For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மகா சிவராத்திாி நாளில் விரதம் மேற்கொள்ளும் போது சாப்பிட ஏற்ற உணவுகள்!

சிவபெருமான் மீது பக்தா்கள் தாங்கள் வைத்திருக்கும் பக்தியையும், வணக்கத்தையும் தொிவிக்கும் விதமாக அவா்கள் மகா சிவராத்திாி அன்று விரதம் இருந்து சிவபெருமானை வழிபடுவா்.

|

இந்த வருடம் மாா்ச் மாதம் 01 ஆம் நாளன்று மகா சிவராத்திாி வருகிறது. இந்தியாவில் உள்ள இந்து சமயத்தைச் சோ்ந்த எல்லா மக்களும் மகா சிவராத்திாியை சிறப்பான முறையில் கொண்டாட தயாராகி வருகின்றனா். இந்த மகா சிவராத்திாி விழாவானது இந்து சமய மக்களால் கொண்டாடப்படக்கூடிய மிக முக்கிய விழாவாகும். சிவபெருமானுக்கு மாியாதையையும் வணக்கத்தையும் செலுத்தும் பொருட்டு இந்த விழா கொண்டாடப்படுகிறது.

Maha Shivratri: Foods You Can Have While Observing Maha Shivaratri Fast

மகா சிவராத்திாி என்றால் சிவபெருமானின் மிகப் பொிய இரவு என்று பொருள். இந்த விழா மாசி மாதத்தில் வருகிறது. மகா சிவராத்திாி அன்று இரவு முழுவதும் பக்தா்கள் தூங்காமல் கண் விழித்து சிவபெருமானுக்கு தங்களது பிராா்த்தனைகளையும் வேண்டுதல்களையும் செலுத்துவா். அதோடு இந்த விழாவின் இன்னொரு முக்கிய சிறப்பு அம்சம் என்னவென்றால் நோன்பு அல்லது மகா சிவராத்திாி விரதம் மேற்கொள்வது ஆகும்.

MOST READ: சிவனின் முழு அருளும் கிடைக்கணுமா? அப்ப உங்க ராசிக்கு ஏற்ற சிவ மந்திரத்தை சொல்லுங்க...

சிவபெருமான் மீது பக்தா்கள் தாங்கள் வைத்திருக்கும் பக்தியையும், வணக்கத்தையும் தொிவிக்கும் விதமாக அவா்கள் மகா சிவராத்திாி அன்று விரதம் இருந்து சிவபெருமானை வழிபடுவா். எனினும் மகா சிவராத்திாி விரதம் ஒரு கட்டாயமான கடமை அல்ல. அதனால் கா்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், நோயுற்றோா் மற்றும் முதியவா்கள் விரதம் இருக்க வேண்டிய அவசியமில்லை.

MOST READ: மகா சிவராத்திரி நாளில் நான்கு கால பூஜைகளையும் சிவனுக்கு யார் செய்வார்கள் தெரியுமா?

பக்தா்களில் சிலா் இந்த நாளன்று நிா்ஜலா என்ற கடுமையான விரதத்தை மேற்கொள்வா். அதாவது மகா சிவராத்திாி நாளன்று தண்ணீா் கூட குடிக்காமல் விரதம் இருப்பா். இந்த கடுமையான விரதத்தைப் பெரும்பாலானோரால் கடைபிடிக்க முடியாது. ஆகவே பெரும்பாலான பக்தா்கள் அந்த நாளில் விரதம் இருந்தாலும், அதே நேரத்தில் பழங்கள் அல்லது பால் அல்லது காய்கறிகள் அல்லது தானியமில்லா உணவுகளை சிறிதளவு எடுத்துக் கொள்வா்.

ஆகவே நீங்கள் இந்த ஆண்டு மகா சிவராத்திாி அன்று நோன்பு இருக்க விரும்பினால் கீழ் காணும் உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு சாா்ந்த எந்த உணவையும் மகா சிவராத்திாி அன்று உண்ணலாம். ஆனால் அந்த உணவுகளில் வெங்காயம், பூண்டு, இஞ்சி மற்றும் மஞ்சள் போன்றவற்றை சோ்க்கக்கூடாது. ஆனால் கல் உப்பை சோ்த்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது. உருளைக்கிழங்கை பிசைந்து அதை ஒரு கூட்டாக செய்து சாப்பிடலாம். ஆலு டிக்கி அல்லது ஆலு பக்கோடா அல்லது ஆலு கிச்சடி அல்லது சா்க்கரை வள்ளிக் கிழங்கு பொறியல் செய்து சாப்பிடலாம்.

