Latest Updates
-
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, தன் பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்.. -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான்
2022 ஆம் ஆண்டு ஒவ்வொரு ராசிக்கும் எந்த மாதம் அதிர்ஷ்டமான மாசமா இருக்கும் தெரியுமா?
வருடாந்திர ராசிபலன்களில் ஒருவரது ராசிக்குரிய பல விஷயங்களை அறிந்து கொள்ளலாம். அதில் 2022 ஆம் ஆண்டில் ஒவ்வொரு ராசிக்கும் அதிர்ஷ்டமான மாதம் எது என்பதையும் அறிந்து கொள்ள முடியும்.

2022 ஆம் ஆண்டில் நுழையப் போகிறோம். பொதுவாக புத்தாண்டு என்றாலே இந்த புதிய ஆண்டிலாவது நமது வாழ்வில் ஏதாவது நல்லது நடக்காதா, இந்த ஆண்டு நமக்கு வாழ்வில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தாத என்றெல்லாம் பலரது மனதில் தோன்றும். 2022 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர ராசிப்பலன்கள் நம் மனதில் எழும் கேள்விகளுக்கான பதிலை புட்டுபுட்டு வைக்கும். இந்த வருடாந்திர ராசிபலன்களில் ஒருவரது ராசிக்குரிய பல விஷயங்களை அறிந்து கொள்ளலாம். அதில் 2022 ஆம் ஆண்டில் ஒவ்வொரு ராசிக்கும் அதிர்ஷ்டமான மாதம் எது என்பதையும் அறிந்து கொள்ள முடியும். இப்போது 2022 ஆம் ஆண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு எந்த மாதம் அதிர்ஷ்டமானதாக இருக்கும் என்பதைக் காண்போம்.

மேஷம்
2022 ஆம் ஆண்டு மேஷ ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் பல அம்சங்களில் செவ்வாயின் அருள் உள்ளது. அதுவும் மே மாதத்தில் செவ்வாயின் தாக்கம் வலுவாக இருப்பதால், இந்த ராசிக்காரர்களுக்கு 2022 ஆம் ஆண்டு மே மாதம் அதிர்ஷ்டமான மாதமாகும். இந்த மாதத்தில் இவர்கள் வேலையை வெற்றியை எதிர்பார்க்கலாம். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவாகவும், சிறப்பாகவும் இருக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு 2022 ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதம் அதிர்ஷ்டமான மாதமாகும். இந்த மாதத்தில் பண வரவு சிறப்பாக இருக்கும். முக்கியமாக காதல் விஷயத்தில் அற்புதமாக இருக்கும். எனவே இதை அனுபவிக்க உங்களை தயார் படுத்திக் கொள்ளுங்கள்.

மிதுனம்
2022 ஆம் ஆண்டு மிதுன ராசிக்காரர்களுக்கு மே மாதம் அதிர்ஷ்டமான மாதமாக இருக்கும். நீங்கள் இதுவரை நிதி பிரச்சனையால் போராடி வந்தால், இந்த மாதத்தில் அந்த பிரச்சனை நீங்கும். மேலும் சொத்து பிரச்சனைகள் தீரும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அதிர்ஷ்டமான மாதமாக இருக்கும். உங்களின் உணர்வுகளை முழுமையாக வெளிப்படுத்த சிறந்த மாதம் இதுவாகும். உறவில் இருப்பவர்களுக்கு சுக்கிரன் உறவை வலுப்படுத்த உதவுவார்.

