For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2022-இல் ராசிப்படி இந்த பொருளை உங்க கூட வெச்சிருந்தா அதிர்ஷ்டம் கூடவே இருக்குமாம்.. உங்க ராசிக்கு என்ன?

2022 புத்தாண்டில் ஒவ்வொரு ராசிக்காரர்களும் அதிர்ஷ்டம் மற்றும் செழிப்பிற்காக தங்களுடன் எதை வைத்துக் கொள்ளலாம் என்பதைப் பற்றி இப்போது காண்போம்.

|

மக்கள் தங்களின் இதயத்திற்கு நெருக்கமானதை தங்களின் அதிர்ஷ்டத்தை வசீகரிக்கும் ஒன்றாக கருதுகிறார்கள். அனைவருக்கும் அதிர்ஷ்டம் சாதகமாக இருக்காது. ஆகவே தான் பலர் தம்முடன் அதிர்ஷ்டமான பொருள் என்று கூறி சிலவற்றை தம்முடனேயே வைத்திருக்கிறார்கள். இப்பழக்கம் பல ஆண்டுகளாக உள்ளது. உதாரணமாக, பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான டோனிக்கு எண் 7 அதிர்ஷ்டமானதாக இருப்பதால், அவர் 7 என்ற எண் அச்சிடப்பட்ட ஜெர்சியை அணிகிறார். இதுப்போன்று பலருக்கு பல விஷயங்கள் அதிர்ஷ்டமானதாக உள்ளன.

Lucky Charm For Each Zodiac Sign in 2022 In Tamil

இன்று நாம் பார்க்கப் போவது என்னவென்றால், 2022 ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கப் போகிறோம். இந்த 2022 புத்தாண்டில் ஒவ்வொரு ராசிக்காரர்களும் அதிர்ஷ்டம் மற்றும் செழிப்பிற்காக தங்களுடன் எதை வைத்துக் கொள்ளலாம் என்பதைப் பற்றி இப்போது காண்போம். உங்கள் ராசிக்கு எதை வைத்துக் கொண்டால் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும் என்பதைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

2022 ஆம் ஆண்டு உங்களுக்கு ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். நீங்கள் கடினமாக உழைத்தாலும் அதற்கான பலனை விரைவில் பெற முடியாது. ஆனால் வெற்றிகரமான, வளமான மற்றும் மகிழ்ச்சியான புத்தாண்டாக இருக்க, மேஷ ராசிக்காரர்கள் தங்களுடன் வீட்டு சாவியை வைத்துக் கொண்டால், அது அதிர்ஷ்டத்தை வசீகரித்து, நற்பலன்களை வழங்கும். ஒருவேளை உங்களால் வீட்டு சாவியை எடுத்து செல்ல முடியாத நிலை என்றால், சாவி போன்ற பெண்டென்ட்டை அல்லது பிரேஸ்லெட்டை அணிந்து கொள்ளலாம்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கான 2022 ஆம் ஆண்டின் அதிர்ஷ்டம் என்றால் அது எண் 7. சுவாரஸ்யமாக, 2022 ஆம் ஆண்டில் ரிஷப ராசிக்கான அதிர்ஷ்ட எண்ணாகவும் இது உள்ளது. நீங்கள் 2022 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக இந்த 7 ஆம் எண்ணை பார்த்தீர்களானால், உங்களுக்கு அதிர்ஷ்டமான ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்று அர்த்தம். உங்களுடனேயே இந்த 7 ஆம் எண் இருக்க வேண்டும் அல்லது எப்போதும் இந்த எண்ணை பார்க்க வேண்டுமென நினைத்தால், உங்கள் மொபைல் போனிற்கு இந்த எண் பதித்த கவரை வாங்கி போடுங்கள்.

மிதுனம்

மிதுனம்

2022 ஆம் ஆண்டில் மிதுன ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை ஈர்க்க சிர்மி மணிகளை தங்களுடன் வைத்திருக்க வேண்டும். சிர்மி மணிகள் துரதிர்ஷ்டவசமானவர்களுடன் எப்போதும் தங்காது. முக்கியமாக இந்த சிர்மி மணிகளை வைத்திருந்தால், 2022 ஆம் ஆண்டில் பண வரவு அதிகரிக்கும்.

கடகம்

கடகம்

2022 ஆம் ஆண்டில் கடக ராசிக்காரர்களுக்கு சூரிய காந்தி செடி அதிர்ஷ்டத்தை ஈர்க்கும். அன்பான பாசமுள்ள கடக ராசிக்காரர்கள், வீட்டில் வளர்க்கும் சூரிய காந்தி செடிக்கும் அவ்வளவு சிறப்பு கவனம் செலுத்தியும், செடி இறந்துவிட்டால், ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போகிறது என்று அர்த்தம்.

