Latest Updates
-
இன்றைய ராசிபலன் 01 மே 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவருமாம் -
புதன் மேஷ ராசியில் அஸ்தமனமாவதால் மே மாதம் இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் -
வாஸ்து படி உங்க வீட்டில் துடைப்பம் இந்த இடத்தில் இருந்தால் உங்கள் வீட்டுக்கு அதிர்ஷ்டம் எப்பவுமே வராதாம் -
வெயில் கொடுமையா? கோடை கால திருமணத்தை ஜில்லுனு மாத்த இந்த 5 ஐடியாக்கள் போதும்! -
Labour Day Wishes:தொழிலாளர் தினத்தில் உங்களுக்கு தெரிஞ்ச உழைப்பாளிகளுக்கு இந்த வாழ்த்தை சொல்ல மறந்துராதீங்க -
1 கப் மைதா இருந்தா இந்த சூப்பரான மங்களூர் பன்-யை ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும் -
சஞ்சய் கபூர் சொத்து விவகாரம்: கரிஷ்மா கபூர் குழந்தைகளின் உரிமையை மீட்டெடுத்த நீதிமன்றம்! -
இந்த 4 எழுத்துக்களில் பெயர் தொடங்குபவர்கள் ராஜவாழ்க்கை வாழ பிறந்தவர்களாம் - உங்க பெயரின் முதல் எழுத்து என்ன? -
கர்நாடகா ஸ்டைல் கசப்பே இல்லாத பாவக்காய் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
வீட்டில் இந்த செடிகள் இருந்தா போதும்… காற்று சுத்தமாகும், பணமும் அதிர்ஷ்டமும் தானாக வரும்!
வரும் சந்திர கிரகணத்தால் அதிகம் பாதிக்கப்படப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
ஜோதிட கண்ணோட்டத்தில் கிரகணத்தைப் பார்த்தால், இது ஒவ்வொரு ராசிகளிலும் குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் நவம்பர் 19 ஆம் தேதி நடக்கும் சந்திர கிரகணத்தால் நற்பலன்களும், மோசமான பலன்களும் கிடைக்கும்.
Chandra Grahan 2021 Effects on Zodiac Signs in Tamil: நவம்பர் மாதம் உலகமே சந்திர கிரகணத்தைக் காணவுள்ளது. இந்த சந்திர கிரகணம் நவம்பர் 19 ஆம் தேதி நிகழவுள்ளது. இந்து நாட்காட்டியின் படி, சந்திர கிரகணம் கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி நாளில் ரிஷப ராசியில் நிகழ்கிறது. இதுவே இந்த ஆண்டின் கடைசி முழு சந்திர கிரகணம் ஆகும். ஆனால் இந்தியாவில் இது ஒரு பகுதி சந்திர கிரகணமாக இருக்கும்.

ஜோதிட கண்ணோட்டத்தில் கிரகணத்தைப் பார்த்தால், இது ஒவ்வொரு ராசிகளிலும் குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் நவம்பர் 19 ஆம் தேதி நடக்கும் சந்திர கிரகணத்தால் சிலருக்கு நற்பலன்களும், சிலருக்கு மோசமான பலன்களும் கிடைக்கும். இப்போது சந்திர கிரணத்தால் ஒவ்வொரு ராசிக்காரர்களும் பெறும் பலன்கள் என்னவென்பதைக் காண்போம்.

மேஷம்
இந்த கிரகணத்தால் உங்கள் வருமானத்தில் மாற்றத்தை அனுபவிப்பீர்கள். எனவே புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும் நீங்கள் தொழிலில் சில நல்ல வாய்ப்புக்களையும் பெறுவீர்கள். எனவே அதை தவறவிடாதீர்கள். ஏனெனில் அது உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தும்.

ரிஷபம்
இந்த சந்திர கிரகணம் உங்கள் ராசியில் நிகழ்கிறது. எனவே முடிவெடுக்கும் போது மிகவும் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. நிதி ரீதியாக, நீங்கள் சில தேவையற்ற விஷயங்களுக்கு செலவிடலாம். எனவே உங்கள் செலவுகளை கண்காணியுஙகள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நீங்கள் உங்களை நன்கு கவனித்துக் கொள்ளுஙகள். இல்லாவிட்டால், நீங்கள் வயிறு தொடர்பான பிரச்சனையால் அவதிப்படலாம்.

