Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
நவம்பர் மாதம் யாருக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு துரதிர்ஷ்டமாகவும் இருக்கப் போகுது தெரியுமா?
நவம்பர் மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாகவும், எந்த ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டமானதாகவும் இருக்கும் என்பதை இப்போது காண்போம். உங்கள் ராசி எந்த பட்டியலில் உள்ளது என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
நவம்பர் மாதம் வந்துவிட்டது. 2022 ஆம் ஆண்டின் இறுதியை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். இந்த நவம்பர் மாதம் பல ராசிக்காரர்களுக்கு அற்புதமான மாதமாக இருக்கும். ஆனால் சில ராசிக்காரர்களுக்கு சிரமங்கள் நிறைந்த மாதமாக இருக்கும். இதற்கு காரணம் சில முக்கிய கிரகங்கள் ராசியை மாற்றுவது தான். அதோடு நவம்பர் மாதத்தில் ஆண்டின் கடைசி மற்றும் இரண்டாவது சந்திர கிரகணம் நிகழவுள்ளது.

எனவே இந்த நவம்பர் மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாகவும், எந்த ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டமானதாகவும் இருக்கும் என்பதை இப்போது காண்போம். உங்கள் ராசி எந்த பட்டியலில் உள்ளது என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

நவம்பர் மாத அதிர்ஷ்ட ராசிகள்:
ரிஷபம்
நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் ரிஷப ராசிக்காரர்கள் நல்ல நிதி ஆதாயங்களை அனுபவிப்பதற்கான வாய்ப்புள்ளது. திட்டமிட்டு செலவு செய்தால், இம்மாதத்தில் நிதி நிலை சிறப்பாக இருக்கும். இந்த மாதத்தில் வெளியூர் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. தொழில் ரீதியாக, ரிஷப ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு இம்மாதம் வெற்றிகரமானதாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். பணம் சம்பாதிப்பதற்கு புதிய வழிகள் கிடைக்கும். புதிய நபர்கள் அல்லது தெரியாதவர்களை நம்புவதைத் தவிர்த்திடுங்கள்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் அதிர்ஷ்டமான மாதமாக இருக்கும். இம்மாதத்தில் நிறைய பணம் கையில் சேரும். நிதியைப் பொறுத்தவரை, மிகவும் சிறப்பாக இருக்கும். தந்தைவழி சொத்துக்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். பணியிடத்தில் நல்ல செய்திகளைப் பெறுவீர்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதத்தில் கடின உழைப்பிற்கான நல்ல பலன் கிடைக்கும். நிலம், சொத்து, வாகனம் போன்றவற்றை வாங்க இம்மாதம் சிறப்பாக இருக்கும். சிக்கிய பணம் இக்காலத்தில் கிடைக்கும். தொழிலில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள்.

நவம்பர் மாத துரதிர்ஷ்ட ராசிகள்:
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு மாதத்தின் தொடக்கத்தில் சவால்களை சந்திக்க நேரிடும். பேச்சையும் கோபத்தையும் கட்டுப்படுத்தாவிட்டால், பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். மாதத்தின் நடுப்பகுதி சற்று கடினமாக இருக்கும். ஆரோக்கிய பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். வியாபாரிகள் எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மாதத்தின் இரண்டாம் பாதியில் பணத்தை முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும். எந்த ஒரு முடிவையும் நன்கு யோசித்து எடுக்க வேண்டும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் நவம்பர் மாதத்தில் வேலைகளில் நன்கு கவனம் செலுத்த வேண்டும். மாத தொடக்கத்தில் நிதி முடிவுகளை புத்திசாலித்தனமாக எடுக்க வேண்டும். யாருக்கும் வாக்குறுதி அளித்துவிடாதீர்கள். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் சிரமப்படுவீர்கள். மாதத்தின் நடுப்பகுதியில் குடும்பத்தைப் பற்றிய கவலை அதிகரிக்கும். வாகனம் ஓட்டும் போது கவனமாக இருங்கள். ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். வியாபாரிகள் சில சிரமங்களை சந்திக்க நேரிடும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் புத்திசாலித்தனமாக பணத்தை செலவழிக்க வேண்டும். இல்லாவிட்டால் நிதி பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்கும். அலுவலகத்தில் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பணிகளை முடிக்க முயற்சி செய்யுஙக்ள். இம்மாதத்தில் உறவினர்களிடம் இருந்து ஆதரவு கிடைக்காமல் போகலாம். கூட்டு வணிகம் செய்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மாதத்தின் இரண்டாம் பாதியில் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாத தொடக்கத்தில் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். நிலம் தொடர்பான தகராறுகள் வரலாம். மாதத்தின் இரண்டாம் பாதியில் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். இம்மாதத்தில் எவ்விதமான வாக்குவாதங்களில் இருந்து விலகி இருங்கள். கூட்டு தொழில் செய்பவர்கள், மற்றவர்களை கண்மூடித்தனமாக நம்பி பண பரிவர்த்தனைகளை செய்வதைத் தவிர்த்திடுங்கள். வாகனம் ஓட்டும் போது கவனமாக இருங்கள். ஏனெனில் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.



Click it and Unblock the Notifications