Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்!
உங்க ராசிப்படி 2022-ல் இதை ஃபாலோ பண்ணுணா.. உங்க லைப் வேற லெவல்ல இருக்கும்...
2022 ஆம் ஆண்டு வெற்றிகரமான ஆண்டாக இருக்க ஒவ்வொரு ராசிக்காரரும் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்திருக்க வேண்டியது முக்கியம்.
2021 ஆம் ஆண்டின் இறுதி மாதத்தில் உள்ளோம். இந்த 2021 ஆம் ஆண்டு உங்களில் பலருக்கு மோசமாகவும், எதிர்பார்த்த வகையில் இல்லாததாகவும் இருந்திருக்கலாம். ஆனால் வரவிருக்கும் 2022 ஆம் ஆண்டு உங்களுக்கு சிறந்த ஆண்டாக இருக்க வேண்டுமானால், உங்கள் ராசிக்கு ஏற்றவாறு ஒருசில மாற்றங்களை செய்யுங்கள். இந்த மாற்றங்கள் நிச்சயம் உங்கள் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை உண்டாக்கும்.

பொதுவாக ஒவ்வொரு ராசியும் வெவ்வேறு பலம் மற்றும் பலவீனங்களைக் கொண்டிருக்கும். எனவே 2022 ஆம் ஆண்டு வெற்றிகரமான ஆண்டாக இருக்க ஒவ்வொரு ராசிக்காரரும் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்திருக்க வேண்டியது முக்கியம். கீழே 2022-இல் வாழ்வில் ஒரு நல்ல மாற்றத்தை காண ஒவ்வொரு ராசிக்காரருக்குமான சில வாழ்க்கையை மாற்றும் பரிந்துரைகள் கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் ராசிக்கு என்னவென்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
நீங்கள் மேஷ ராசிக்காரர் என்றால், 2022 ஆம் ஆண்டில் நீங்கள் மிகவும் பொறுமையாக இருக்க முயற்சிக்க வேண்டும். உங்களுக்கு அடிக்கடி வரும் பிரச்சனைகளுக்கு மனக்கிளர்ச்சி தான் காரணம். எனவே எந்த ஒரு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும் பொறுமையாக யோசித்துப் பாருங்கள்.

ரிஷபம்
நீங்கள் ரிஷப ராசிக்காரர் என்றால், 2022 ஆம் ஆண்டில் தனித்து செயல்படுவதில் கவனத்தை செலுத்த வேண்டும். ஏனெனில் நீங்கள் மற்றவர்களை சார்ந்து இருப்பதால், அது நீங்கள் சில விஷயங்கள் செய்வதற்கு தடையாக இருக்கும். எனவே சொந்தமாக எந்த விஷயங்களையும் செய்ய முயற்சி செய்யுங்கள் மற்றும் உங்களை நம்ப கற்றுக் கொள்ளுங்கள்.

மிதுனம்
நீங்கள் மிதுன ராசிக்காரர் என்றால், 2022 இல் எதையும் திட்டமிட்டு ஒழுங்காக செய்வதில் கவனத்தை செலுத்த வேண்டும். நீங்கள் எந்த விஷயத்தையும் குழப்பமாகவும், ஒழுகற்றதாகவும் செய்தால், அது பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும். எனவே ஒரு விஷயத்தை செய்வதற்கு முன் ஒரு திட்டத்தை தீட்டி அதைப் பின்பற்ற முயற்சித்தால், எளிதில் வெற்றியை காண்பீர்கள்.

கடகம்
நீங்கள் கடக ராசிக்காரர் என்றால், 2022 இல் அதிக நம்பிக்கையுடன் இருக்க முயற்சி செய்யுங்கள். இதுவரை நீங்கள் உங்கள் மீது அதிக நம்பிக்கை கொள்ளாமல் இருந்ததால், உங்களின் உண்மையான திறனை அடைய முடியாமல் இருந்திருக்கலாம். இந்த ஆண்டு உங்களை முழுமையாக நம்பி, நேர்மறையான சிந்தனையுடன் இருக்க முயற்சி செய்யுங்கள்.

சிம்மம்
நீங்கள் சிம்ம ராசிக்காரர் என்றால், 2022 ஆம் ஆண்டில் மற்றவர்கள் சொல்வதை கேட்பவராக இருக்க முயற்சி செய்யுங்கள். பொதுவாக நீங்கள் கேட்பதை விட அதிகமாக பேசுவீர்கள். இதனால் பல பிரச்சனைகளை சந்தித்திருப்பீர்கள். இந்த ஆண்டு ஒரு உரையாடலில் ஈடுபடும் போது மற்றவர்கள் சொல்வதையும் கேளுங்கள், நீங்களும் பேசுங்கள். இது உங்களுக்கும், உங்களைச் சுற்றியிருப்பவர்களுக்கும் மகிழ்ச்சியைத் தரும்.

கன்னி
நீங்கள் கன்னி ராசிக்காரர் என்றால், 2022 இல் அதிக நம்பிக்கையுடன் இருப்பதில் கவனத்தை செலுத்துங்கள். இதுவரை நீங்கள் அடிக்கடி எதிர்மறையாகவே சிந்தித்ததால், பல நேரங்களில் சோர்ந்திருப்பீர்கள். இனிமேல் ஒரு விஷயத்தை எடுத்தால் அதன் பிரகாசமான பக்கத்தையும் பார்க்க முயற்சி செய்யுங்கள். இதனால் வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமாக இருப்பதைக் காண்பீர்கள்.

துலாம்
நீங்கள் துலாம் ராசிக்காரர் என்றால், 2022 இல் மிகவும் வேகமாக முடிவெடுப்பதில் கவனத்தை செலுத்த வேண்டும். இதுவரை நீங்கள் ஒரு விஷயத்தைப் பற்றி அதிகமாக சிந்திப்பவராக இருந்திருப்பீர்கள். இது உங்களை முடிவெடுக்க முடியாத நிலைக்கு தள்ளியிருக்கும். இனிமேல் விரைவாகவும் நம்பிக்கையுடனும் முடிவுகளை எடுக்க முயற்சி செய்யுங்கள். இதனால் வாழ்க்கை மிகவும் எளிமையாக இருப்பதைக் காண்பீர்கள்.

விருச்சிகம்
நீங்கள் விருச்சிக ராசிக்காரர் என்றால், 2022 இல் மன்னிக்கும் குணம் கொண்டவராக மாறுவதில் கவனம் செலுத்துங்கள். அதிக வெறுப்புணர்வுடன் இருப்பது தீங்கைத் தான் உண்டாக்கும். எனவே உங்களுக்கு தவறு செய்தவர்களை மன்னியுங்கள். இது உங்கள் மன ஆரோக்கியத்திற்கு நல்லது.

தனுசு
நீங்கள் தனுசு ராசிக்காரர் என்றால், 2022 இல் மிகவும் பொறுமையாக இருப்பதில் கவனத்தை செலுத்த வேண்டும். அவசரமாக விஷயங்களை செய்து, அந்த விஷயம் நடக்காத போது விரக்தியடைவதோடு, இது பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும். எனவே ஒரு விஷயத்தை செய்வதற்கு முன் நிதானமாக யோசித்து, பின் செய்யுங்கள். இதனால் வெற்றி கிடைக்கும்.

மகரம்
நீங்கள் மகர ராசிக்காரர் என்றால், 2022 இல் நீங்கள் மற்றவர்களுடன் நன்கு பழகுபவராக மாற வேண்டும். இதுவரை நீங்கள் மற்றவர்களுடன் நன்கு பழகாமல் விலகி இருந்திருப்பீர்கள். இம்மாதிரியான குணம் தீங்கு விளைவிக்கும். எனவே இந்த ஆண்டு அதை உடைத்தெறிந்து மற்றவர்களுடன் நன்கு பழக முயற்சி செய்யுங்கள். இதனால் நல்ல பலனை காண்பீர்கள்.

கும்பம்
நீங்கள் கும்ப ராசிக்காரர் என்றால், 2022 இல் மிகவும் ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். இதுவரை நீங்கள் ஒருவித குழப்பத்துடனும், ஒழுக்கமின்மையுடனும் இருந்திருப்பீர்கள். இந்த ஆண்டு ஒரு நல்ல மாற்றத்தைக் காண நினைத்தால், ஒரு வழக்கத்தை உருவாக்க முயற்சி செய்யுங்கள் மற்றும் அதை தவறாமல் பின்பற்ற முயற்சி செய்யுங்கள். இதனால் உங்கள் வாழ்வில் எதிர்பார்த்த மாற்றத்தைக் காண்பீர்கள்.

மீனம்
நீங்கள் மீன ராசிக்காரர் என்றால், 2022 இல் எந்த விஷயத்தையும் திட்டமிட்டு ஒழுங்காக செய்வதில் கவனத்தை செலுத்த வேண்டும். இதுவரை நீங்கள் ஒரு விஷயத்தை நல்ல திட்டமின்றி ஒழுங்கற்றதாக செய்திருப்பீர்கள். ஆனால் உங்கள் வாழ்வில் நல்ல மாற்றம் வேண்டுமானால் ஒரு சரியான வழக்கத்தை உருவாக்கி, அதை ஒழுங்காக பின்பற்ற முயற்சி செயுங்கள்.



Click it and Unblock the Notifications