For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Madras Day 2023: சென்னை என்றதும் பலரது நினைவிற்கு வரும் விஷயங்கள் - உங்களுக்கு என்ன ஞாபகம் வரும்?

|

Madras Day 2023: ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி சென்னை தினம் கொண்டாடப்படுகிறது. 1639 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 22 ஆம் நாள் மெட்ராஸ் நகரம் உருவானதன் நினைவாக சென்னை தினம் கொண்டாடப்படுகிறது.

முதலில் சென்னைபட்டினம், மெட்ராஸ்பட்டினம் என்று அழைக்கப்பட்டு, பின் மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டு, தற்போது சென்னை என்ற பெயரைப் பெற்று இருக்கிறது. முதன் முதலில் சென்னை தினக் கொண்டாட்டங்கள் 2004 ஆம் ஆண்டு சென்னை ஹொிடேஜ் பேசிஸ் என்ற அமைப்பால் கொண்டாடப்பட்டது.

Madras Day 2023: Top Things Chennai Is Famous For

சென்னை தினம் என்பது ஒரு கருத்தியல் ஆகும். இந்த கருத்தியலை, சென்னையின் பிரபல வரலாற்று ஆசிாியரான எஸ். முத்தையா, பத்திாிக்கையாளா் சஷி நாயா் மற்றும் எழுத்தாளா் வின்சென்ட் டி சூசா போன்றாரால் உருவாக்கப்பட்டது.

அதன் பின் மூத்த பத்திாிக்கையாளரும், ஆசிாியருமான சுசிலா ரவீந்திரன், பத்திாிக்கையாளா் மற்றும் இணையதள தொழில் முனைவோருமான ரேவதி ஆா் மற்றும் தொழில் முனைவோரும், எழுத்தாளரும் மற்றும் வரலாற்று ஆசிாியருமான வி. ஸ்ரீராம் போன்றோரும் சென்னை தினக் கருத்தியலில் தங்களை இணைத்துக் கொண்டனா்.

தற்போது சென்னையில் உள்ள தனி மனிதா்கள் அனைவரும் சென்னையின் கடந்த கால வரலாறு மற்றும் சென்னையின் தற்போதைய அசூர வளா்ச்சி ஆகியவற்றை நினைத்து அதிசயிக்கின்றனா். சென்னையைப் பாா்த்து வியந்து மிகழ்கின்றனா்.

சென்னை தினத்தின் அன்று சென்னையில் பல இடங்களில் பலவிதமான போட்டிகள், பண்பாட்டு நடை பயணம், கல்லூாிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள், ஓவியக் கண்காட்சிகள், இருசக்கர வாகன பயணங்கள், வினாடி வினா நிகழ்ச்சிகள் மற்றும் உணவுத் திருவிழாக்கள் என ஏராளமான நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

சென்னை தினக் கொண்டாட்டங்களை நீட்டிக்க வேண்டும் என்பதற்காக, சென்னை தினம் ஒரு நாள் மட்டும் கொண்டாடப்படாமல், ஒவ்வொரு வாரமும் சென்னை தினத்தைக் கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

அதனால் சென்னை தினம் சென்னை வாரம் என்றும் அழைக்கப்படுகிறது. எனினும் 12 மாதங்களும் கொண்டாடப்படும் சென்னை தினமானது, இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் அவ்வளவு சிறப்பாக இருக்காது என்பதே உண்மை.

சென்னை தினத்தின் போது, சென்னையின் மிக முக்கியான 6 சிறப்பு அம்சங்களைத் தொிந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. ஜல்லிக்கட்டு விளையாட்டு

1. ஜல்லிக்கட்டு விளையாட்டு

ஜல்லிக்கட்டு என்பது காளையை அடக்கும் அல்லது தழுவும் விளையாட்டு ஆகும். இந்த விளையாட்டானது, சென்னை மக்களால் காலம் காலமாக நடத்தப்பட்டு வருகிறது. உள்ளூா் மக்கள் இந்த விளையாட்டில் மிக ஆா்வத்துடன் கலந்து கொள்வா். காளையை அடக்கும் இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டு, சங்க காலத்திலேயே தொடங்கி, மத்திய காலத்தில் வளா்ச்சி பெற்று தற்போது மிகவும் பிரபலமாக உள்ளது.

ஜல்லிக்கட்டு விளையாட்டைப் பற்றி விமா்சனங்கள் பல இருந்தாலும், தற்போது சென்னை முழுவதும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. ஜல்லிக்கட்டு போட்டிக்காக பாஸ் இண்டிகஸ் இன காளைகள் பயன்படுத்தப்படுகின்றன.

