Leo Horoscope 2023: சிம்ம ராசிக்காரர்களுக்கு 2023 எப்படி இருக்கப் போகுது? எந்த விஷயத்தில் கவனமா இருக்கணும்?

நீங்கள் சிம்ம ராசியா? உங்கள் ராசிக்கு 2023 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்பதை அறிய விரும்புகிறீர்களா? கீழே 2023 ஆம் ஆண்டிற்கான சிம்ம ராசி பலன்கள் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.

Leo Horoscope 2023 Simha Rasi Palan, Simha Yearly Horoscope Predictions In Tamil

2023 ஆம் ஆண்டில் நுழைய இன்னும் 1 1/2 மாதங்கள் தான் உள்ளன. பலரும் தங்களின் ராசிக்கு 2023 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருப்போம். நீங்கள் சிம்ம ராசியா? உங்கள் ராசிக்கு 2023 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்பதை அறிய விரும்புகிறீர்களா? அதுவும் 2023 ஆம் ஆண்டில் உங்களின் ஆரோக்கியம், காதல் மற்றும் திருமண வாழ்க்கை, தொழில், கல்வி, நிதி நிலை போன்றவை எப்படி இருக்கும் என்பதை விரிவாக தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? அப்படியானால் இக்கட்டுரையில் 2023 ஆம் ஆண்டு சிம்ம ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என 2023 ஆம் ஆண்டிற்கான சிம்ம ராசி பலன்கள் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
2023-ல் காதல் வாழ்க்கை

2023-ல் காதல் வாழ்க்கை

2023 ஆம் ஆண்டில் சிம்ம ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கையைப் பொறுத்தவரை, நன்றாக இருக்கும். ஆண்டின் தொடக்கத்தில் சூரியனும் புதனும் 5 ஆவது வீட்டில் இருப்பதால், உங்கள் வாழ்க்கைத் துணை அறிவார்ந்தவராக திகழ்வார். அவர்களின் அறிவைக் கண்டு நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள். ஏப்ரல் 22 ஆம் தேதி குரு 9 ஆவது வீட்டிற்கு செல்வதோடு, குருவின் பார்வை 5 ஆவது வீட்டில் விழும். இதனால் காதல் உறவு மேம்படும். காதலிப்பவர்களுக்கு இடையே அன்பு அதிகரிக்கும்.

2023-ல் தொழில் வாழ்க்கை

2023-ல் தொழில் வாழ்க்கை

2023-ல் சிம்ம ராசிக்காரர்களின் தொழில் வாழ்க்கையைப் பற்றி கூற வேண்டுமானால், ஆண்டின் தொடக்கத்தில் தொழிலில் குறிப்பிட்ட முன்னேற்றத்தை அடைவீர்கள். மேலும் ஏற்கனவே செய்த கடின உழைப்பு மற்றும் இனி செய்யும் கடின உழைப்பில் பலனைப் பெறுவீர்கள். உங்களின் பொறுப்புக்கள் அதிகரிக்கும். பதவி உயர்வை பெற வாய்ப்புள்ளது. ஜனவரி 17 ஆம் தேதிக்கு பின் சனி 7 ஆவது வீட்டிற்கு செல்வதால், உங்களின் வேலையில் சிறப்பான முன்னேற்றத்தைக் காண்பீர்கள். ஏப்ரல் 22 ஆம் தேதி நிகழும் குரு பெயர்ச்சியால் சிலர் வேலையில் இடமாற்றங்களைப் பெறக்கூடும். ஆனால் அது உங்கள் வாழ்க்கையை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும். இந்த ஆண்டு நிறைய சாதிப்பதற்கு உங்களுக்கு சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும். எனவே இதைப் பயன்படுத்தி உங்கள் தொழிலை முன்னேற்றுங்கள்.

