For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மகா சிவராத்திரி நாளில் நான்கு கால பூஜைகளையும் சிவனுக்கு யார் செய்வார்கள் தெரியுமா?

ஒவ்வொரு மாதமும் தேய்பிறை நாளில் வரும் சதுர்த்தசி திதி சிவராத்திரி. மகாசிவராத்திரி மாசி மாத சதுர்த்தசி திதியினை நாம் மகா சிவராத்திரியாக கொண்டாடுகிறோம்.

|

மகா சிவராத்திரி மகிமை தரக்கூடிய நாள். இந்த நாளில் மனிதர்கள் மட்டுமல்ல பிரம்மா, விஷ்ணு முப்பத்து முக்கோடி தேவர்களும் விரதம் இருந்து அனுஷ்டித்து நான்கு கால பூஜைகளில் பங்கேற்று அபிஷேகம் செய்கின்றனர். இந்த நாளின் சிறப்புகளை ஒரே வார்த்தையில் சொல்லி விட முடியாது. இந்த நான்கு கால பூஜைகளை தரிசனம் செய்தால் நோய்கள் நீங்கும், மூன்று பிறவிகளிலும் செய்த பாவங்கள் நீங்கும், செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.

Maha Shivratri 2022: Date, Viratham And Pooja Timings

அன்னை உமையாளுக்காக சரீரத்திலும் பாதி தந்து பற்றற்ற நிலையில் இருக்கும் எம் பெருமான் அர்த்தனாதீஸ்வரராக ஆனது இந்த நாளில்தான். அர்ஜூனன் தனது தவத்தால் பாசுபதம் என்னும் அஸ்திரத்தை பெற்றது. கண்ணப்ப நாயனார் என்னும் அன்புக்குரிய வேடன் சிவகதி என்னும் முக்தி அடைந்தது இந்த நாளில்தான்.

MOST READ: மகா சிவராத்திரி 2020: எந்த ராசிக்காரர்கள் எந்த வடிவ சிவனை வழிபடுவது நல்லது தெரியுமா?

பகீரதன் தவப்பலன் கங்கையை பாரிக்கு தந்தது இந்த நாளில்தான். பதினாறு வயதுடைய மார்க்கண்டேயனுக்காக பாச கயிற்றை பஷ்பமாகியது இந்த நாளில்தான். இத்தகைய சிறப்பு வாய்ந்த மகா சிவராத்திரி நாளில்தான் அப்பன் ஈசனுக்கு நான்கு ஜாம பூஜைகள் செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஜாமத்தின் போதும் வெவ்வேறு விதமான அபிஷேகம்கள், அர்ச்சனைகள், ஆராதனைகள் செய்யப்படும். விடிய விடிய நடைபெறும் இந்த அபிஷேக ஆராதனைகளை காண கண் கோடி வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Maha Shivratri 2022: Date, Viratham And Pooja Timings

In 2022, Maha Shivratri will be celebrated on Tuesday, March 01. Each year, the festival is celebrated in the month of Masi February-March, according to the Panchang.
Desktop Bottom Promotion