For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த 3 ராசிக்காரங்களுக்கு 2020 துரதிர்ஷ்டம் நிறைந்த வருஷமா இருக்கப்போகுதாம்... உஷாரா இருங்க...!

|

2019 கிட்டதட்ட முடிந்து விட்டது, அடுத்த வருடம் பிறப்பதற்கு இன்னும் சொற்ப நாட்களே உள்ளது. ஆண்டின் முடிவு எப்படி இருக்கப்போகிறது, அடுத்த வருடம் எப்படி இருக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அனைவருக்குள்ளும் இருக்கத்தான் செய்கிறது. நமது எதிர்காலத்தை அறிவதற்கு நம் முன்னோர்கள் வகுத்த ஒரு அற்புத வழிதான் ஜோதிட சாஸ்திரம் ஆகும். ஜோதிட சாஸ்திரத்தின் படி நமது ராசியைக் கொண்டு

நமது வருங்காலத்தை கணக்கிடலாம்.

Lucky And Unlucky Zodiac Signs In 2020

வரப்போகிற வருடம் சில ராசிக்காரர்களுக்கு அதிசயங்களையும், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ச்சியையும் தர காத்திருக்கிறது. 2020 சிலருக்கு எந்த மாற்றமும் இல்லாமல் சாதாரண வருடமாக கடக்கபோகிறது. இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு 2020 அதிர்ஷ்டமாகவும், துரதிர்ஷ்டமாகவும் இருக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு அடுத்த வருடம் அவர்களின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான காலக்கட்டமாக இருக்கப்போகிறது. உங்களின் பலவருட முயற்சிகளுக்கான பலன்களை அவர்கள் இந்த வருடம் அனுபவிக்கப்போகிறீர்கள். நீங்கள் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் உங்களை வெற்றிக்கான பாதைக்கு அழைத்துச் செல்லும். குடும்ப வாழ்க்கையை பொறுத்த வரையில் மகிழ்ச்சி நிறைந்த வருடமாக இருக்கும், காதலில் இருப்பவர்கள் தங்கள் காதலை கல்யாண நிலைக்கு எடுத்துச் செல்ல தாரளமாக முயற்சிக்கலாம்.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களின் வாழ்க்கையின் அனைத்து பகுதியிலும் 2020 சிறப்பான முன்னேற்றத்தைக் கொண்டிருக்கும். ஆனால் உங்கள் நிதிப் பகுதி உங்களை எங்கு அழைத்துச் செல்லக்கூடும் என்பதைக் கவனிக்க நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பணம் உங்களுக்காக பாயும். அதிர்ஷ்டம் நிறைந்த இந்த வருடம் உங்களுக்கு அனைத்து வகையிலும் இலாபகரமானதாக இருக்கும். எனவே நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு முதலீடு செய்யலாம்.

ரிஷபம்

ரிஷபம்

குருவின் நேரடி அருளால் பயன் பெறுபவர் ரிஷப ராசிக்காரர்கள் மட்டுமே. வரப்ளரை ஆண்டின் தொடக்கம் உங்களுக்கு பதட்டம் மற்றும் கவலைகள் நிறைந்ததாக இருந்தாலும் அனைத்தும் திடீரென உங்களுக்கு சாதகமாக மாறிவிடும். இந்த ஆரம்ப கால மாற்றங்களை நினைத்து கவலைப்படவேண்டாம், ஏனெனில் வியாழனும், சனியும் உங்களுக்கான அதிர்ஷ்டத்தை வழங்கும் வேலையை பார்த்துக் கொள்வார்கள். 2020 ஆம் ஆண்டில் உங்கள் வாழ்க்கையின் சிறந்த பகுதி அன்பாக இருக்கும். நீங்கள் ஆழமாக காதலிக்க வேண்டியவரை பார்க்க நேரிடலாம், இது உங்களின் எதிர்காலத்திற்கும் நல்லதாக அமையும்.

MOST READ: இந்தியாவை உலுக்கிய டாப் 10 கொலையாளிகள்... 11 வது கொலையாளி யாருனு தெரிஞ்சா உறைஞ்சுருவீங்க...!