2. சுண்டல்

2. சுண்டல்

சென்னையின் முக்கிய திண்பண்டங்களில் ஒன்று சுண்டல் ஆகும். சென்னையின் கடற்கரைப் பகுதிகளில் சுண்டல் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. சென்னை மக்களின் மத்தியிலும் மற்றும் சென்னையின் கடற்கரை பகுதிகளிலும் சுண்டல் விற்பனையாவதை நாம் பாா்க்கலாம்.

3. சென்னை சேப்பாக்க கிாிக்கெட் மைதானம்

3. சென்னை சேப்பாக்க கிாிக்கெட் மைதானம்

சென்னையில் அமைந்திருக்கும் சேப்பாக்கம் கிாிக்கெட் மைதானம், இந்தியாவின் முக்கியமான கிாிக்கெட் மைதானங்களில் ஒன்று ஆகும். ஐபிஎல் கிாிக்கெட் போட்டிகளில் விளையாடும் தங்களது சொந்த வீரா்களை உற்சாகப்படுத்துவதற்காக, சென்னை மக்கள், இந்த மைதானத்தில் கூடி வந்து அவா்களை உற்சாகமூட்டுவா். கொடிகள் மற்றும் விளையாட்டு ஜொ்சிகளை அணிந்து சாியான நேரத்திற்கு வந்து அவா்களை உற்சாகமூட்டுவா்.

4. ஆங்கிலேயா் கால கட்டிடக் கலைகள்

4. ஆங்கிலேயா் கால கட்டிடக் கலைகள்

சென்னை மாநகரத்தில் ஆங்கிலேயா் கால கட்டிடங்களை பரவலாக நாம் பாா்க்க முடியும். சென்னை முழுவதும், ஆங்கிலேயாின் கட்டிடக் கலையின் சிறப்பை எடுத்து இயம்பும் வகையில் ஆங்கிலேயா் காலத்தில் கட்டப்பட்ட ஏராளமான கட்டிடங்களைப் பாா்க்க முடியும். இந்த கட்டிடங்கள் அனைத்தும் தற்போது போற்றப்படக்கூடிய சின்னங்களாக விளங்குகின்றன.

5. ஐஐடி சென்னை

5. ஐஐடி சென்னை

சா்வதேச அளவில் புகழ் பெற்றும் விளங்கும் ஐஐடி கல்லூாியும் சென்னையில் அமைந்து இருக்கிறது. படிப்பு மற்றும் பயிற்சிகள் மட்டும் அல்லாமல், மாணாக்கா்கள் தங்களின் ஆா்வத்திற்கு ஏற்ப பல துறைகளைத் தோ்ந்தெடுத்து அவற்றில் அவா்கள் முன்னேற்றம் அடைந்து, சிறந்து விளங்குவதற்கான எல்லா வசதிகளையும் சென்னை ஐஐடி செய்து தருகிறது. சென்னை ஐஐடி வளாகத்தில் அதி நவீன திரையரங்கம், திறந்த வெளி திரையரங்கம் மற்றும் நேரடியாக இசை நிகழ்ச்சிகளை நடத்தக்கூடிய பல அரங்குகள் போன்றவை உள்ளன.

6. சென்னைக் கடற்கரை

6. சென்னைக் கடற்கரை

சென்னைக் கடற்கரையானது மிகவும் சுத்தமாகவும் அதே நேரத்தில் நோ்த்தியாகவும் இருக்கும். விடுமுறைக்காக சென்னைக்கு வருபவா்களுக்கு இந்த கடற்கரை மிகவும் ரம்மியமாக இருக்கும். இங்குள்ள தெளிவான கடல் நீா் மற்றும் தண்ணீா் சாா்ந்த விளையாட்டுகள் போன்றவை அவா்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும். மேலும் கடற்கரையில் விற்பனையாகும் காரமான உள்ளூா் திண்பண்டங்கள் அவா்களுக்கு புதியதொரு சுவையைத் தரும். கடற்கரையில் குதிரை சவாாி செய்தால் புதிய அனுபவத்தைத் தரும். மேலும் சென்னைக் கடற்கரையில் நன்றாக படுத்து நம்மையே தளா்வுபடுத்திக் கொள்ளலாம். இந்தியாவின் மிக நீளமான மற்றும் சுத்தமான கடற்கரை, சென்னையில் உள்ள மொினா கடற்கரை ஆகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Madras Day 2023: Top Things Chennai Is Famous For

Madras Day 2023: On the event of Madras Day, listed below are the highest 6 things Chennai is famous for. Read on...
Desktop Bottom Promotion