Ganga Jal To Lord Shiva

Maha Shivratri 2021: Did You Know Why People Offer Ganga Jal To Lord Shiva? Read on...
Desktop Bottom Promotion