சிம்மம்

சிம்மம்

அதிர்ஷ்டம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் சிம்ம ராசிக்காரர்கள் எப்பொழுதும் ஜோதிடத்தின் நட்சத்திர ராசியாக இருப்பார்கள். எங்கிருந்தாலும் தனக்கான அடையாளத்தையும், கவனத்தையும் பெறுவார்கள், இதற்கே அதிக முயற்சி செய்ய வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை. வலிமையான ஆளுமையும், காந்தம் போல குணமும் கொண்டவர்கள் இவர்கள். சிம்ம ராசிக்காரர்கள் அவர்களின் வெற்றிகரமான அணுகுமுறையின் காரணமாக அதிர்ஷ்ட அறிகுறிகளில் ஒன்றாக இருக்கப்போகிறது, இது அவர்களின் பாதையில் நல்ல விஷயங்களை மட்டுமே ஈர்க்கும். 2020 அவர்களுக்கு சீரான ஆரோக்கியமும், செல்வமும், முன்னேற்றத்துக்கான வாய்ப்புகளும் நிறைந்த வருடமாக இருக்கப்போகிறது.

தனுசு

தனுசு

தனுசு ராசி சாகசங்கள் நிறைந்த ராசியாகும். இவர்களின் ஆசைகளுக்கும், சாதனைகளுக்கும் எல்லை என்பதே கிடையாது. வரப்போகிற ஆண்டில் அவர்களை நீண்ட நாள் வாட்டிய கவலைகளில் இருந்து விடுபடுவார்கள். அவர்களுக்கு வேதனையை உண்டாக்கிய கேள்விகளுக்கான பதிலை கண்டறிவார்கள். வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்லும் வாய்ப்புகள் தேடி வரும். புதிய பயணங்கள் வாழ்க்கையின் வெற்றியின் பக்கம் இவர்களை அழைத்துச் செல்ல காத்திருக்கிறது. 2020ல் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டமானதாக இருக்கப்போகிறது என்பதை மேற்கொண்டு பார்க்கலாம்.

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்கள் எதனையும் சமாளிக்க தங்களை தயார்படுத்திக் கொள்வது நல்லது. குரு சனிபகவானுக்கு எதிர்க்க இருப்பதால் காரியங்கள் அனைத்தும் கடினமானதாக இருக்கும். உங்களுக்கு கூட இருந்தே குழி பறிக்கும் நபர்களை சந்திக்க வாய்ப்புள்ளது. உங்களின் உள்ளுணர்வு சொல்வதை கேட்டு நடப்பது உங்களுக்கு நல்லது. உங்களை நீங்கள் அதிகம் நம்புவதுதான் இந்த ஆண்டில் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடமாகும். ஆபத்தான முதலீடுகள் எதிலும் ஈடுபட வேண்டாம். புதிதாக ஒருவரை நம்புவதற்கு முன்னர் தீர ஆலோசிக்கவும்.

துலாம்

துலாம்

மற்றவர்களை நம்புவதுதான் உங்களுக்கு இந்த வருடம் இருக்கும் மிகப்பெரிய சவாலாகும். இந்த வருடம் உங்களுக்கு மிகுந்த துரதிர்ஷ்டமான ஆண்டாக இருக்கப்போகிறது. எனவே அதிர்ஷ்டத்தை நம்பி செய்யும் எந்த காரியத்திலும் இந்த வருடம் இறங்க வேண்டாம். குறிப்பாக முதலீடுகள் விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கை அவசியமாகும். இந்த காலக்கட்டம் உங்கள் வாழ்க்கையில் தடுமாறும் காலமாகும், எனவே ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபட வேண்டாம். காதல் வாழ்க்கையில் வருடத்தில் இரண்டாம் பாதியில் பெரிய புயல் ஏற்படும். தவறான வாக்குறுதிகளை கொடுக்காதீர்கள், மற்றவர்களின் சத்தியங்களை நம்பாதீர்கள்.

MOST READ: உண்மையான கேஜிஎப் பற்றி மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள் என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க...!

மேஷம்

மேஷம்

இந்த வருடம் உங்களுக்கு தடைகள் நிறைந்த வருடமாக இருக்கும், எப்படி வெளியே வருவது என்று தெரியாமல் மாட்டிக்கொண்டு முழிக்க நேரிடலாம். இது மட்டுமின்றி நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் உறுதியற்றத் தன்மையுடன் இருக்கும். 2020 ஆம் ஆண்டில் பெரிய மாற்றங்களுக்கான எந்த பெரிய முயற்சியும் எடுக்காமல் நிதானமாக இருக்க வேண்டும். மோசடிகளில் சிக்கிக்கொள்ள வாய்ப்புள்ளது எனவே முதலீடுகளில் கவனம் அவசியம். பயணங்கள் செய்யும் முன் நன்கு ஆலோசிக்கவும், தவிர்க்க முடியாத சூழ்நிலை என்றால் மட்டும் பயணம் செய்யவும். விபத்துகளில் சிக்க அதிக வாய்ப்புள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Lucky And Unlucky Zodiac Signs In 2020

Read to know luckiest and unluckiest zodiac signs in 2020
Story first published: Tuesday, December 3, 2019, 15:55 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more