2023-ல் கல்வி

2023-ல் கல்வி

2023 ஆம் ஆண்டில் சிம்ம ராசிக்கார மாணவர்கள் சாதகமான பலன்களைப் பெறுவார்கள். ஆண்டின் தொடக்கத்தில் சூரியனும், புதனும் 5 ஆவது வீட்டில் இருப்பதால், புத்திசாலியாக திகழ்வீர்கள். நினைவாற்றல் சிறப்பாக இருக்கும். படிக்கும் அனைத்தும் மனதில் நன்கு பதியும். எதையும் எளிதில் புரிந்து கொள்வீர்கள். ஏப்ரல் மாதத்தில் குரு 9 ஆவது வீட்டிற்கு செல்வதால், மாணவர்கள் தேர்வுகளில் நல்ல வெற்றி பெறுவார்கள். சனியின் நிலையால் படிப்பில் நன்கு கவனம் செலுத்தி, தேர்வுகளில் நல்ல முடிவுகளைப் பெறுவீர்கள். ஏப்ரல் மாதத்தில் குரு 9 ஆவது வீட்டில் இருந்து 5 ஆவது வீட்டை பார்க்கும் போது, மாணவர்கள் வெற்றி பெற வாய்ப்புள்ளது. சனியின் நிலை காரணமாக கவனம் உங்கள் படிப்பில் இருக்கும். நன்கு கவனம் செலுதி படித்தால் நல்ல முடிவுகளைப் பெறுவீர்கள். உயர்கல்வி பயில்பவர்களுக்கு இந்த ஆண்டு ஏற்றத் தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும்.

2023-ல் நிதி நிலை

2023-ல் நிதி நிலை

2023 ஆம் ஆண்டு சிம்ம ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக வெற்றிகரமாக இருக்கும். சூரியனின் அருளால் ஆண்டின் தொடக்கம் சிறப்பாக இருப்பதோடு, அதிர்ஷ்டத்தை தருவதாக இருக்கும். சூரியன் 11 ஆவது வீட்டில் இருப்பதால், உங்களின் முயற்சிகளால் நல்ல பண பலன்களைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. 7 ஆவது வீட்டில் சனி இருப்பதால், வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மேலும் குரு 9 ஆவது வீட்டிற்கு செல்லும் போது, நல்ல முன்னேற்றங்களை காணத் தொடங்குவீர்கள். ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் அரசாங்கத் துறையில் வேலை செய்வதற்கு ஏற்ற காலமாக இருக்கும். தற்போதைய வேலையில் பணம் சம்பாதிப்பதற்கான நல்ல வாய்ப்புகள் இருக்கும். அக்டோபர் மாதத்தில் ராகு 9 ஆவது வீட்டிற்கு செல்லும் போது, பணத்தை இழக்கும் சூழ்நிலை ஏற்படும். எனவே இக்காலத்தில் முதலீடு செய்தால், பண பிரச்சனையை சந்திக்கலாம்.

2023-ல் குடும்ப வாழ்க்கை

2023-ல் குடும்ப வாழ்க்கை

2023 ஆம் ஆண்டில் சிம்ம ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கையைப் பொறுத்தவரை, ஆண்டின் தொடக்கத்தில் செவ்வாய் 4 ஆவது வீட்டில் இருப்பதால், அது குடும்ப வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். குடும்பம் செல்வ செழிப்போடு இருக்கும். ஆனால் அதே வேளையில் மன அழுத்தம் அதிகரிக்கும். மார்ச் மாதத்திற்கு பின் குடும்ப வாழ்க்கையின் தரம் மேம்படும். சனியின் தாக்கத்தால், குடும்பத்தை விட்டு விலகி இருக்க வேண்டிய சூழல் ஏற்படும். இருப்பினும் குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். ஏப்ரல் வரை குருவின் பார்வை 2 ஆவது வீட்டில் இருப்பதால், குடும்பத்தினருடன் சற்று பணிவாக பேசுங்கள்.

2023-ல் குழந்தைகள்

2023-ல் குழந்தைகள்

2023 ஆம் ஆண்டின் தொடக்கம் சிம்ம ராசிக்காரர்களின் குழந்தைகளுக்கு சாதகமாக இருக்கும். சூரியன் மற்றும் புதனின் செல்வாக்கினால், அவர்களின் அறிவு வளரும். நன்கு படித்தால் வெற்றி பெறுவார்கள். ஆனால் செவ்வாயின் தாக்கமும் இருப்பதால், அது ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கங்களை உண்டாக்கும். 2023 ஏப்ரல் 22 வரையிலான காலம் கொஞ்சம் மன அழுத்தமாக இருக்கலாம் மற்றும் உங்கள் குழந்தைகளைப் பற்றிய கவலை அதிகரிக்கலாம். இருப்பினும் ஏப்ரல் 22 ஆம் தேதி குருவின் பார்வை 5 ஆவது வீட்டில் விழுவதால், குழந்தைகள் தொடர்பான கவலைகள் அனைத்தும் விலகும். அக்டோபர் மாதத்திற்குப் பிறகு, நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