மிதுனம்
ஆன்மீக ரீதியில் உங்களை நீங்களே உணர்வீர்கள் மற்றும் தியானத்தில் மன அமைதியை காண்பீர்கள். வேலையைப் பொறுத்தவரை, நாள் அமைதியாகவும் இனிமையாகவும் இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, விஷயங்கள் நன்றாக இருக்கும். ஆனால் ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

கடகம்
இந்த கிரகணம் உங்கள் ராசியின் 11 ஆவது வீட்டில் நடக்கிறது. இந்த வீடு நட்பைக் குறிக்கிறது. எனவே உங்கள் நண்பர்களுடன் தரமான நேரத்தை செலவிட நினைத்தால், அதற்கு இது சிறந்த நாள். மேலும் நீங்கள் உங்கள் நண்பர்களிடம் இருந்து தொலைவில் இருந்தால், உறவுகளை சீர்செய்ய இது சிறந்த நாள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். ஆனால் முடிவுகளை எடுக்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலையைப் பொறுத்தவரை, மகிழ்ச்சியான நாளாக இருக்கும். நிதி ரீதியாக, செலவில் கவனம் செலுத்துங்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நீங்கள் மகிழ்ச்சியாகவும், மன அழுத்தமின்றியும் இருப்பார்கள்.

கன்னி
இந்த சந்திர கிரகணத்தின் போது நீங்கள் உங்கள் இதயம் சொல்வதைக் கேட்டு பின்பற்றி நடந்தால் வெற்றி கிடைக்கும். எனவே நீங்கள் எதையாவது செய்ய திட்டமிட்டிருந்தால், அதற்கு இதுவே சிறந்த நேரம்.

துலாம்
இந்த சந்திர கிரகணம் உங்கள் ராசியில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். வேலையைப் பொறுத்தவரை, கடின உழைப்பிற்கான வெகுமதியைப் பெறுவீர்கள். நிதி சிக்கல்கள் தீர்ந்து லாபத்தைப் பெறுவீர்கள். இருப்பினும், உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால், நீங்கள் உங்கள் வேலையில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

விருச்சிகம்
இந்த கிரகணத்தில், நீங்கள் உறவுகளின் வலுவான உணர்வை உணர்வீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உடல்நலம் சிறப்பாக இருக்கும். இருப்பினும், கவனமாக சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது.

தனுசு
கடந்த சில நாட்களாக நீங்கள் சோம்பேறித்தனமாக உணர்ந்தால், இந்த கிரகணம் உங்களை மீண்டும் சிறப்பாக செயல்பட உதவும். உங்களை நீங்களே கவனித்துக் கொள்வீர்கள் மற்றும் மன அழுத்தத்தை சிறப்பாக நிர்வகிப்பீர்கள். வேலையைப் பொறுத்தவரை, இந்நாள் இனிமையாக இருக்கும்.

மகரம்
இந்த கிரகணம் ஆக்கப்பூர்வமாகவும் சுறுசுறுப்பாகவும் மாறும். எனவே நீங்கள் உங்கள் காதல் மறைந்துவிட்டதாக உணர்ந்தால், இழந்த காதலைத் தூண்டுவதற்கு இதுவே சரியான நேரம். வேலையைப் பொறுத்தவரை, விஷயங்கள் இனிமையாக இருக்கும். ஆனால் உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

கும்பம்
இந்த சந்திர கிரகணம் சாதகமாக இருப்பதால், உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். நிதி ரீதியாக, விஷயங்கள் சீராக இருக்கும். வேலையில், நீங்கள் சில புதிய பொறுப்புகள் மற்றும் உங்கள் செயல்திறனுக்கான பாராட்டைப் பெறுவீர்கள். இருப்பினும், நீங்கள் பெரிய அளவு பணத்தை முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தால், உங்கள் முடிவை இறுதி செய்வதற்கு முன் இருமுறை யோசியுங்கள்.

மீனம்
வேலையைப் பொறுத்தவரை, உங்களின் கடின உழைப்பு மற்றும் சிறந்த வேலைக்கான வெகுமதியைப் பெறுவீர்கள். ஏன் பதவி உயர்வைக் கூட பெறலாம். இருப்பினும், நீங்கள் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தால், உங்களை நீங்கள் நன்கு கவனித்துக் கொள்ளுங்கள். நிதி ரீதியாக, கடன்கள் தீர்க்கப்படும்.



Click it and Unblock the Notifications