Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
மார்ச் மாதம் இந்த 4 ராசிக்கு ரொம்ப அதிர்ஷ்டமானதா இருக்கப் போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
கிரகங்களின் நிலைகளைப் பொறுத்து ஒவ்வொரு மாதமும் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் பலன்கள் வேறுபடும். மார்ச் மாதத்தில் பல முக்கிய கிரகங்கள் தங்கள் நிலைகளை மாற்றுகின்றன
Lucky Zodiac Signs In March 2023: ஒவ்வொரு மாதத்தில் நுழையும் போதும், அந்த மாதம் நமக்கு எந்த மாதிரி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஆவல் இருக்கும். அந்த வகையில் மார்ச் மாதம் வந்துவிட்டது. கிரகங்களின் நிலைகளைப் பொறுத்து ஒவ்வொரு மாதமும் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் பலன்கள் வேறுபடும். மார்ச் மாதத்தில் பல முக்கிய கிரகங்கள் தங்கள் நிலைகளை மாற்றுகின்றன. இதனால் சில ராசிக்காரர்களின் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதோடு, தொழில் வாழ்க்கையில் நல்ல லாபத்தைக் காணப் போகிறார்கள்.

முக்கியமாக இந்த மாதத்தில் அஸ்தமன நிலையில் இருந்த சனி உதயமாகவுள்ளதால், சனிபகவானால் கிடைக்கவிருக்கும் நற்பலன்கள் இந்த மாதத்தில் இருந்து கிடைக்கவுள்ளது. இப்போது 2023 மார்ச் மாதத்தில் அதிர்ஷ்டத்தைப் பெறப் போகும் அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! மார்ச் மாதத்தில் தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும், வெற்றியையும் காண்பீர்கள். கணக்காளர் வேலை செய்பவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். மாதத்தின் இரண்டாம் பாதியில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். அதுவும் மார்ச் 12 ஆம் தேதிக்கு பிறகு சுக்கிரன் 12 ஆவது வீட்டிற்கு செல்வதால், காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் அற்புதமான பலன்கள் கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்டத் தொடங்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! மார்ச் மாதத்தில் கிரகங்கள் அனைத்தும் சாதகமான நிலையில் உள்ளன. இதனால் வியாபாரம் செய்பவர்களுக்கு மாதத்தின் இரண்டாம் பாதியில் நல்ல லாபம் கிடைக்கும் மற்றும் உறவுகள் மேம்படும். செவ்வாயின் நிலையால் குடும்பத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆயினும் குரு நல்ல நிலையில் இருப்பதால் சாதகமான பலன்கள் கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, டென்சன், தோள்பட்டை வலி மற்றும் செரிமான பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது.

கன்னி
கன்னி ராசிக்காரர்களே! மார்ச் மாதத்தில் தொழிலில் நல்ல வெற்றியைக் காண்பீர்கள். வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு இந்த மார்ச் மாதத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மேலும் மாணவர்கள் இந்த மாதத்தில் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். இந்த மாதத்தில் பொறுமையையும், நிதானத்தையும் கடைப்பிடிக்க வேண்டும். இந்த மாதத்தின் முதல் பாதியில் காதல் மற்றும் திருமண வாழ்க்கை மிகவும் இனிமையாக மகிழ்ச்சி நிறைந்து இருக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களே! மார்ச் மாதத்தில் வேலை, வியாபாரம், படிப்பு, காதல், திருமண வாழ்க்கை, நிதி நிலை போன்றவை மிகவும் சிறப்பாக இருக்கும். வெளிநாடு செல்ல முயற்சிகளை எடுப்பவர்களுக்கு, இந்த மாதத்தில் செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். இந்த மாதத்தில் நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். காதல் மற்றும் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications