For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

'மெட்ராஸ் டே' கொண்டாடப்படுவதற்கு பின்னாடி இருக்கும் வரலாற்று ரகசியம் இதுதானாம்..!

|

Madras Day 2023 In Tamil: வானுயர்ந்த கட்டிடங்கள், எங்கும் மக்கள் கூட்டம், திரும்பிய இடமெல்லாம் கடைகள், எல்லா பொருட்களும் வாங்க தி.நகர் மற்றும் பாண்டிபஜார், மெரினா என்று நீண்டு கிடக்கும் மிகப் பெரிய கடற்கரை, மெட்ரோ ரயில் சேவை, திரும்பும் திசைகள் எல்லாம் அசர வைக்கும் மேம்பாலங்கள் எப்போதும் பிஸியாகவே காணப்படும் சென்னை அனைவருக்கும் பிடித்த நகரம்.

தமிழகத்தின் தலைநகரம் சென்னை வந்தாரை வாழவைக்கும் பூமியாக கருதப்படுகிறது. தமிழகத்தின் எல்லா மாவட்டங்களில் இருந்தும் படித்தவர்கள் முதல் பாமர மக்கள் அனைவரும் சென்னையை நோக்கி படையெடுத்து வருகிறார்கள். சென்னையை பூர்விகமாக கொண்டவர்களை விட மற்ற ஊர்களில் இருந்து பிழைப்புக்காக இங்கு வந்தவர்களே அதிகம்.

Madras Day 2023 Date, History, Significance and Interesting Facts About the Journey of Chennai in Tamil

தற்போது தமிழகத்தின் தலைநகராக விளங்கும் சென்னை, உலகின் சிறந்த நகரங்களுள் ஒன்றாக உள்ளது. மெட்ராஸ் டே என்பது மெட்ராஸ் நகரத்தை நிறுவியதன் நினைவாக ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு திருவிழா ஆகும். சென்னையின் உள்கட்டமைப்பு, நகரப் போக்குவரத்து, வியாபாரம் என்ற விதத்தில் சென்னை தற்போது மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ளது.

தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் ஆகஸ்ட் 22 ஆம் நாளை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பெற்ற ஒரு சிறப்பு தினம் தான் சென்னை தினம். இக்கட்டுரையில் சென்னை தினத்தை பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சென்னை

சென்னை

சென்னை தமிழ்நாட்டின் தலைநகரமும், இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும் ஆகும். 1996 ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்நகரம், மதராசப்பட்டினம், மெட்ராஸ் மற்றும் சென்னப்பட்டனம் என்றும் அழைக்கப்பட்டு வந்தது.

உலகின் 35 பெரிய மாநகரங்களுள் ஒன்றான சென்னை, வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. 17ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் சென்னையில் கால் பதித்தது முதல், இன்று வரை சென்னை நகரம் ஒரு முக்கிய நகரமாக வளர்ந்து வந்திருக்கிறது. சென்னை தென்னிந்தியாவின் வாசலாகக் கருதப்படுகிறது.

சென்னையின் வரலாறு

சென்னையின் வரலாறு

சென்னை நகருக்கு நீண்ட வரலாறு உள்ளது. கி.பி. 1 ஆம் நூற்றாண்டு முதல் பல்லவ, சோழ மற்றும் விஜயநகரப் பேரரசுகளில் சென்னை ஒரு முக்கிய இடமாக விளங்கியதாகக் கருதப்படுகிறது.

வெளிநாடுகளிலிருந்து வர்த்தகர்களும், மத போதகர்களும், ஆங்கிலேயர்களும் சென்னைக் கடற்கரை மூலம் வந்துள்ளனர். அப்போது இந்தப் பகுதி முதலில் சென்னப்பட்டணம் என்ற சிறிய கிராமமாக இருந்தது.

சென்னை நகர உருவாக்கம்

சென்னை நகர உருவாக்கம்

1639 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி தான், தமிழர்களின் அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் இந்நகரம் உருவானது. அன்றைய தினம், கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ்டே, ஆண்ட்ரு கோகன் ஆகியோர் தங்களது உதவியாளர் பெரிதிம்மப்பா என்பவருடன் இப்போது செயின்ட் ஜார்ஜ் கோட்டை உள்ள இடத்தை வாங்கினார்கள்.

