Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
2023-ல் உங்க ராசிக்கு எந்த மாதம் அதிர்ஷ்டமானதாக இருக்கும்-ன்னு தெரியுமா?
உங்களுக்கு 2023 ஆம் ஆண்டில் உங்கள் ராசிக்கு எந்த மாதம் அதிர்ஷ்டமானதாக, உங்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் மாதமாகவும், வெற்றியை அள்ளித்தரும் மாதமாக இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறீர்களா?
ஒவ்வொரு ஆண்டிலும் நமக்கு ஒவ்வொரு மாதம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். அந்த வகையில் 2023 ஆம் ஆண்டில் நுழையவுள்ளோம். இந்த புதிய ஆண்டில் சிலருக்கு சில மாதங்கள் மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். இந்த அதிர்ஷ்டமான மாதத்தில் தொழில் அபரிமிதமான வெற்றி கிடைக்கும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும், நிதி நிலையில் முன்னேற்றம் தெரியும், காதல் கைக்கூடும். மொத்தத்தில் அனைத்து விஷயங்களிலும் சாதகமான பலன்கள் கிடைக்கும்.

உங்களுக்கு 2023 ஆம் ஆண்டில் உங்கள் ராசிக்கு எந்த மாதம் அதிர்ஷ்டமானதாக, உங்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் மாதமாகவும், வெற்றியை அள்ளித்தரும் மாதமாக இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறீர்களா? கீழே 2023-ல் ஒவ்வொரு ராசிக்கும் எது அதிர்ஷ்டமான மாதமாக இருக்கும் என கொடுக்கப்பட்டுள்ளது.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு 2023 ஆம் ஆண்டில் அதிர்ஷ்டமான மாதம் என்றால் அது ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள் தான். இந்த மாதங்கள் இந்த ராசிக்காரர்களுக்கு பண ரீதியாக மட்டுமின்றி, காதல் ரீதியாகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும்.

ரிஷபம்
நீங்கள் ரிஷப ராசியா? உங்களுக்கு 2023 ஆம் ஆண்டில் ஏப்ரல் மற்றும் மே மாதம் சிறப்பான மற்றும் அதிர்ஷ்டமான மாதமாக இருக்கும். இந்த இரண்டு மாதங்களில் தன்னம்பிக்கை அதிகம் இருப்பதோடு, அனைத்து விஷயங்களிலும் வெற்றி கிடைக்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு 2023 ஆம் ஆண்டில் மே மற்றும் ஜூன் மாதம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். இந்த மாதத்தில் நீங்கள் மற்ற மாதங்களை விட சிறப்பான பலன்களை அதிகம் பெறுவீர்கள். முக்கியமாக இந்த மாதத்தில் அதிர்ஷ்டம் ஆதரவாக இருக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு 2023 ஆம் ஆண்டில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்கள் அதிர்ஷ்டமான மாதங்களாக இருக்கும். இந்த மாதங்களில் இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் காண்பார்கள்.

சிம்மம்
2023-ல் சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான மாதங்கள் என்றால், அது நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்கள் தான். இந்த மாதங்களில் சிம்ம ராசிக்காரர்கள் முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்களைப் பெறுவார்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு 2023 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதம் அபரிமிதமான நற்பலன்களை வாரி வழங்கும் மாதமாக இருக்கும். இந்த மாதங்களில் மேற்கொள்ளும் எந்த விஷயங்களும் வெற்றிகரமாக முடிக்கப்படும்.

துலாம்
துலாம் ராசியைச் சேர்ந்தவர்களுக்கு 2023 ஆம் ஆண்டில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்கள் அதிர்ஷ்டமானதாக இருக்கும். இந்த மாதங்களில் துலாம் ராசிக்காரர்கள் மற்ற மாதங்களை விட சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். அனைத்திலும் நல்ல முடிவை பெறுவார்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு 2023 ஆம் ஆண்டின் அதிர்ஷ்டமான மாதங்கள் என்றால், அது அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்கள் தான். இந்த இரண்டு மாதங்களில் இந்த ராசிக்காரர்கள் தங்கள் துறைகளில் பிரகாசிப்பார்கள் மற்றும் இவர்களின் கற்பனைத் திறன் அற்புதமாக இருக்கும். இது தொழிலில் நல்ல முன்னேற்றத்தை உண்டாக்கும்.

தனுசு
2023 ஆம் ஆண்டில் தனுசு ராசிக்காரர்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்கள் அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் மாதங்களாக இருக்கும். இந்த மாதங்களில் தனுசு ராசிக்காரர்கள் பணம் மற்றும் காதல் ரீதியாக அதிர்ஷ்டசாலியாக திகழ்வார்கள்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு 2023 ஆம் ஆண்டின் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்கள் அதிர்ஷ்டமானதாக இருக்கும். இந்த மாதங்களில் மகர ராசிக்காரர்கள் நல்ல மனநிலையை உணர்வதோடு, அதிர்ஷ்டசாலிகளாக திகழ்வார்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு 2023-ல் அதிர்ஷ்டமான மாதங்கள் எனில் அது ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்கள் தான். இவ்விரு மாதங்களிலும் தன்னம்பிக்கையால் தொழிலில் சிறந்து விளங்குவதோடு, அனைத்து விஷயங்களையும் தைரியமாக கையாண்டு வெற்றி காண்பீர்கள்.

மீனம்
2023 ஆம் ஆண்டில் மீன ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்கள் மிகவும் அதிர்ஷ்டமான மாதங்களாகும். இந்த மாதங்களில் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும் மற்றும் இம்மாதங்களில் இவர்கள் சமூகத்தில் ஒரு நல்ல நிலையை அடைவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications