Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
செப்டம்பரில் லட்சுமி நாராயண யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் 5 ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
செப்டம்பரில் சுக்கிரனின் ராசி மாற்றத்திற்கு பின், கன்னி ராசியில் புதன் சுக்கிர சேர்க்கையால் லட்சுமி நாராயண யோகம் உருவாகிறது. இந்த யோகமானது நல்ல செழிப்பைக் கொண்டு வரும்.
ஜோதிடத்தில் கிரகங்களின் ராசி மாற்றம் மற்றும் சேர்க்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கிரகங்களில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்து ராசிகளையும் நேரடியாக பாதிக்கிறது. இந்த செப்டம்பர் மாதத்தில் 3 முக்கிய கிரகங்கள் ராசியை மாற்றுகின்றன. முக்கியமாக சுக்கிரன் மற்றும் புதன் சேர்க்கையால் லட்சுமி நாராயண யோகமும் உருவாகிறது. இந்த யோகம் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.

ஏற்கனவே புதன் கன்னி ராசியில் பயணித்து வருகிறார். சுக்கிரன் செப்டம்பர் மாதத்தில் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு செல்லவுள்ளார். இப்படி சுக்கிரனின் ராசி மாற்றத்திற்கு பின், கன்னி ராசியில் புதன் சுக்கிர சேர்க்கையால் லட்சுமி நாராயண யோகம் உருவாகிறது. இந்த யோகமானது நல்ல செழிப்பைக் கொண்டு வரும். இதன் யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருந்தாலும் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். இப்போது செப்டம்பர் மாதத்தில் லட்சுமி நாராயண யோகத்தால் நற்பலன்களைக் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
செப்டம்பர் மாதத்தில் உருவாகும் லட்சுமி நாராயண யோகத்தால், மேஷ ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும். முக்கியமான வணிக முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். வேலை தேடுபவர்களுக்கு மாதத்தின் தொடக்கத்தில் நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கம். உலோக வியாபாரம், பெட்ரோலிய பொருட்கள், கெமிக்கல்கள் தொடர்பான வேலையில் இருப்பவர்களுக்கு நல்ல ஆதாயம் கிடைக்கும். திருமணம் செய்ய நினைப்போருக்கு இக்காலத்தில் நற்செய்தி வந்து சேரும். இக்காலத்தில் நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.

மிதுனம்
செப்டம்பர் மாதத்தில் வரும் லட்சுமி நாராயண யோக காலத்தில் மிதுன ராசிக்காரர்களின் நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். பணியிடத்தில் சூழ்நிலை சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபமும் கிடைக்கும். பங்குச் சந்தையில் புத்திசாலித்தனமாக முடிதலீடு செய்வதால் நற்பலன்களைப் பெறலாம். மாணவர்கள் படிப்பில் முழுமையாக கவனத்தை செலுத்தி, தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.

கடகம்
லட்சுமி நாராயண யோகத்தால் கடக ராசிக்காரர்களின் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணியிடத்தில் உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவிடுவீர்கள். சொத்துக்களை விற்பதற்கு இது உகந்த காலம். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தற்போதைய முதலீடுகளில் இருந்து நல்ல பலன்களைப் பெறுவீர்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு லட்சுமி நாராயண யோகத்தால் முன்னேற்றத்திற்கான பல புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இக்காலமானது மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். உங்களின் வருமானம் அதிகரிக்கும். அதேப்போல் உங்களின் சேமிப்பும் அதிகரிக்கும். உங்களின் நிதி நிலை மேம்படும். இக்காலகட்டத்தில் உங்களின் கடன்கள் அனைத்தையும் அடைத்துவிடுவீர்கள். பணியிடத்தில் நல்ல மனநிலையை உணர்வீர்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு லட்சுமி நாராயண யோகத்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும். நீண்ட நாட்களாக சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். அன்புக்குரியவர்களால் நற்பலனைப் பெறுவீர்கள். பணியிடத்தில் உங்கள் முயற்சி மற்றும் கடின உழைப்பு உயர் அதிகாரிகளால் பாராட்டப்படும். வேலையை மாற்ற நினைத்தால், விரைவில அதற்கான வழியும் அமையும். இக்காலத்தில் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகம் இருக்கும்.



Click it and Unblock the Notifications