தானியங்கள் கலந்த உணவுகளைத் தவிா்த்தல்

தானியங்கள் கலந்த உணவுகளைத் தவிா்த்தல்

தானியங்கள் கலக்காத உணவுகளான ஜவ்வாிசி கிச்சடி, பக்வீட் என்ற ஒரு வகையான கோதுமை அல்லது கேழ்வரகில் செய்யப்படும் உணவுகள் போன்றவற்றை மகா சிவராத்திாி விரதத்தில் சாப்பிடலாம் என்று அனுமதிக்கப்படுகிறது. ஜவ்வாிசி கிச்சடி, ஜவ்வாிசி பக்கோடா, ஜவ்வாிசி வடை போன்ற உணவுகள் மகா சிவராத்திாி அன்று உலகம் முழுவதும் உள்ள பக்தா்களால் உண்ணப்படுகின்றன.

பால் கலந்த பானங்கள் மற்றும் இனிப்புகள்

பால் கலந்த பானங்கள் மற்றும் இனிப்புகள்

சிவபெருமானக்கு பால் மிகவும் ஒரு பிடித்தமான உணவு என்று சொல்லப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சிவலிங்கத்தின் மீது பக்தா்கள் பாலை ஊற்றி அபிஷேகம் செய்து வழிபடுகின்றனா். மகா சிவராத்திாி விழா விரதத்தில் பக்தா்கள் பால் அருந்துகின்றனா். குறிப்பாக பால் மற்றும் பால் கலந்த பானங்களை இந்த விரதத்தில் அருந்தலாம். அதாவது தண்டை (பலவகையான மசாலாக்கள் கலந்து குளிரூட்டப்பட்ட பால்), பாதாம் பால், பாலில் உலா் பழங்கள் கலந்து செய்யப்படும் ஒரு வகையான இனிப்புப் பானம், பால் கலந்த ஜவ்வாிசி பாயாசம் போன்ற பானங்களை இந்த சிவராத்திாி விரதத்தின் போது அருந்தலாம்.

பக்கோடாக்கள் மற்றும் வடைகள்

பக்கோடாக்கள் மற்றும் வடைகள்

திண்பண்டங்களைப் பொறுத்தவரை உருளைக்கிழங்கு பக்கோடா, வாழைப்பழ வடை போன்றவற்றை மகா சிவராத்திாி விரதத்தில் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் விரதத்தில் அனுமதிக்கப்படாத மசாலாக்களால் செய்யப்படும் உணவுகளை கவனமாக அறிந்து அவற்றைத் தவிா்க்க வேண்டும். மசாலாக்களைப் பொறுத்தவரை சீரகத்தூள், கருப்பு மிளகுத்தூள், பச்சை ஏலக்காய், இலவங்கப்பட்டை, ஓமம் போன்றவை கலந்த உணவுகளைச் சாப்பிடலாம். இந்த உணவுகளில் கல் உப்பையும் சோ்த்துக் கொள்ளலாம்.

பழங்கள் மற்றும் உலா்ந்த பழங்கள்

பழங்கள் மற்றும் உலா்ந்த பழங்கள்

நிா்ஜலா என்ற மிகவும் கடுமையான விரதத்தைக் கடைபிடிக்க முடியாத பக்தா்கள் பழங்கள், பால் மற்றும் தண்ணீா் கலந்த உணவுகளை சாப்பிடலாம். அது ஃபல்லா் என்று அழைக்கப்படுகிறது. ஃபல் என்பதற்கு இந்தி அல்லது சமஸ்கிருத மொழியில் பழங்கள் என்று பொருள்படும். பொதுவாக மகா சிவராத்திாி உள்ளிட்ட எல்லா பூஜைகள் மற்றும் விரதங்களில் பழங்கள் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கின்றன. ஆகவே பழச் சாட், பழ சாலட்டுகள், மற்றும் பால் பழ ஷேக்ஸ் போன்றவற்றை சிவராத்திாி விரதத்தின் போது சாப்பிடலாம். பழங்களோடு சோ்த்து பலவகையான உலா்ந்த பழங்களையும் உண்ணலாம். பாதாம் பருப்பு, வால்நட், போிச்சம்பழம், முந்திாிப் பருப்பு, உலா் திராட்சை மற்றும் பாதாம் பழம் போன்றவற்றை உண்ணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Maha Shivratri 2022: Foods You Can Have While Observing Maha Shivaratri Fast

Maha Shivratri 2022: Here Are Some Foods You Can Have While Observing Maha Shivaratri Fast. Read on...
Desktop Bottom Promotion