Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
புதன்-சுக்கிர சேர்க்கையால் உருவாகும் லட்சுமி நாராயண யோகத்தால் இந்த 3 ராசிக்காரரின் கையில் பணம் அதிகம் சேரும்!
லட்சுமி நாராயண யோகம் ஒரு சுப யோகம். இந்த யோகத்தின் பலன் அனைத்து ராசிகளிலும் காணப்படும். குறிப்பாக 3 ராசிக்காரர்களுக்கு இந்த லட்சுமி நாராயண யோக காலத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் சேர்க்கையால் உருவாகும் யோகம் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் புதன் கன்னி ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். அதைத் தொடர்ந்து 2022 செப்டம்பர் 24 ஆம் தேதி சுக்கிரன் கன்னி ராசிக்கு செல்கிறார். இந்த சுக்கிர பெயர்ச்சிக்கு பின் கன்னி ராசியில் புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் லட்சுமி நாராயண யோகம் உருவாகவுள்ளது.

லட்சுமி நாராயண யோகம் ஒரு சுப யோகம். இந்த யோகத்தின் பலன் அனைத்து ராசிகளிலும் காணப்படும். குறிப்பாக 3 ராசிக்காரர்களுக்கு இந்த லட்சுமி நாராயண யோக காலத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

சிம்மம்
சிம்ம ராசியின் இரண்டாவது வீட்டில் லட்சுமி நாராயண யோகம் உருவாகிறது. இதனால் இக்காலம் இந்த ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாக இருக்கும். இரண்டாம் வீடு பேச்சு மற்றும் பணத்தின் வீடாகும். எனவே இக்காலகட்டத்தில் திடீர் பண ஆதாயம் கிடைக்கும். ஆசிரியர்கள், மார்கெட்டிங் துறையில் இருப்பவர்கள், ஊடகத்தில் இருப்பவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். முக்கியமாக வியாபாரிகளுக்கு புதிய ஆர்டர்கள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும்.

தனுசு
தனுசு ராசியின் 10 ஆவது வீட்டில் லட்சுமி நாராயண யோகம் உருவாகிறது. இந்த வீடு தொழில், வணிகம் மற்றும் பணியிடத்தின் வீடாகும். இதனால் இக்காலம் தனுசு ராசிக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இக்காலகட்டத்தில் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் வருமான உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் முதலீடு செய்ய இது சிறந்த காலம். இக்காலத்தில் புதிய வணிக உறவுகள் கிடைக்கும். இது எதிர்காலத்தில் நற்பலன்களை வழங்கும்.

மகரம்
லட்சுமி நாராயண யோகத்தால் மகர ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும். ஏனெனில் இந்த யோகமானது 9 ஆவது வீட்டில் உருவாகிறது. இது அதிர்ஷ்டம் மற்றும் வெளிநாட்டு பயணத்தைக் குறிக்கும் வீடு. ஆகவே இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வணிகர்கள் தங்கள் வணிகம் தொடர்பான பயணங்களை மேற்கொள்வார்கள். திருமணமாகாதவர்களுக்கு திருமண வரன் தேடி வரும். மாணவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். தேர்வுகளை எழுதியிருப்பவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள்.



Click it and Unblock the Notifications