Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
200 ஆண்டுகளுக்கு பின் சந்திர கிரகண நாளில் உருவாகும் அசுப யோகம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்..
ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணம் நவம்பர் 08 ஆம் தேதி நிகழவுள்ளது. இந்த இரண்டாவது சந்திர கிரகணத்தின் போது 2 அசுப யோகங்கள் உருவாகின்றன. இது 200 ஆண்டுகளுக்கு பின் உருவாகிறது.

பொதுவாக கிரகண நிகழ்வு அசுபமாக கருதப்படுகிறது. ஒரு ஆண்டில் 4 கிரகணங்கள் நிகழும். அந்த வகையில் 2 சூரிய கிரகணம் மற்றும் 1 சந்திர கிரகணம் நிகழ்ந்துவிட்டது. இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணம் நவம்பர் 08 ஆம் தேதி நிகழவுள்ளது. இந்த இரண்டாவது சந்திர கிரகணத்தின் போது 2 அசுப யோகங்கள் உருவாகின்றன. இது 200 ஆண்டுகளுக்கு பின் உருவாகிறது. இந்த அசுப யோகங்களால் சில ராசிக்காரர்களுக்கு மோசமாக இருக்கும். இப்போது ஆண்டின் கடைசி மற்றும் இரண்டாவது சந்திர கிரணத்தின் போது உருவாகும் அசுப யோகத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு மோசமாக இருக்கும் என்பதைக் காண்போம்.

சந்திர கிரகண நாளில் உருவாகும் அசுப யோகங்கள்
ஜோதிடத்தின் படி, சனியும் செவ்வாயும் நேருக்கு நேர் இருப்பதால் ஷடாஷ்டக யோகம், நீச்ச பங்க அசுப யோகம் உருவாகிறது. அதே வேளையில் இந்த யோகங்களானது மேஷ ராசியின் பரணி நட்சத்திரத்தில் இருக்கும். சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி வரும் போது தான் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இப்போது இந்த சந்திர கிரகண நாளில் உருவாகும் அசுப யோகங்களால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம் வாருங்கள்.

மேஷம்
சந்திர கிரகணம் மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமற்றதாக இருக்கும். ஏனெனில் இந்த கிரகணமானது மேஷ ராசியில் தான் நடக்கிறது. எனவே இக்காலத்தில் ஆரோக்கிய பிரச்சனைகள் வரலாம். குடும்ப உறுப்பினர்களுடன் தகராறு மற்றும் கருத்து வேறுபாடு ஏற்படலாம். இதுத் தவிர முதலீடு செய்ய நினைத்தால், அதற்கு இக்காலம் சரியாக இருக்காது. அதேப்போல் கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நஷ்டம் ஏற்படலாம்.

துலாம்
சந்திர கிரகணம் துலாம் ராசிக்காரர்களுக்கு வேதனை நிறைந்ததாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். வாழ்க்கைத் துணையுடன் ஏதாவது தகராறு ஏற்பட வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு வேலையில் தடைகள் ஏற்படலாம். வணிகர்களுக்கு இக்காலம் சவாலானதாக இருக்கும். வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணம் தீங்கு விளைவிப்பதாக இருக்கும். இந்நாளில் பயம் உங்களை ஆட்டிப்படைக்கும். பணியிடத்திலோ அல்லது தனிப்பட்ட வாழ்க்கையிலோ ஏதாவது ஒரு விஷயத்தால் பதற்றமடைவீர்கள். நாள்பட்ட நோய்கள் உங்களை தொந்தரவு செய்யும். வணிக ஒப்பந்தங்கள் தடைபட்டு நின்றுவிடும். ஏழரை சனியின் தாக்கம் வேறு உள்ளது. எனவே சற்று கவனமாக இருங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications