For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த 5 ராசிக்காரங்க முதலாளியா இருக்க தகுதியே இல்லாதவங்களாம்... அப்படி இருந்தா அதோகதிதானாம்!

மிதுன ராசிக்காரர்கள் முதலாளியாக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், இவர்கள் சில சமயங்களில் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதே இதற்குக் காரணம். ஒரு முதலாளியாக வேலையை எப்படிச் செய்வது என்று அவர்களுக்குத் தெரிந்திருக்கலாம்.

|

சில மனிதர்கள் தலைவர்களாகவும் முதலாளியாகவும் சிம்மாசனம் போட்டு மக்கள் மனதில் அமர்ந்திருப்பார்கள். இதற்கு அவர்களின் ஆளுமை பண்பு மற்றும் குணநலன்கள் மிகவும் முக்கிய காரணம். சிலர் பிறக்கும்போதே, முதலாளியாக இருப்பார்கள். இதற்கு எல்லாம் அதிர்ஷ்டம் வேண்டும் என்று நாம் கூறுவோம். ஆனால், அப்படி தலைவர்களாகவும் முதலாளியாகவும் இருக்கும் சிலருக்கு, அதற்கான ஆளுமை தகுதியே இல்லாமல் இருக்கிறது. அவர்கள் பிரிக்கப்பட்ட, சமநிலையற்ற, ஆதிக்கம் செலுத்தும் நபராக இருக்கிறார்கள். மோசமான முதலாளிகள் நல்ல வேலையைச் செய்வதைத் தடுக்கிறார்கள் மற்றும் அவர்கள் ஊழியர்களிடத்தில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள்.

List of Zodiac signs that are not boss material in Tamil

ஒரு மோசமான முதலாளி ஒரு நிறுவனத்திற்கு புற்றுநோயாக இருக்கலாம். இந்த குணம் மற்றவர்களையும் மோசமான முதலாளியாக மாற்றுவதற்கு வழிவகுக்கும். முதலாளியாக இருப்பதற்கு தகுதியில்லாத நன்கு அறியப்பட்ட ராசி அறிகுறிகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் பெரும்பாலும் நடைமுறைக்கு மாறான போக்கை கொண்டிருப்பதன் காரணமாக நல்ல முதலாளியாக இருக்க மாட்டார்கள். வேலையில் இருப்பவர்களுடன் பழகுவதில் மிகவும் மோசமாக நடந்துகொள்வார்கள். இந்த ராசிக்காரர்கள் மற்றவர்களைப் புரிந்துகொள்வது கடினம் மற்றும் அவர்களுக்கு சரியான வழியைக் காண்பிக்க தவறுகிறார்கள். அவர்கள் ஆதிக்கம் செலுத்தலாம் ஆனால் அவர்களின் ஆதிக்கம் வேலையைச் செய்யவோ அல்லது இலக்குகளை அடையவோ போதுமானதாக இருக்காது. ஆதலால், இவர்கள் நல்ல முதலியாகவும் இருக்க மாட்டார்கள், நல்ல முதலாளியையும் உருவாக்க மாட்டார்கள்.

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்கள் உணர்ச்சிவசப்பட்டு மக்களை கையாளுகிறார்கள். இது பல நேரங்களில் தவறாக முடிய வாய்ப்புள்ளது. இந்த ராசிக்காரர்கள் மற்ரவர்கள் மீது ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கிறார்கள். ஆனால், இதன் விளைவு நீண்ட காலம் நீடிக்காது. இந்த குணாதிசயங்கள் அவர்களை தலைமைப் பண்பிற்கு ஏற்றதாக மாற்றாது. இந்த ராசிக்காரர்கள் ஒரு முதலாளியாக மாறினால், அவர்களுக்குக் கீழ் பணிபுரிபவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அவர்கள் புரிந்துகொள்ளமாட்டார்கள். இது எந்த வேலையும் செய்யாது.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் முதலாளியாக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், இவர்கள் சில சமயங்களில் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதே இதற்குக் காரணம். ஒரு முதலாளியாக வேலையை எப்படிச் செய்வது என்று அவர்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் வேலையைச் செய்யும்போது முதலாளி பின்பற்ற வேண்டிய விதிகளைப் பின்பற்றத் தவறிவிடுகிறார்கள். தேவையில்லாத போது மிதுன ராசிக்காரர்கள் கடுமையாக அல்லது முரட்டுத்தனமாக மாறலாம். மேலும், அவர்கள் கையாளும் பணியாளரின் திறனைப் புரிந்து கொள்ளத் தவறிவிடலாம்.

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்களால் நல்ல முதலாளியாக இருக்க முடியாது. ஏனெனில், அவர்களால் மற்றவர்களின் உணர்ச்சிகளை புரிந்துகொள்ள முடியாது. அவர்கள் மன அழுத்தம் மற்றும் பணிச்சுமை ஆகியவற்றிலிருந்து தங்களைத் தாங்களே விலக்கிக் கொள்ள முயற்சி செய்கிறார்கள். தங்கள் ஊழியர்களை நிர்வகிப்பது என்பது அவர்கள் விரும்பக்கூடிய ஒன்று. ஒரு முதலாளியாக இந்த ராசிக்காரர்கள், வேலையில் நிறைய தவறான நிர்வாகத்தை ஏற்படுத்தக்கூடிய விஷயங்களை ஊழியர்களிடம் விட்டுவிடலாம்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் மற்ற நபர்களால் எளிதில் எரிச்சல் அடைவதால் அவர்கள் முதலாளியாக இருக்கவும் முதலாளியை உருவாக்கவும் வாய்ப்பில்லை. அவர்கள் அதிக ஆதிக்கம் செலுத்துகிறார்கள். ஆனால், இந்த ராசிக்காரர்கள் வேலையைச் செய்யும்போது தேவையற்ற இடையூறுகளை எதிர்கொண்டால், அவர்கள் ஆக்ரோஷமாகி, வேலையை இடையில் விட்டுவிடலாம். சிம்ம ராசிக்காரர்கள் தனது சொந்த இடத்தில் செயல்பட விரும்புகிறார் மற்றும் ஒரு முதலாளியாக பொறுப்பு என்பது அவர்கள் வீரியத்துடன் செயல்பட வேண்டியது முக்கியமானது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

List of Zodiac signs that are not boss material in Tamil

Here is the list of Zodiac signs that are not boss material in Tamil.
Story first published: Thursday, October 6, 2022, 13:11 [IST]
Desktop Bottom Promotion