2023-ல் திருமண வாழ்க்கை

2023-ல் திருமண வாழ்க்கை

2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 6 ஆவது வீட்டில் சனி மற்றும் 8 ஆவது வீட்டில் குரு இருப்பதால் திருமண வாழ்க்கை சற்று பலவீனமாகவே இருக்கும். அதுவும் திருமண வாழ்க்கை சற்று பதட்டமாக இருக்கும் மற்றும் வாழ்க்கை துணை ஆரோக்கிய பிரச்சனையை சந்திக்கக்கூடும். பின் சனி 7 ஆவது வீட்டிற்கு செல்லும் போது, திருமண வாழ்வில் சாதகமான பலன்கள் கிடைக்கும். 2023 ஆம் ஆண்டில் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இருப்பினும் குருவின் நிலையால் ஏப்ரல் 22 வரை சற்று மோசமாகவே இருக்கும். ஆனால் ஏப்ரல் 22 ஆம் தேதிக்கு பின், குரு 9 ஆவது வீட்டிற்கு செல்லும் போது, திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். தம்பதிகளுக்கு இடையே உள்ள பிரச்சனைகள் சரியாகும். புதுமண தம்பதிளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாழ்க்கைத் துணையுடன் பிடித்த இடத்திற்கு பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புள்ளது.

2023-ல் வியாபாரம்

2023-ல் வியாபாரம்

2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சனி பகவான் 6 ஆவது வீட்டில் இருப்பதால், வியாபாரம் சற்று பலவீனமாகவே இருக்கும். ஆனால் வெளிநாட்டு தொடர்பான வியாபாரம் செய்பவர்களுக்கு கணிசமான லாபம் கிடைக்கும். அதன் பின் சனி 7 ஆவது வீட்டிற்கு சென்று கும்ப ராசியில் பயணிக்கும் காலத்தில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். மேலும் கடினமாக உழைப்பதற்கு ஏற்ப நல்ல பலன்களைப் பெறுவீர்கள். வணிக விஷயங்களுக்காக நீண்ட பயணம் மேற்கொள்வீர்கள். ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் எந்தவொரு வணிகம் தொடர்பான நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். ஏப்ரல் மாதத்தில் இருந்து தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

2023-ல் சொத்து மற்றும் வாகனம்

2023-ல் சொத்து மற்றும் வாகனம்

2023 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் சிம்ம ராசிக்காரர்கள் கார் அல்லது நிலம் வாங்க விரும்பினால், அதில் வெற்றி பெறுவீர்கள். சனியின் அருளால் வீடு கட்ட வேண்டுமென்ற ஆசை நிறைவேறும். ஏப்ரல் முதல் மே மற்றும் நவம்பர் முதல் டிசம்பர் மாதங்களுக்கு இடையே வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் அமையும். நவம்பர் முதல் டிசம்பர் வரை நிலம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

2023-ல் ஆரோக்கியம்

2023-ல் ஆரோக்கியம்

2023-ல் சிம்ம ராசிக்காரர்களின் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, ஆண்டின் தொடக்கத்தில் சூரியனும், புதனும் 5 ஆவது வீட்டிலும், சனியும், சுக்கிரனும் 6 ஆவது வீட்டிலும் இருப்பதால், ஆரோக்கிய விஷயத்தில் சாதாரணமாக இருக்காதீர்கள். ராகு 9 ஆவது வீட்டிலும், குரு 8 ஆவது வீட்டிலும் உள்ளார்கள். இந்த கிரகங்களின் நிலைகள் அனைத்தும் நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. ஏனெனில் சிறு அலட்சியமும் பெரிய நோயை உருவாக்கிவிடும். எனவே சிறு ஆரோக்கிய பிரச்சனையானாலும், உடனே மருத்துவரை அணுகுங்கள். ஏப்ரல் 22 ஆம் தேதி குரு 9 ஆவது வீட்டிற்கு செல்வதால், ஆரோக்கிய பிரச்சனைகளில் ஓரளவு நிவாரணம் கிடைக்கும். அதாவது ஆரோக்கியம் மேம்படும். ஆனால் அக்டோபர் 30 ஆம் தேதி ராகு 8 ஆவது வீட்டிற்கு செல்வதால், உணவுகளால் நோய்வாய்ப்படக்கூடும் என்பதால், சற்று எச்சரிக்கையாக இருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Friday, November 18, 2022, 19:02 [IST]
Desktop Bottom Promotion