ஆங்கிலேயர்கள் 1639 ஆம் ஆண்டு செயின்ட் ஜார்ஜ் கோட்டையைக் கட்டியதைத் தொடர்ந்து தான், சென்னை நகரம் உருவாகி பின்னர் வளர்ச்சி அடைந்தது.

சென்னப்பட்டனம்

சென்னப்பட்டனம்

1639ஆம் ஆண்டு கிழக்கு இந்திய கம்பெனி தாமல் வெங்கடப்பா நாயக்கரிடம் இருந்து ஒரு சிறு நிலத்தை வாங்கி சென்னை நகரத்தை உருவாக்க காரணமாக இருந்த நாளை கொண்டாடுவதே சென்னை தினமாகும்.

வந்தவாசியை ஆண்ட தாமல் வெங்கடப்பா நாயக்கர், பூந்தமல்லியை ஆண்ட தாமல் அய்யப்ப நாயக்கர் ஆகிய சகோதரர்களின் தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரால் 'சென்னப்பட்டனம்' என்று அழைக்கப்படுகிறது.

எப்போது முதல் கொண்டாடப்படுகிறது?

எப்போது முதல் கொண்டாடப்படுகிறது?

சென்னை தினம் என்பது தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639, ஆகஸ்ட் 22 ஆம் நாளை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பெற்ற ஒரு சிறப்பு நாள் ஆகும்.

இந்நாள் 2004 ஆம் ஆண்டில் இருந்து சென்னை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை நகரத்தின் பழமையைக் கொண்டாடவேண்டும், அதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற விதத்தில் 'மெட்ராஸ் டே' நிகழ்ச்சியைத் தொடங்கப்பட்டது.

சென்னை தினம்

சென்னை தினம்

பத்திரிக்கையாளர்களான சசி நாயர், மயிலாப்பூர் டைம்ஸின் ஆசிரியரான வின்சென்ட் டி சோஸா, வரலாற்று ஆய்வாளர் முத்தையா ஆகிய மூவரும் இணைந்து உருவாக்கியதே இந்த சென்னை தினம்.

முதன் முதலில் ஒரு சில கருப்பு வெள்ளைப் படங்களுடன் 2004ஆம் ஆண்டு தொடங்கிய இந்தக் கொண்டாட்டம் இன்று வளர்ச்சியடைந்து புகைப்படக் கண்காட்சி, உணவுத் திருவிழா, மாரத்தான் ஓட்டம் என பல பரிமாணங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டோடு சென்னைக்கு 384 வயதாகிறது.

சென்னையின் சிறப்பு

சென்னையின் சிறப்பு

சென்னை நகரில் உள்ள மெரினா கடற்கரை உலகின் நீளமான கடற்கரைகளுள் ஒன்று. சென்னை கோலிவுட் என அறியப்படும் தமிழ்த் திரைப்படத் துறையின் தாயகம் ஆகும். பல விளையாட்டு அரங்கங்கள் உள்ள சென்னையில் பல விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறுகின்றன.

சென்னையின் பொருளாதாரம் பலதரப்பட்ட தொழில்களைச் சார்ந்தது. தகவல் தொழில்நுட்பம், வன்பொருள் தயாரிப்பு, மருத்துவம் போன்ற பல துறைகளைக் கொண்டது. ஊர்தி மற்றும் ஊர்திகளின் உதிரி பாகங்கள் உற்பத்தியில் நாட்டின் 35 விழுக்காடு சென்னையை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மேலும் தகவல் தொழில்நுட்பத் துறையில் நாட்டில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

சென்னையின் பொருளாதாரம்

சென்னையின் பொருளாதாரம்

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின் முதலே தெற்காசியாவின் முக்கிய துறைமுகங்களுள் ஒன்றாகச் சென்னை விளங்கி வருகிறது. பல இந்திய நிறுவனங்களின் கிளைகள் சென்னையில் உள்ளன.

இந்தியாவின் முக்கிய நகரங்களுள் ஒன்றாகவும், தமிழகத்தின் தலைநகராகவும் சென்னை விளங்குவதால், பல தேசிய மற்றும் மாநில அரசு நிறுவனங்கள் சென்னையில் உள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Madras Day 2023 Date, History, Significance and Interesting Facts About the Journey of Chennai in Tamil

Here we are talking about the Madras Day 2023 Date, History, Significance and Interesting Facts About the Journey of Chennai in Tamil.
Desktop Bottom Promotion