சிம்மம்
2022 ஆம் ஆண்டில் சிம்ம ராசிக்காரர்களுக்கான அதிர்ஷ்டமான மாதம் என்றால், அது ஆகஸ்ட் மாதம் ஆகும். இந்த மாதத்தில் உங்களின் ஆற்றல்கள் உங்களைத் தூண்டிவிட்டு சிறப்பாக செயல்பட வைக்கும். கடினமான பணிகளையும் திறம்பட செய்து முடிக்கும் அளவில், அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். எனவே எந்த ஒரு கடினமான பணியை செய்ய நினைத்தாலும், அதை ஆகஸ்ட் மாதத்தில் செய்ய முயலுங்கள். இதனால் வெற்றி உங்களுக்கு நிச்சயம் கிட்டும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அதிர்ஷ்டமான மாதமாகும். இம்மாதத்தில் இவர்கள் அதிகபட்ச நம்பிக்கையை அனுபவிப்பார்கள். முக்கியமாக இந்த மாதத்தில் விரும்பும் அனைத்தையும் பெறுவார்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு 2022 ஆம் ஆண்டில் செவ்வாயின் பலம் அதிகம் உள்ளது. சமீப காலமாக நீங்கள் செய்து வரும் கடின உழைப்பிற்கான பலனை 2022 ஏப்ரல் மாதத்தில் பெறுவீர்கள். மேலும் இந்த மாதத்தில் அதிக பணத்தை சேமிக்கும் அளவில் வாய்ப்புக்கள் கிடைக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு 2022 ஆம் ஆண்டில் மே மாதத்தில் கூடுதல் அதிர்ஷ்டம் கிடைக்கும். குரு மற்றும் சனியின் அருளால் வேலையில் ஏராளமான வாய்ப்புக்கள் கிடைக்கும். அரசுத் தேர்வுக்குத் தயாராகும் மாணவராக இருந்தால், வெற்றி பெறுவதற்கு போதுமான நம்பிக்கை இந்த மாதத்தில் இருக்கும். 2022 இல் விருச்சிக ராசிக்கு அதிர்ஷ்டமான மே மாதத்தில் நீங்கள் நேர்மையாக இருந்தால் கூடுதல் பலனைப் பெறுவீர்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு 2022 ஆம் ஆண்டு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதிர்ஷ்டமான மாதம் என்று பார்த்தால், அது ஜூலை மாதமாகும். இந்த ஆண்டின் முதல் பாதியில் அடையும் சாதனைகளில் மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் உணர்வார்கள். மேலும் கிரகங்கள் இந்த மாதத்தில் உங்களுக்கு சாதகமாக இருப்பதால், வாழ்க்கையில் அதிக உற்சாகமும், புறம்போக்குத்தனமும் இருக்கும்.

மகரம்
2022 ஆம் ஆண்டில் மகர ராசியில் சனி வலுவாக இருப்பது, உங்களின் நல்ல கர்மத்திற்கு வெகுமதியைக் கொடுக்கும். சமீப காலமாக நீங்கள் செய்து வரும் கடின உழைப்பிற்கான பலனை பிப்ரவரி மாதத்தில் பெறுவீர்கள். பிப்ரவரி மாத இறுதியில் செவ்வாய் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால், காதல் வாழ்க்கையில் ஆதயங்களைப் பெறுவீர்கள். மேலும் நீங்கள் யாரையேனும் காதலித்து வந்தால், உங்கள் காதலை வெளிப்படுத்த சிறந்த மாதமும் இதுவே ஆகும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு 2022 ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதம் அதிர்ஷ்டமான மாதமாகு. இந்த மாதத்தில் உங்கள் துணையைப் பற்றி உங்களுக்கு இருக்கும் அனைத்து விதமான சந்தேகங்களுக்கும் பதில்களைப் பெறுவீர்கள். ஏற்கனவே காதலில் இருப்பவர்களில் காதல் வலுவடையும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு 2022 ஆம் ஆண்டின் அதிர்ஷ்டமான மாதம் என்றால் அது ஜூன் மாதமாகும். இந்த மாதத்தில் தொழில் ரீதியாக அதிக வெற்றியைப் பெறுவீர்கள். பங்குச் சந்தை போன்ற புதிய முதலீட்டு வாய்ப்புக்களைத் தேடுவதற்கு இது சிறந்த மாதமாகும். இருப்பினும் கண்மூடித்தனமாக இருந்துவிடாதீர்கள்.



Click it and Unblock the Notifications