சிம்மம்

சிம்மம்

2022 ஆம் ஆண்டு அதிர்ஷ்டத்திற்காக சிம்ம ராசிக்காரர்கள் தங்களின் வணிகப் பகுதியிலோ அல்லது குடியிருப்பிலோ குதிரை காலணியை வைத்திருக்க வேண்டும். இப்படி குதிரை காலணியை வைத்திருப்பது எவ்விதமான தீய சக்தியின் தாக்கத்தில் இருந்தும் பாதுகாக்கும்.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு 2022 ஆம் ஆண்டில் அதிர்ஷ்டமான ஒன்று என்றால், அது தீய கண் (Evil Eye) ஆகும். அதுவும் இந்த தீய கண்ணை அணியக்கூய வகையில் பெண்டென்டாகவோ அல்லது பிரேஸ்லெட்டாகவோ போட்டுக் கொள்வது மிகவும் நல்லது. இந்த தீய கண் உங்களைக் கண்டு பொறாமை கொண்டவர்களிடம் இருந்து உங்களைப் பாதுகாக்கும்.

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் கண்ணாடி ஆமையை 2022 ஆம் ஆண்டு உங்கள் வீட்டிற்கு வாங்கி வைப்பது நல்லது. இது உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும், செழிப்பையும் வழங்கும். அதோடு, இந்த ஆமையை ஒரு கண்ணாடி தட்டில் தண்ணீரை நிரப்பி, ஆமையை வடகிழக்கு திசையை நோக்கி வைக்க வேண்டும்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் 2022 ஆம் ஆண்டில் அதிர்ஷ்டம் மற்றும் செழிப்புக்காக சித் ஸ்வேதார்க் விநாயகரை வாங்கி வீட்டில் வைக்க வேண்டும். அதுவும் இந்த விநாயகரை வீட்டில் வைக்கும் போது வடக்கு திசையை நோக்கி வைக்க வேண்டும். இதனால் இந்த விநாயகர் குடும்ப மகிழ்ச்சியை அதிகரிப்பதோடு, தம்பதியரிடையே பிணைப்பை மேம்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

தனுசு

தனுசு

2022 ஆம் ஆண்டில் தனுசு ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்திற்காக தம்பாவால் செய்யப்பட்ட சிறிய பழைய பாத்திரத்தை வீட்டிற்கு கொண்டு வந்து தண்ணீர் நிரப்பி வீட்டில் வைக்க வேண்டும். மேலும் இந்த பாத்திரத்தில் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும். இதனால் தாம்பா வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை உறிஞ்சி, உங்கள் வீட்டில் நேர்மறை ஆற்றலை உருவாக்க உதவும்.

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்கள் 2022 ஆம் ஆண்டில் அதிர்ஷ்டத்தை ஈர்க்க இணைந்த நான்கு இலைகளை தங்களுடன் வைத்திருக்க வேண்டும். இது உங்களின் சோம்பேறித்தனத்தால் ஏற்படும் தீய விளைவுகளில் இருந்து பாதுகாக்கும். இதனால் உங்கள் இலக்குகளை விரைவில் அடைவீர்கள்.

கும்பம்

கும்பம்

2022 ஆம் ஆண்டில் கும்ப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான பொருள் என்றால் அது காற்றாடியை வீட்டில் வாங்கி வைப்பது தான். அதுவும் கண்ணாடியால் ஆன காற்றாடியை வாங்கி வீட்டில் வடகிழக்கு பகுதியில் வைக்க வேண்டும். இதனால் அந்த காற்றாடி எழுப்பும் ஓசை வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்களை எதிர்த்துப் போராடி விரட்டும்.

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்கள் நல்ல அதிர்ஷ்டத்திற்காக 2022 ஆம் ஆண்டு வாட்ச் அணியத் தொடங்க வேண்டும். இந்த வாட்ச் ஒருவரை விழிப்புணர்வுடன் இருக்க வைப்பதாக கூறப்படுகிறது. மொத்தத்தில், வாட்ச் அணிவது மீன ராசிக்காரர்களின் முடிவெடுக்கும் திறனை மேம்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Lucky Charm For Each Zodiac Sign in 2022 In Tamil

In this article, we reveales Lucky charms 2022 that each zodiac sign can use for luck and prosperity. Read on to know more...
Desktop Bottom Promotion