For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒவ்வொரு ராசிக்காரரும் சிவனை இப்படி வழிபட்டால் நினைச்சது நடக்குமாம்... உங்க ராசிக்கு எப்படி-ன்னு பாருங்க..

2023 ஆம் ஆண்டு மகா சிவராத்திரி பிப்ரவரி 18 ஆம் தேதி சனிக்கிழமை வருவதால், இந்நாளில் சிவபெருமானை அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தால், பலவித நன்மைகள் கிட்டும்.

|

Maha Shivaratri 2023: ஒவ்வொரு வருடமும் மகா சிவராத்திரி திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு இந்த திருவிழாவானது பிப்ரவரி 18 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சிவபெருமானை நினைத்து வழிபடும் பக்தர்களின் பாவங்களும், துன்பங்களும் நீங்கும். சனிப்பிரதோஷத்தன்று சிவனை வழிபடுவது நல்லது. அதுவும் இந்த வருட மகா சிவராத்திரி சனிக்கிழமை வருவதால், இந்நாளில் சிவபெருமானை அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தால், பலவித நன்மைகள் கிட்டும்.

Maha Shivaratri: How To Worship Lord Shiva According To The Zodiac

இப்போது ஒவ்வொரு ராசிக்காரர்களும், சிவபெருமானை எப்படி வணங்க வேண்டும் என்பதைக் காண்போம். அதைப் படித்து மகா சிவராத்திரி நாளில் அவ்வாறு சிவபெருமானை பூஜித்து நன்மை பெறுங்கள்.

MOST READ: சிவனின் முழு அருளும் கிடைக்கணுமா? அப்ப உங்க ராசிக்கு ஏற்ற சிவ மந்திரத்தை சொல்லுங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள், மகா சிவராத்திரி நாளில் சிவன் கோவிலுக்கு சென்று, பாலால் சிவனுக்கு அபிஷேகம் செய்து, சிவனுக்கு வன்னி பூக்கள் மற்றும் இலைகளை வழங்க வேண்டும். அதோடு இந்த ராசிக்காரர்கள் சிவராத்திரி நாளில் 'ஓம் நமசிவாய' எனும் சிவ மந்திரத்தைக் சொல்வதன் மூலம், சிவனின் அருளைப் பெறலாம்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள், மகா சிவராத்திரி அன்று சிவலிங்கத்திற்கு கங்கை நீரால் அபிஷேகம் செய்து, எருக்கம் பூ மற்றும் இலைகளை வழங்க வேண்டும். அதன் பின் 'ஓம் நமசிவாய' என்னும் மந்திரத்தை உச்சரித்து சிவனை வழிபட வேண்டும்.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள், சிவபெருமானுக்கு மகா சிவராத்தி நாளில் தேன் மற்றும் பாலால் அபிஷேகம் செய்து, வில்வ இலைகளை வழங்களை வேண்டும். அதோடு இந்த ராசிக்காரர்கள் 'ஓம் நமோ பகவதே ருத்ராய நமஹ' என்ற மந்திரத்தை கூறி சிவனை வழிபடுவது நல்லது.

கடகம்

கடகம்

மகா சிவராத்திரி அன்று கடக ராசிக்காரர்கள் சிவ லிங்கத்திற்கு பஞ்சாமிர்த அபிஷேகத்தை செய்து, வில்வ இலைகளை சிவனுக்கு வழங்கி, 'ஓம் நமசிவாய' என்னும் சிவ மந்திரத்தை சொல்லி சிவனை வழிபட வேண்டும்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் சிவபெருமானுக்கு மகா சிவராத்திரி அன்று கங்கை நீரால் அபிஷேகம் செய்து, வெள்ளை அரளியை சிவனுக்கு வழங்கி,

'ஓம் திரியம்பகம் யஜாமஹே சுகந்தி விர்மன்வர்தனம்.

உர்வாருகமிவ பந்தனநாம்ரோட்டிகா மரமலத்'

என்னும் மகாமிருத்யூஞ்சய மந்திரத்தை சொல்லி சிவனை வழிபட வேண்டும்.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்கள், சிவபெருமானுக்கு மகா சிவராத்திரி நாளில் பால் மற்றும் நெய்யால் அபிஷேகம் செய்ய வேண்டும். அதன் பின் மஞ்சள் அரளி பூ மற்றும் வன்னி இலைகளை சிவனுக்கு வழங்க வேண்டும். அதோடு மகா சிவராத்திரி நாளில் முடிந்தவரை 'ஓம் பகவதே ருத்ராய நமஹ' என்னும் மந்திரத்தை உச்சரித்தவாறு இருப்பது நல்லது.

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்கள், மகா சிவராத்திரி அன்று சிவ லிங்கத்திற்கு பாலால் அபிஷேகம் செய்து, எருக்கம் பூவை வழங்குங்கள். அதோடு 'ஓம் நமசிவாய' என்னும் மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவும்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள், சிவனுக்கு மகா சிவராத்திரி நாளில் பால் அபிஷேகம் செய்து, சாமந்தி பூ, வன்னி பூ மற்றும் வில்வ இலைகளால் சிவனை அலங்கரித்து, 'ஓம் நமசிவாய' என்னும் மந்திரத்தைச் சொல்லி சிவனை மனதார வழிபட்டால், துன்பங்கள் அகலும்.

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் மகா சிவராத்திரி அன்று குங்குமப்பூ கலந்த கங்கை நீரால் சிவனுக்கு அபிஷேகம் செய்து, வில்வ இலைகள் மற்றும் சிவப்பு மற்றும் மஞ்சள் அரளிப் பூவை சிவனுக்கு வழங்க வேண்டும். அதன் பின் 'ஓம் தத்புருஷாய வித்மஹே மகாதேவாய தீமஹி தந்நோ ருத்ர ப்ரசோதயாத்' என்னும் மந்திரத்தைக் கூறி சிவனை வழிபட வேண்டும்.

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்கள் மகா சிவராத்திரி நாளில் வெல்லத்தை கங்கை நீரில் கலந்து, அந்நீரால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து , நீல நிற பூக்களை சிவனுக்கு வழங்கி, 'ஓம் நமசிவாய' என்னும் மந்திரத்தை நாள் முழுவதும் மனதில் சொல்லிக் கொண்டே இருப்பது நல்லது.

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் சிவலிங்கத்திற்கு பஞ்சாமிர்த அபிஷேகத்தை மகா சிவராத்திரி நாளில் செய்து, தாமரை பூ மற்றும் வெள்ளை நிற சங்குப்பூவை சிவனுக்கு வழங்க வேண்டும். அதோடு நாள் முழுவதும் 'ஓம் நமசிவாய' என்னும் சிவ மந்திரத்தைச் சொல்ல வேண்டும்.

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்கள் மகா சிவராத்திரி நாளில் சிவ லிங்கத்திற்கு குங்குமப்பூ கலந்த பாலால் அபிஷேகம் செய்ய வேண்டும். அதன் பின் நெய் மற்றும் தேனால் அபிஷேகம் செய்து, மஞ்சள் நிற அரளிப் பூ மற்றும் வில்வ இலைகளை வழங்க வேண்டும். அதோடு மகா சிவராத்திரி நாளில் 'ஓம் தத்புருஷாய வித்மஹே மகாதேவாய தீமஹி தந்நோ ருத்ர ப்ரசோதயாத்' என்னும் மந்திரத்தைக் கூறி சிவனை வழிபட வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Maha Shivaratri 2023: How To Worship Lord Shiva According To The Zodiac Sign

Maha Shivaratri 2023: How To Worship Lord Shiva According To The Zodiac. Read on...
Desktop Bottom Promotion