Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
Chandra Grahan 2022 Horoscope: சந்திர கிரகணத்தால் இந்த ராசிக்காரர்களுக்கு நிதி இழப்பு ஏற்பட வாய்ப்பிருக்கு..
கிரகணம் ஏற்படும் போது, அதன் தாக்கம் நிச்சயம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். இப்போது 2022 நவம்பர் மாத சந்திர கிரகணத்தால் 12 ராசிகளிலும் அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.
ஒவ்வொரு ஆண்டும் 2 சூரிய கிரகணம் மற்றும் 2 சந்திர கிரகணம் நிகழும். அந்த வகையில் 2022 ஆம் ஆண்டின் முதல் சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் ஆண்டின் தொடக்ககத்தில் நிகழ்ந்தன. மேலும் சமீபத்தில் கடைசி சூரிய கிரகணம் அக்டோபர் 25 ஆம் தேதி நிகழ்ந்தது. இந்த சூரிய கிரகணத்தின் போது சூரியன் தனுசு ராசியில் இருந்தார். அதேப் போன்று இந்த ஆண்டின் கடைசி மற்றும் இரண்டாவது சந்திர கிரகணம் நவம்பர் மாதம் 8 ஆம் தேதி, அதாவது இன்று நிகழவுள்ளது. சந்திர கிரகணத்தின் போது சந்திரன் மேஷ ராசியில் இருப்பார்.

சந்திர கிரகணமானது ஜோதிடத்தில் சிறப்பானதாக பார்க்கப்படுகிறது. சந்திர கிரகணம் ஏற்படும் போது, அதன் விளைவு பூமியில் இருக்கும். அதேப் போல் கிரகணம் ஏற்படும் போது, அதன் தாக்கம் நிச்சயம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். இப்போது 2022 நவம்பர் மாத சந்திர கிரகணத்தால் 12 ராசிகளிலும் அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம். கீழே 12 ராசிகளுக்குமான சந்திர கிரகண ராசிபலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணமானது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. குறிப்பாக இந்நாளில் பண இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அதோடு சில ஆரோக்கிய பிரச்சனைகளையும் சந்திக்கக்கூடும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணமானது கலவையான பலன்களைத் தருவதாக இருக்கும். இந்நாளில் ரிஷப ராசிக்காரர்கள் நிதி நிலை சிறப்பாக இருக்கும். அதே வேளையில் மாணவர்கள் சில எதிர்மறை விளைவுகளை சந்திக்கக்கூடும். அதுவும் போட்டித் தேர்வை எழுதும் மாணவர்கள் தோல்வியை சந்திக்க நேரிடும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணமானது நற்பலனைத் தரும். இந்த கிரகணத்தால் நிறைய பணத்தை சம்பாதிப்பீர்கள் மற்றும் சிக்கிய பணத்தை திரும்ப பெறுவதற்கான வாய்ப்புள்ளது. வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கலாம். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணம் தொல்லைகள் நிறைந்ததாக இருக்கும். அதுவும் வேலை செய்பவர்கள் தங்கள் பணியிடத்தில் சில பிரச்சனைகளை சந்திக்கலாம். சந்திர கிரகணத்தின் தாக்கத்தால் கடக ராசிக்காரர்கள் ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதிப்படலாம்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணத்தால் திருமண உறவுகள் மற்றும் காதல் உறவுகள் வலுவடைவதற்கான வாய்ப்புள்ளது. திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைத்து, விரைவில் திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்புள்ளது.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணம் கலவையான பலன்களைத் தருவதாக இருக்கும். வேலை செய்பவர்களுக்கு பணியிடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. அதே வேளையில் குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது.

துலாம்
ஆண்டின் கடைசி மற்றும் இரண்டாவது சந்திர கிரகணத்தால் துலாம் ராசிக்காரர்களுக்கு நிதி இழப்பு ஏற்படலாம். எனவே நீங்கள் பணத்தை புத்திசாலித்தனமாக செலவிட வேண்டும். இல்லாவிட்டால், பெரிய இழப்பை சந்திக்க நேரிடும்.

விருச்சிகம்
ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சிறப்பானதாக இருக்கும். திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கலாம் அல்லது குழந்தைகளால் சில நற்செய்திகளைப் பெற வாய்ப்புள்ளது.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணத்தால் வேலையில் ஏற்ற இறக்கங்களை காண நேரிடும். பணிபுரிபவர்கள் உயர் அதிகாரிகளிடம் இருந்து சற்று விலகி, உடன் பணிபுரிபவர்களுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்ள முயற்சிப்பது நல்லது.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதத்தில் நிகழும் சந்திர கிரகணத்தால் சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. மேலும் புதிய வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதோடு உங்களின் பொறுப்புக்களும் அதிகரிக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் நல்ல பலன்களைத் தரும். குறிப்பாக மரியாதை மற்றும் பொறுப்புக்கள் அதிகரிக்கும். குடும்பத்தினருடனான உறவு சமூகமாக இருக்கும். திருமணமாகாதவர்கள் இந்த சந்திர கிரகணத்தால் ஒரு நல்ல வாழ்க்கைத் துணையைப் பெறுவார்கள்.

மீனம்
மீன ராசிக்காரர்கள் சந்திர கிரகணத்தினால் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக உண்ணும் உணவுகளில் அதிக கவனத்தை செலுத்த வேண்டும். நிதி இழப்பைத் தவிர்ப்பதற்கு, உங்கள் பணத்தை புத்திசாலித்தனமாக செலவிட முயற்சி செய்யுங்கள்.



Click it and Unblock the Notifications











