For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2020 ஆம் ஆண்டின் இறுதி சந்திர கிரகணம் எப்போது தெரியுமா?

2020 ஆம் ஆண்டு நிறைவு பெறும் நிலையில், இந்த ஆண்டின் இறுதி சந்திர கிரகணம் வரும் திங்கள் கிழமை அதாவது நவம்பர் 30 ஆம் நாளன்று நிகழ இருக்கிறது.

|

ஏறக்குறைய 2020 ஆம் ஆண்டு முடியும் தருவாயில் இருக்கிறது. நவம்பர் மாதம் முடிந்துவிட்டால், இந்த ஆண்டு முடிவடைய, டிசம்பர் மாதம் மட்டுமே முழுமையாக எஞ்சியிருக்கும். இவ்வாறு இந்த ஆண்டு நிறைவு பெறும் நிலையில், இந்த ஆண்டின் இறுதி சந்திர கிரகணம் வரும் திங்கள் கிழமை அதாவது நவம்பர் 30 ஆம் நாளன்று நிகழ இருக்கிறது.

Last Lunar Eclipse of 2020 Date, Time, Sutak Kaal And other details

ஏற்கனவே இந்த ஆண்டு மட்டும் 3 சந்திர கிரகணங்களும், 1 சூரிய கிரகணமும் நிகழ்ந்துவிட்டன. தற்போது இந்த ஆண்டின் இறுதி மற்றும் 4 ஆவது சந்திர கிரகணம் வரும் நவம்பர் 30 அன்று நிகழவிருக்கிறது. அதுப்போல் வரும் டிசம்பர் மாதம் இந்த ஆண்டின் இறுதி சூரிய கிரகணம் நிகழவிருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நிழல் சந்திர கிரகணம்

நிழல் சந்திர கிரகணம்

இந்த ஆண்டின் இறுதி சந்திர கிரகணம், ஒரு நிழல் சந்திர கிரகணமாக இருக்கும். அதாவது நவம்பர் 30 அன்று பிற்பகல் 1.04 மணி அளவில் தொடங்கும் சந்திர கிரகணம் மாலை 5.22 மணி அளவில் முடியும். அதனால் இந்த சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியாது. ஆகவே இது நிழல் சந்திர கிரகணமாகக் கருதப்படும். அவ்வாறு நிழல் சந்திர கிரகணமாக இருக்கப் போவதால் இதன் சூட்டக் அல்லது நூல் நேரத்தை கடைபிடிக்க வேண்டிய அவசியமில்லை. அதாவது சந்திர கிரகணங்கள் நிகழும் போது மக்கள் தவிர்க்கக்கூடிய செயல்களான குளித்தல், சாப்பிடுதல் மற்றும் சுப காரியங்கள் போன்றவற்றை இந்த சந்திர கிரகணம் நிகழும் போது தவிர்க்க வேண்டிய அவசியமில்லை.

இறுதி சந்திர கிரகணத்தின் கால அட்டவணை

இறுதி சந்திர கிரகணத்தின் கால அட்டவணை

இந்த நிழல் சந்திர கிரகணம் நவம்பர் 30 ஆம் நாள் பிற்பகல் 1.04 அளவில் தொடங்குகிறது. மாலை 3.13 அளவில் அது அதன் பாதி கால அளவிற்கு வரும். இறுதியில் மாலை 5.22 மணி அளவில் முடிந்துவிடும்.

ஒவ்வொரு சூரிய கிரகணம் அல்லது சந்திர கிரகணம் நடைபெறும் போதும், அது ஒவ்வொரு மனிதருடைய வாழ்க்கையிலும் நல்ல அல்லது கெட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று ஜோதிடர்கள் கூறுவார்கள்.

எந்தந்த நாடுகளில் சந்திர கிரகணம் தெரியும்?

எந்தந்த நாடுகளில் சந்திர கிரகணம் தெரியும்?

இந்த நிழல் சந்திர கிரகணம் ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் பசிபிக் பெருங்கடல் மற்றும் அமெரிக்காவின் ஒருசில பகுதிகளில் தெரியும். ஆனால் இந்தியாவில் இந்த சந்திர கிரகணம் கண்களுக்குத் தெரியாது. அதனால் இந்தியாவில் இதன் தாக்கம் இருக்காது.

சூட்டக் அல்லது நூல் காலம்

சூட்டக் அல்லது நூல் காலம்

கிரகணம் ஏற்படுவதற்கு முன் உள்ள நேரம் சூட்டக் அல்லது நூல் நேரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த சூட்டக் அல்லது நூல் நேரம் என்பது கிரகணம் நிகழ்வதற்கு 9 மணி நேரத்திற்கு முன்பு தொடங்கி கிரகணம் முடிவடையும் போது முடிவடைவதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர். அந்த சூட்டக் அல்லது நூல் நேரத்தில் மக்கள் சுப காரியங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வலியுறுத்தப்படுவர். ஆனால் வரவிருக்கும் சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியாத அளவிற்கு ஒரு நிழல் சந்திர கிரகணமாக இருக்கும் என்பதால் இந்திய மக்கள் சூட்டக் அல்லது நூல் நேரத்தை கடைபிடிக்க வேண்டிய அவசியமில்லை.

சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் ஆகிய இரண்டுமே வானில் நிகழும் அதிசய நிகழ்வுகளாகும். சூரியனுக்கும் சந்திரனுக்கும் நடுவில் பூமி வருகின்ற போது சூரிய வெளிச்சம் சந்திரனில் விழவிடாமல் பூமியின் நிழல் தடுத்துவிடுகிறது. இதையே சந்திர கிரகணம் என்கிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Last Lunar Eclipse of 2020 Date, Time, Sutak Kaal And other details in Tamil

Last Lunar Eclipse of 2020 Date, Time, Sutak Kaal And other details. Read on to know more...
Desktop Bottom Promotion