Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சாதகமான பலனைத் தரப்போகுது தெரியுமா?
நவம்பர் மாதத்தில் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் நிகழவுள்ளது. அதுவும் நவம்பர் 08 ஆம் தேதி நிகழவுள்ளது. இந்த சந்திர கிரகணம் மேஷ ராசியில் நிகழ்வுள்ளது. மேலும் இந்நாளில் பல கிரகங்கள் துலாம் ராசியில் ஒன்றாக பயணிக்கின்றன.
கிரகணங்கள் பொதுவாக மங்களகரமானதாக கருதப்படுவதில்லை. மேலும் ஒரு ஆண்டில் 4 கிரகணங்கள் நிகழும். அதில் 2 சூரிய கிரகணம் மற்றும் 1 சந்திர கிரகணம் முடிந்துவிட்டன. இந்த நவம்பர் மாதத்தில் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் நிகழவுள்ளது. அதுவும் நவம்பர் 08 ஆம் தேதி நிகழவுள்ளது. இந்த சந்திர கிரகணம் மேஷ ராசியில் நிகழ்வுள்ளது.

மேலும் இந்நாளில் பல கிரகங்கள் துலாம் ராசியில் ஒன்றாக பயணிக்கின்றன. எனவே இந்த சந்திர கிரகணத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு இந்த சந்திர கிரகணம் சாதகமானதாக இருக்கும். இப்போது 2022 ஆம் ஆண்டின் கடைசி மற்றும் இரண்டாவது சந்திர கிரகணம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பலனை வழங்கப் போகிறது என்பதைக் காண்போம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணம் நல்ல பலனைத் தரப் போகிறது. குறிப்பாக இந்த ராசிக்காரர்களின் தொழிலில் நல்ல வளர்ச்சியைத் தரப் போகிறது. பணிபுரிபவர்களுக்கு பணியிடத்தில் நல்ல பாராட்டு கிடைக்கும். மேலும் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வுருமானம் அதிகரிப்பதற்கான வழிகள் திறக்கப்படும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு வரவுள்ள சந்திர கிரகணமா சாதகமான பலனை வழங்கவுள்ளது. அதுவும் பயணங்களால் நல்ல பண பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு உடன் வேலை செய்வோரின் ஒத்துழைப்பு கிடைக்கும். பணியிடத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

சிம்மம்
ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் சிம்ம ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்க போகிறது. வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு பெறுவதற்கான வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். திருமணமாகாமல் இருப்பவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். இதுவரை சர்ச்சையில் சிக்கி தவித்துக் கொண்டிருந்தால், சந்திர கிரகணத்திற்கு பின் அதிலிருந்து விடுபடுவீர்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணம் அற்புதமான பலன்களை வழங்க போகிறது. முக்கியமாக நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பணிகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். பெற்றோர்களால் நல்ல பண பலன்களைப் பெறுவீர்கள். பணியிடத்தில் பதவி உயர்வைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கும் சந்திர கிரகணம் நல்ல பலனைத் தரும். அதுவும் இந்த ராசிக்காரர்கள் நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். வேலை தேடி அலைந்து கொண்டிருந்தவர்களுக்கு, நல்ல வேலை கிடைக்கும்.

கிரகண காலங்களில் செய்யக்கூடாதவைகள்
கிரகண காலங்களில் செய்யக்கூடாத சில செயல்கள் உள்ளன. அவை சாமி சிலைகளை தொடுவது, சாப்பிடுவது மற்றும் குடிப்பது, உடலுறவு கொள்வது, தூங்குவது, நகம் கடிப்பது, எண்ணெய் மசாஜ் செய்வது, மேக்கப் செய்வது போன்றவற்றை கிரகண காலங்களில் தவிர்க்க வேண்டும். மேலும் கர்ப்பிணி பெண்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளை வெட்டுவதைத் தவிர்க்க வேண்டும் மற்றும் கூர்மையான பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











